Common Phrases - பொதுவான சொற்றொடர்கள்

go - போ - போகவும் - போங்கள்

go - செல் - செல்லவும் - செல்லுங்கள்

Tenses of go
Present Tense - நிகழ் காலம் Past Tense - இறந்த காலம் Past participle - முடிவுற்ற வினையெச்சம் Continuous - தொடர் வினையெச்சம்
go - போ went - போனேன் gone - போயிரு- going- போய்க் கொண்டிரு-
gone - போயிரு- மற்றும் going- போய்க் கொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெரும்.
  1. You go - நீங்கள் போகவும்.
  2. I go - நான் போகிறேன்.
  3. I went - நான் போனேன்.
  4. I will go - நான் போவேன்.
  5. I shall go - நான் போவேன்.
  6. We shall go - நாம் போவோம்.
  7. He will go - அவர் போவார்.
  8. They will go - அவர்கள் போவார்கள்.
  9. I am going - நான் போய்க் கொண்டிருக்கிறேன்.
  10. I was going - நான் போய்க் கொண்டிருந்தேன்.
  11. I will be going - நான் போய்க் கொண்டிருப்பேன்.
  12. I have gone - நான் போயிருக்கிறேன்.
  13. I had gone - நான் போயிருந்தேன்.
  14. I would have gone - நான் போயிருந்திருப்பேன்.
  15. I have been going - நான் போய்க் கொண்டிருந்திருக்கிறேன்.
  16. I had been going - நான் போய்க் கொண்டிருந்திருந்தேன்.
  17. I would have been going - நான் போய்க் கொண்டிருந்திருப்பேன்.
  18. You have to go - நீங்கள் போகவேண்டும்.
  19. You have to go to Chennai - நீங்கள் சென்னைக்குப் போகவேண்டும்.
  20. You go with him - நீங்கள் அவருடன் போங்கள்.
  21. You too go with him - நீங்களும் அவருடன் போங்கள்.
  22. You go to Chennai - நீங்கள் சென்னைக்குப் போகவும்.
  23. He goes to pay EB Bill - அவர் மின்சாரக் கட்டணம் செலுத்தப் போகிறார்.
  24. You should go - நீங்கள் கட்டாயம் போகவேண்டும்.
  25. You must go - நீங்கள் அவசியம் போகவேண்டும்.
  26. You shouldn’t go - நீங்கள் கட்டாயம் போகக் கூடாது.
  27. You don’t go there - நீ அங்கே போகாதே.
  28. Let me go - என்னைப் போகவிடுங்கள்.
  29. Go home - வீட்டிற்குப் போ.
  30. Let’s go - நாம் போகலாம்.
  31. Go fast - வேகமாகப் போகவும்.
  32. Don’t go fast - வேகமாகப் போகாதே.
  33. Go slowly - மெதுவாகப் போ.
  34. Go to your place - உங்களுடைய இடத்திற்;குப் போங்கள்.
  35. You should go to school daily - தினமும் நீ பள்ளிக்குச்; செல்லவேண்டும்.
  36. You must go - நீங்கள் அவசியம் போகவேண்டும்.
  37. Should I go? - நான் கட்டாயம் போகவேண்டுமா?
  38. Shall I go to market? - நான் சந்தைக்குப் போகட்டுமா?
  39. Do you go to market? - நீ சந்தைக்குப் போகிறாயா?
  40. Where does she go? - அவள் எங்கு போகிறாள்?
  41. She goes to College - அவள் கல்லூரிக்குப் போகிறாள்.
  42. Go to bank - வங்கிக்குப் போ.
  43. Ok. I go to bank - சரி. நான் வங்கிக்குப் போகிறேன்.
  44. Shall I go to bank after finishing this work? - நான் இந்த வேலையை முடித்தப் பிறகு வங்கிக்குப் போகட்டுமா?
  45. I shall go to bank after finishing this work - நான் இந்த வேலையை முடித்தப் பிறகு வங்கிக்குப் போவேன்.
  46. I won’t go to school - நான் பள்ளிக்கூடம் போக மாட்டேன்.
  47. I can’t go to bank - என்னால்; வங்கிக்குப் போக முடியாது.
  48. May I go? - நான் போகலாமா?
  49. Where you want to go? - நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்?
  50. May I go inside? - நான் உள்ளே போகலாமா?
  51. I have to go to T.Nagar - நான் டி.நகர் செல்ல வேண்டும்.
  52. You may go home - நீங்கள் வீட்டிற்குப் போகலாம்.
  53. You can go alone - உன்னால் தனியாகப் போக முடியும்.
  54. You can go to Space - உன்னால் விண்வெளிக்குப் போக முடியும்.
  55. You can’t go - உன்னால் போக முடியாது.
  56. You can’t go anywhere - உன்னால் எங்கும் போக முடியாது.
  57. You can’t even go to Chennai - உன்னால் சென்னைக்குக் கூடப் போக முடியாது.
  58. How can you go to US? - உன்னால் எப்படி யு.எஸ் போக முடியும்?
  59. You can’t go to US - உன்னால் யு.எஸ் போக முடியாது.
  60. To go to US you need lot of money - யு.எஸ் போக உனக்கு நிறைய பணம் தேவை.
  61. I have to go - நான் போக வேண்டும்.
  62. I have to go now - இப்பொழுது நான் போக வேண்டும்.
  63. You have to go now itself - நீங்கள் இப்பொழுதே போக வேண்டும்.
  64. Where do you go? - நீங்கள் எங்கே போகிறீர்கள்?
  65. Where do they go? - அவர்கள் எங்கே போகிறார்கள்?
  66. Where does he go? - அவர் எங்கே போகிறார்?
  67. Where does it go? - அது எங்கே போகிறது?
  68. All of them go to their home - அவர்கள் எல்லோரும் அவர்களுடைய வீட்டிற்குச் செல்கிறார்கள்.
  69. Did you go? - நீ போனாயா?
  70. No. I didn’t go - இல்லை. நான் போகவில்லை.
  71. Didn’t you go? - நீ போகவில்லையா?
  72. Yes. I didn’t go - ஆமாம். நான் போகவில்லை.
  73. Why didn’t you go? - நீ ஏன் போகவில்லை?
  74. Yes. I went there - ஆமாம். நான் அங்கு போனேன்.
  75. I went to meet the Accountant - நான் கணக்காளரைச் சந்திக்கச் சென்றேன்.
  76. I went to see my Uncle - நான் என்னுடைய மாமாவைப் பார்க்கச் சென்றேன்.
  77. When did you go?- நீங்கள் எப்பொழுது போனீர்கள்?
  78. I went yesterday - நான்; நேற்றுப் போனேன்.
  79. Why did you go? - நீங்கள் ஏன் போனீர்கள்?
  80. I went to consult the Doctor - நான் மருத்துவரைக் கலந்தாலோசிக்கப் போனேன்.
  81. With whom you went to see the Doctor? - யாருடன் நீங்கள் மருத்துவரைப்; பார்க்கப் போனீர்கள?
  82. I went with my husband - நான் எனது கணவருடன் போனேன்.
  83. How did you go? - நீங்கள் எப்படிப் போனீர்கள்?
  84. We went in our car - நாங்கள் எங்கள் மகிழுந்தில் போனோம்.
  85. Where did you go? - நீங்கள் எங்கு போனீர்கள்?
  86. We went to our friend’s home - நாங்கள் எங்கள் நண்பரின் வீட்டிற்குச்; சென்றோம்.
  87. Where shall I go? - நான் எங்கே போவேன்?
  88. Where would you go? - நீங்கள் எங்கே போவீர்கள்?
  89. I would go to my home - நான் என்னுடைய வீட்டிற்குப் போவேன்.
  90. How would you go? - நீங்கள் எப்படிப் போவீர்கள்?
  91. I will go by bus - நான் பேருந்தில் போவேன்.
  92. Where are you going? - நீங்கள் எங்கு போய்க் கொண்டிருக்கிறீர்கள்?
  93. Are you going to market? - நீங்கள் சந்தைக்குப் போய்க் கொண்டிருக்கிறீர்களா?
  94. I am going to buy vegetables - நான் காய்கறி வாங்கப் போய்க் கொண்டிருக்கிறேன்.
  95. Where are you going at this time? - இந்த நேரத்தில் நீ எங்கே போகிறாய்?
  96. I’m going to buy a car - நான் ஒரு கார் வாங்கப்; போகிறேன்.
  97. I am going to Taluk office - நான் தாலுகா அலுவலகத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.
  98. I’m going. Are you coming or not? - நான் போகிறேன். நீ வருகிறாயா? இல்லையா?
  99. I was going to see my mother - நான் என்னுடைய அம்மாவைப் பார்க்;கப் போய்க் கொண்டிருந்தேன்.
  100. We were going to Anna Nagar - நாங்கள் அண்ணா நகர் போய்க் கொண்டிருந்தோம்.
  101. This time next week, I will be going to Delhi - அடுத்த வாரம் இந்நேரம், நான் டெல்லி போய்க் கொண்டிருப்பேன்.
  102. Go and see your mother - உங்கள் அம்மாவைப் போய்ப் பாருங்கள்.
  103. Yesterday I went to see - நேற்று நான் பார்க்கப் போனேன்.
  104. Tomorrow I will go to see my mother - நாளை நான் என்னுடைய அம்மாவைப் பார்க்கப் போவேன்.
  105. I won’t go to see - நான் பார்க்கப் போக மாட்டேன்.
  106. She has gone to Madurai - அவள்/அவர்கள் மதுரைக்குப் போயிருக்கிறார்கள்.
  107. She will go to US next month - அடுத்த மாதம் அவர்கள் அமெரிக்காவுக்குப் போவார்கள்.
  108. Will you go with her? - நீ அவர்களுடன் போவாயா?
  109. I want to go with her - நான் அவளுடன் /அவர்களுடன் போக விரும்புகிறேன்.
  110. But I can’t go now - ஆனால் என்னால் இப்பொழுது போக இயலாது.
  111. Have you gone to US? - நீ யுஎஸ் போயிருக்கிறாயா?
  112. Yes. I had gone last year - ஆமாம். போன வருடம் நான் போயிருந்தேன்.
  113. How many times have you gone? - நீ எத்தனை முறை போயிருக்கிறாய்?
  114. I have gone only once - நான் ஒரு முறை தான் போயிருக்கிறேன்.
  115. What for you went? - எதற்காக நீ போனாய்?
  116. I went to see my sister - நான் என்னுடைய சகோதரியைப் பார்க்கப் போனேன்.
  117. How you went? - நீங்கள் எப்படிப் போனீர்கள்.
  118. How did she go? - அவள் எப்படிப் போனாள்?
  119. I went by flight - நான் விமானத்தில் போனேன்.
  120. When did you go? - நீங்கள் எப்பொழுது போனீர்கள்?
  121. I went last year - நான் போன வருடம் போனேன்.
  122. When had you gone? - நீ எப்பொழுது போயிருந்தாய்?
  123. I had gone last year - நான் போன வருடம் போயிருந்தேன்.
  124. With whom you went? - நீங்கள் யாருடன் போனீர்கள்?
  125. I went with my mother - நான் என்னுடைய அம்மாவுடன் போனேன்.
  126. I went alone - நான் தனியாகப் போனேன்.
  127. I went with my family - நான் எனது குடும்பத்துடன் போனேன்.
  128. My father didn’t allow me to go - என்னுடைய அப்பா என்னைப் போவதற்கு அனுமதிக்கவில்லை.
  129. Otherwise I would have gone to America - இல்லையெனில் நான் அமெரிக்காவுக்குப் போயிருப்பேன்.
  130. Had you gone to Australia? - நீங்கள் ஆஸ்ட்ரேலியாவுக்குப் போயிருந்தீர்களா?
  131. Yes. I had gone - ஆமாம். நான் போயிருந்தேன்.
  132. No. I never went - இல்லை. நான் ஒருபோதும் போகவில்லை.
  133. But I have gone to London once - ஆனால் நான் லண்டனுக்கு ஒரு முறை போயிருக்கிறேன்.
  134. I have been going every week - நான் ஒவ்வொரு வாரமும் போய்க்கொண்டிருந்திருக்கிறேன்.
  135. She had been going every week - அவள்; ஒவ்வொரு வாரமும் போய்க்கொண்டிருந்திருந்தாள்.
  136. We would have been going every week - நாங்கள்; ஒவ்வொரு வாரமும் போய்க்கொண்டிருந்திருப்போம்.
  137. Now, I am going home. Bye - இப்பொழுது, நான் வீட்டிற்குப் போகிறேன் / போய்க் கொண்டிருக்கிறேன். பை.
  138. Try to make sentences using the verb wash

    Present Tense - நிகழ் காலம் Past Tense - இறந்த காலம் Past participle - முடிவுற்ற வினையெச்சம் Continuous - தொடர் வினையெச்சம்
    wash - கழுவு washed - கழுவினேன் washed - கழுவியிரு- washing- கழுவிக் கொண்டிரு-


    Next: Phrases - Say - சொல்