Phrases for Daily Use - தினசரி பயன்பாட்டிற்கான சொற்றொடர்கள்

Here you can find common English phrases used in daily conversations, fully explained with Tamil translations. These phrase lessons help learners use real-world sentences confidently in speaking and listening.

Greeting Guests

  1. Come home - வீட்டிற்கு வாருங்கள்.
  2. Please come in - தயவுசெய்து உள்ளே வாருங்கள்.
  3. Please sit down - தயவுசெய்து உட்காருங்கள்.
  4. Please be seated - தயவுசெய்து உட்காருங்கள்.
  5. Please take your seat - தயவுசெய்து தங்கள் இருக்கையில் அமருங்கள்.
  6. How are you? - நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
  7. I am fine - நான் நன்றாக இருக்கிறேன்.
  8. How is everyone at home? - வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?
  9. All are well - எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்.
  10. How is your wife? - உங்கள் மனைவி எப்படி இருக்கிறார்கள்?
  11. She is fine - அவள் நன்றாக இருக்கிறாள்.
  12. She is Ok - அவள் நன்றாக இருக்கிறாள்.
  13. How are your children? - உங்கள் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்?
  14. They are doing well - அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.
  15. What are they doing? - அவர்கள் என்ன செய்கிறார்கள்?
  16. They are studying - அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
  17. What do you do? - நீங்கள் என்ன செய்கிறீர்கள்? (தொழில்/வேலை)
  18. What are you doing? - நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
  19. I am working in a Bank - நான் ஒரு வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
  20. I am watching TV - நான் டீவி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
  21. Hai! How do you do? - ஹாய்! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
  22. Hai! I am doing well - ஹாய்! நான் நன்றாக இருக்கிறேன்.
  23. Hai! How is life? - ஹாய்! வாழ்க்கை எப்படி இருக்கிறது?
  24. It is fine - அது மிக நன்றாக இருக்கிறது.
  25. It’s not bad - அது மோசமில்லை.
  26. It’s very difficult - அது மிகவும் கஷ்டமாக உள்ளது.
  27. Anything special? - ஏதாவது விசேஷமா?
  28. Nothing special - விசேஷம் ஒன்றுமில்லை.
  29. Something special - ஏதோ விசேஷம்.
  30. Why are you looking sad? - ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்?
  31. What happened? - என்ன நடந்தது?
  32. What is happening? - என்ன நடக்கிறது?
  33. Had your lunch? - மதிய உணவு சாப்பிட்டீர்களா?
  34. Have your lunch first - முதலில் மதிய உணவு சாப்பிடுங்கள்.
  35. Take some more - இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளுங்கள்.
  36. Enough - போதும்.

Greeting guests - விருந்தினரை வரவேற்றல்

🎧 Listen to the Common Daily Phrases

To ask what you want?

  1. What do you want? - உங்களுக்கு என்ன வேண்டும்?
  2. I want a cup of coffee - எனக்கு ஒரு கப் காபி வேண்டும்.
  3. I want that - எனக்கு அது வேண்டும்.
  4. I want some more - எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்.
  5. I want to see you - நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன்.
  6. I want to see the Manager - நான் மேலாளரைப் பார்க்க வேண்டும்.
  7. I don’t want anything - எனக்கு எதுவும் வேண்டாம்.

To ask what you want? - உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்க

🎧 Listen to the Common Daily Phrases

To ask Do you know?

  1. Do you know one thing? - உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
  2. Do you know about Corona? - உங்களுக்கு கொரோனா பற்றித் தெரியுமா?
  3. Do you know that? - உங்களுக்கு அது தெரியுமா?
  4. No. I don’t know anything - இல்லை. எனக்கு எதுவும் தெரியாது.
  5. Do you know "Programming in Java"? - உனக்கு "Programming in Java" தெரியுமா?
  6. Yes, I do - ஆம், எனக்குத் தெரியும்.
  7. No, I don't - இல்லை, எனக்குத் தெரியாது.
  8. Do you know Mr. Ram? - உங்களுக்கு மிஸ்டர் ராமைத் தெரியுமா?
  9. Yes, I know him - ஆமாம், எனக்கு அவரைத் தெரியும்.
  10. No, I don’t know him - இல்லை, எனக்கு அவரைத் தெரியாது.

To ask Do you know? - உங்களுக்கு தெரியுமா என கேட்க

🎧 Listen to the Common Daily Phrases

To ask the price

  1. I want to buy a laptop - நான் ஒரு மடிக்கணினி வாங்க விரும்புகிறேன்.
  2. How much is this laptop? - இந்த மடிக்கணினியின் விலை எவ்வளவு?
  3. What is the price? - விலை என்ன?
  4. How much is this? - இது எவ்வளவு?
  5. How much in total? - மொத்தம் எவ்வளவு?

To ask the price - விலை கேட்க

🎧 Listen to the Common Daily Phrases

To ask Location and Direction

  1. Where are you? - நீ எங்கே இருக்கிறாய்?
  2. I am in the garden - நான் தோட்டத்தில் இருக்கிறேன்.
  3. Where is mother? - அம்மா எங்கே?
  4. Mother is in Chennai - அம்மா சென்னையில் இருக்கிறார்கள்.
  5. Where is T.Nagar? - டி.நகர் எங்கே இருக்கிறது?
  6. How to go to T.Nagar? - டி.நகருக்கு எப்படிப் போக வேண்டும்?
  7. Go this way - இந்த வழியாகப் போகவும்.
  8. Go straight - நேராகப் போகவும்.
  9. Come with me - என்னுடன் வாருங்கள்.
  10. I will go with my father - நான் என்னுடைய அப்பாவுடன் போவேன்.
  11. I went with my father last month - போன மாதம் நான் என்னுடைய அப்பாவுடன் போனேன்.
  12. I'm new to this area - நான் இந்தப் பகுதிக்குப் புதியவன்.
  13. Where is the museum? - அருங்காட்சியகம் எங்கே இருக்கிறது?
  14. How do I get to the museum, please? - அருங்காட்சியகத்திற்கு எப்படி செல்வது?
  15. Is it far from here? - இங்கிருந்து ரொம்ப தூரமா?
  16. It's next to the bank - அது வங்கிக்குப் பக்கத்தில் இருக்கிறது.
  17. Is this the right way to the bank? - வங்கிக்குச் செல்வதற்கு இது சரியான வழியா?
  18. Take the second right - இரண்டாவது வலதுபுறத்தில் திரும்புங்கள்.
  19. Turn left at the corner - மூலையில் இடதுபுறம் திரும்புங்கள்.
  20. You'll see a big red building on your right - உங்கள் வலதுபுறத்தில் ஒரு பெரிய சிவப்பு கட்டிடத்தைக் காண்பீர்கள்.
  21. Got it. Thanks - புரிந்தது. நன்றி.

To ask Location and Direction - இடம், வழி கேட்க

🎧 Listen to the Common Daily Phrases

To say Goodbye

  1. I have got to get going now - சரி, நான் இப்போது போக வேண்டும்.
  2. I have to go now - சரி, நான் இப்போது போக வேண்டும்.
  3. It was nice meeting you - உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
  4. Catch you later - பிறகு சந்திப்போம்.
  5. See you later - பிறகு பார்க்கலாம்.
  6. Bye. Take care - பை! கவனமாக இருக்கவும்.

To say Goodbye -

🎧 Listen to the Common Daily Phrases

Common Mistakes - தவிர்க்க வேண்டிய தவறுகள்

Frequently Asked Questions (FAQ)

1. How do I welcome guests in English politely?

You can use polite expressions such as "Please come in", "Please be seated", or "Please take your seat". To check on their well-being, ask "How are you?" or "How is everyone at home?"

2. What is the difference between "What do you do?" and "What are you doing?"

"What do you do?" asks about a person's profession, job, or occupation (e.g., "I work in a bank").

"What are you doing?" asks about the action happening right now in the present continuous moment (e.g., "I am watching TV").

3. How can I ask for directions in simple English?

Common ways to ask for directions include:

  • "How do I get to [place name]?"
  • "Is this the right way to [place name]?"
  • "Where is [place name] located?"

Summary (English + Tamil explanation):

You have now learned many useful English phrases that are daily used in everyday conversation. Practising these sentences will help you become more fluent and confident when speaking English.

இப்பக்கத்தில் தினசரி பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் நீங்கள் கற்றுக்கொண்டுள்ளீர்கள். இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.

Practice tips

Keep practising by saying the phrases out loud and using them in real life situations. Your command over daily phrases forms a solid base for more advanced English skills.

People also learn

👉 Daily English phrases - COME(வா)

👉 Positive, Negative and Question sentences - WORK(வேலை)

👉 What the teenagers are really like?

👉 Tourist information desk conversation

👉 கதை படியுங்கள்:
வேலைக்காரன் கதை in English