Interview - நேர்காணல்

நேர்காணல் என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட உரையாடலாகும், இதில் ஒரு நபர் தகவல்களைச் சேகரிக்க கேள்விகள் கேட்கிறார், இது பொதுவாக பணியமர்த்தல் (வேலை நேர்காணல்கள்) அல்லது பத்திரிகைக்கு பயன்படுத்தப்படுகிறது, இதில் நேர்காணல் செய்பவர் மற்றும் நேர்காணலில் பங்கேற்பவர் பொருத்தம், திறன்கள், பங்கு அல்லது தற்போதைய நிகழ்வுகள் போன்ற தலைப்புகளைப் பற்றி விவாதிப்பார்கள். இதற்கு நிறுவனத்தை ஆராய்வது, பதில்களைப் பயிற்சி செய்வது மற்றும் வலுவான தோற்றத்தை ஏற்படுத்த பொருத்தமான திறன்களைக் காட்டுவது போன்ற தயாரிப்பு தேவைப்படுகிறது.

இந்தப் பக்கத்தில் பயிற்சிக்கான பல நேர்காணல்கள் உள்ளன, அவற்றில் உதவி பொறியாளர் பதவிக்கான நேர்காணல், விளையாட்டு ஆளுமைகளை நேர்காணல் செய்தல், டீனேஜர்களை நேர்காணல் செய்தல் மற்றும் பல நேர்காணல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

An interview is a structured conversation where one person asks questions to gather information, most commonly used for hiring (job interviews) or journalism, involving an interviewer and interviewee discussing suitability, skills, or topics like a career, role, or current events. It requires preparation like researching the company, practicing answers, and showing relevant abilities to make a strong impression.

This page includes many interviews for practice including, Interview for the post of Assistant Engineer, Interviewing Sports Personalities, Interviewing Teenagers and more.

1.Interview for the post of Assistant Engineer - உதவிப் பொறியாளர் பதவிக்கான நேர்காணல்.

1.Interview for the post of Assistant Engineer - உதவிப் பொறியாளர் பதவிக்கான நேர்காணல்.

🎧 Listen - கேட்கவும்
Finished. Click ▶ to replay.
HR Tell me about yourself. தங்களைப் பற்றிக் கூறவும்.
Ram Hello! My name is Ram and I’ve worked as a Junior Engineer for 5 years in Tata Solar. ஹலோ ! எனது பெயர் ராம். நான் டாடா சோலார் நிறுவனத்தில் 5 வருடங்களாக இளநிலை பொறியாளராக பணியாற்றியுள்ளேன்.
Sekar Good morning sir.I’m Sekar. I have studied BE at MK University. I have some experience in electric power transmission. காலை வணக்கம் ஐயா. நான் சேகர். எம்கே பல்கலைகழகத்தில் பீஈ படித்துள்ளேன். எனக்கு மின் ஆற்றல் பரிமாற்றத்தில் கொஞ்சம் அனுபவம் உள்ளது.
HR What do you know about this company/organization? இந்த நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும?
Ram I know that you’re one of the biggest Solar Power Producer in India. நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூரிய சக்தி உற்பத்தியாளர்களில் ஒருவர் என்பது எனக்குத் தெரியும்.
HR Why did you decide to apply for this position? இந்த பதவிக்கு ஏன் விண்ணப்பிக்க முடிவு செய்தீர்கள்?
Ram I’m interested in sustainability and renewable energy like Solar and Wind Energy. சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்தி போன்ற நிலைத்தன்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஆர்வமாக உள்ளேன்.
HR What are your strengths? உங்கள் பலம் என்ன?
Ram I am good in Simulation. I am a team player. நான் சிமுலேசனில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறேன். நான் ஒரு குழு வீரர் (குழுவில் பணிபுரிய ஏற்றவள்).
HR What are your weaknesses? உங்கள் பலவீனம் என்ன ?
Ram Well, I’m a fresh graduate. So my biggest weakness is the lack of work experience. சரி , நான் ஒரு புதிய பட்டதாரி. எனவே வேலையில் அனுபவம் இல்லாததே என்னுடைய பலவீனம்.
HR What skills are you currently working on improving? நீங்கள் தற்போது என்ன திறன்களை மேம்படுத்திக் கொண்டருக்கிறீர்கள்?
Ram I have been learning Embedded C and I've been focusing on improving my project management skills. நான் எம்படடு சீ கற்று வருகிறேன். மேலும் எனது திட்ட மேலாண்மை திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறேன்.
HR What are your career goals? உங்களின் தொழில் இலக்கு என்ன?
Ram In the short term, I want to become an expert in my role. I will continuously improve my skills to contribute to team projects. My long-term plan, I want to move into a leadership position where I can drive innovation in the field. குறுகிய காலத்தில் , எனது வேலையில் நிபுணராக விரும்புகிறேன். குழு திட்டங்களுக்கு பங்களிக்க எனது திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வேன். எனது நீண்டகாலத் திட்டம் , தலைமை பொறுப்பை அடைவது. அங்கு என்னால் இந்தத் துறையில் புதுமைகளைப் புகுத்த முடியும்.
HR Why should we hire you? உங்களை நாங்கள் ஏன் (வேலைக்கு ) நியமிக்க வேண்டும்?
Ram I have the right skill set for the job. என்னிடம் வேலைக்குத் தேவையான திறன்கள் உள்ளன.
HR What are your salary expectation? நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம் என்ன?
Ram My salary expectation is 12L per annum. நான் எதிர்பார்க்கும் சம்பளம் ஒரு வருடத்திற்கு 12 இலட்சம்.
HR Do you have any questions for us? எங்களிடம் கேட்க ஏதேனும் கேள்விகள் உள்ளதா?
Ram Yes. Do you have training programs available to employees? ஆமாம். பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் உங்களி (நிறுவனத்தி )டம் உள்ளதா?
HR Yes. ஆமாம்.
HR Ok. Thankyou. சரி. நன்றி.
Ram Thank you for considering my application. I look forward to potentially joining your team to work. என்னுடைய விண்ணப்பத்தை பரிசீலித்ததற்கு நன்றி. தங்கள் குழுவில் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்திருக்கிறேன்.

2. Interviewing the Sports Personalities - விளையாட்டு பிரமுகர்களை நேர்காணல் செய்தல்

2.1 Meaning - பொருள்
compete போட்டியிடு
athletes விளையாட்டு வீரர்
slim மெலிந்த
for ஆக
carbohydrates கார்போஹைட்ரேட்
back மீண்டும்
about பற்றி
need தேவை
meals உணவு
but ஆனால்
international சர்வதேச
hungry பசி
with உடன்
protein புரதம்
tell கூறு
2. Interviewing the Sports Personalities - விளையாட்டு பிரமுகர்களை நேர்காணல் செய்தல்

🎧 Listen - கேட்கவும்
Finished. Click ▶ to replay.

2.2 Interview - நேர்காணல்

Anchor Welcome back to the sports program. We are at the International Games in Chennai. With us in the studio, we have two athletes Alice from Australia and Shone from Ireland. They're going to compete tomorrow. But today they're going to talk to us about the training program. Let’s start with you Alice. You are a gymnast. விளையாட்டு நிகழ்ச்சிக்குத் தங்களை மீண்டும் வரவேற்கிறோம். நாங்கள் சென்னையில் உள்ள சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சியில் இருக்கிறோம். ஸ்டுடியோவில் எங்களுடன், இரண்டு விளையாட்டு வீரர்கள், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலைஸ் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த ஸோன் உள்ளனர். அவர்கள் நாளை போட்டியிட உள்ளனர். ஆனால் இன்று தங்களுடைய பயிற்சித் திட்டத்தைப் பற்றி எங்களுடன் பேச உள்ளனர். அலைஸ் உங்களிடமிருந்து ஆரம்பிப்போம். நீங்கள் ஒரு ஜிம்னாஸ்ட்.
Alice Yes that's right. ஆம். அது சரி.
  Can you tell us about your training program? தங்களுடைய பயிற்சித் திட்டத்தைப் பற்றி எங்களிடம் கூற முடியமா?
Alice Well, I have to practice seven hours a day that's every day except Sunday. நல்லது. ஞாயிற்றுக்கிழமை தவிர ஒவ்வொறு நாளும் நான் ஏழு மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும்.
Anchor That is a lot of training. I suppose over training makes you hungry அது அதிகப்படியான பயிற்சி. அதிகப்படியான பயிற்சி உங்களுக்கு பசியை உண்டாக்கும் என நினைக்கிறேன்.
Alice Yes really hungry and I love food. But it's very important for me to stay slim. ஆம். உண்மையாகவே பசி (உண்டாக்கும்) மேலும் நான் உணவை விரும்புகிறேன். ஆனால் நான் ஒல்லியாக இருப்பது மிகவும் முக்கியம்.
Anchor So, Do you have a strict diet? எனவே, உங்களுக்கு கடுமையான உணவுமுறை இருக்கிறதா?
Alice Yes I do. I mustn’t eat more than one thousand five hundred Calories a day. Most women need about two thousand calories a day. ஆமாம். எனக்கு இருக்கிறது. நான் ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐநூறு கலோரிகளுக்கு மேல் சாப்பிடக் கூடாது. பெரும்பாலன பெண்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டாயிரம் கலோரிகள் தேவைப்படுகிறது.
Anchor Do you eat three meals a day நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுகிறீர்களா?
Alice Yes. Three small meals. But I mustn’t eat anything after five o'clock in the afternoon. ஆமாம். மூன்று சிறிய உணவுகள். ஆனால் மதியம் ஐந்து மணிக்கு மேல் நான் எதையும் சாப்பிடக்கூடாது.
Anchor What kind of things do you eat? நீங்கள் என்ன வகையான பொருட்களை (உணவுகளை) சாப்பிடுகிறீர்கள்?
Alice I have to eat protein for lunch. So I usually have fish. I eat a lot of fruit and vegetables but not many carbohydrates. And no chocolates. That’s all it. நான் மதிய உணவிற்கு புரதம் சாப்பிட வேண்டும். எனவே நான் வழக்கமாக மீன் வைத்திருப்பேன். நான் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுகிறேன். ஆனால் நிறைய கார்போ ஹைட்ரேட்ஸ் இல்லை. மேலும் சாக்லேட்ஸ் இல்லை. அது அவ்வளவு தான்.
Anchor No Well. Good luck Alice. Thanks for talking with us. Let’s talk to Shone now. Shone, you are trained athlete. Do you eat three times a day? இல்லை. நல்லது. வாழ்த்துக்கள் அலைஸ். எங்களுடன் பேசியதற்கு நன்றி. இப்போது ஸோனிடம் பேசலாம். ஸோன், நீங்கள் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர். நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுகிறீர்களா?
Shone No. I have to eat six times a day. இல்லை. நான் ஒரு நாளைக்கு ஆறு வேளை சாப்பிடவேண்டும்.
Anchor Six meals !!!! ஆறு வேளை (உணவு)!!!!
Shone Yes. I have to eat about four thousand calories a day. Before the race I have to eat lot of carbohydrates like Pasta and rice. ஆமாம். நான் ஒரு நாளைக்கு ஆயிரத்து நாலாயிரம் கலோரிகள் சாப்பிட வேண்டும். பந்தயத்திற்கு முன் நான் பாஸ்தா மற்றும் அரிசி போன்ற நிறைய ஹார்போஹைட்ரேட் (உணவு) களை சாப்பிடவேண்டும்.
Anchor So your diet is very different from Alice. எனவே உங்கள் உணவு முறை அலைஸின் உணவு முறையிலிருந்து வேறுபட்டது.
Shone Yes. In fact I mustn’t eat protein before race. Because it's too heavy. That’s it. ஆமாம். உண்மையில் நான் பந்தயத்திற்கு முன் புரதம் சாப்படக்கூடாது. ஏனெனில் அது மிகவும் கனமானது. அவ்வளவு தான்.
Anchor What you drink? நீங்கள் என்ன குடிக்கிறீர்கள்?
Shone Well. Of course I have to drink lot of water. But I mustn’t drink coffee or tea. நல்லது. நிச்சயமாக நான் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.ஆனால் நான் காபி, டீ குடிக்கக் கூடாது.
Anchor Well. It is a big day tomorrow. Will you go to bed early tonight? சரி. நாளை ஒரு பெரிய (முக்கியமான) நாள். இன்றிரவு நீங்கள் சீக்கிரம் தூங்கச் செல்வீர்களா?
Shone Oh Yes. I think it's a good idea to sleep eight or more hours before the race. ஓ ஆமாம். பந்தயத்திற்கு முன் எட்டு மணி நேரம் அல்லது அதற்கு மேல் தூங்குவது நல்லது என நினைக்கிறேன்.
Anchor Well. Thank you very much for speaking to us. Good luck to both of you. நல்லது. எங்களுடன் பேசியதற்கு மிக்க நன்றி. தங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

3.Teenage Doings And Ambitions - பதின்ம வயது செய்கைகள் மற்றும் லட்சியங்கள்

3.1 Meaning - பொருள்
ambitious லட்சியவாதி
ask கேள்
involved சம்பந்தபட்ட
arrogant திமிர்பிடித்த
politician அரசியல்வாதி
lazy சோம்பேறி
generation தலைமுறை
sensible விவேகமான
teenagers இளைஞர்கள்
journalist பத்திரிக்கையாளர்
keen முனைப்புடன்
irresponsible பொறுப்பற்ற
lot நிறைய
passionate பேரார்வம்
caring அக்கறை
say சொல்
optimistic நம்பிக்கை
ambition லட்சியம்
in fact உண்மையில்
dishonest நேர்மையற்ற
disappoint ஏமாற்று
miserable பரிதாபகரமான
qualities குணங்கள்
hardworking உழைப்பாளி

3.2 Interview - நேர்காணல்

Inter viewer (iv) The young ambitious and optimistic. We meet three teenagers and ask them about theirs dreams and ambitions. So Mala, What do you want to be? இலட்சியமும் நம்பிக்கையும் கொண்ட இளம் (பருவத்தினர்). நாங்கள் மூன்று இளம் பருவத்தினரை சந்தித்து அவர்களுடைய கனவுகள் மற்றும் இலட்சியங்கள் பற்றி கேட்கிறோம். மாலா, நீ என்னவாக விரும்புகிறாய்?
Mala I want to be a journalist. நான் ஒரு பத்திரிக்கையாளராக விரும்புகிறேன்.
iv Are your parents involved in journalism? உன்னுடைய பெற்றோர் பத்திரிக்கைத் துறையில் ஈடுபாடு உள்ளவர்களா?
Mala No. not at all. In fact journalists are pretty unpopular in my house. My father is interested in the news. But he is very keen on the journalists. He thinks, most of them arrogant, dishonest and irresponsible. இல்லை. ஒருபோதும் இல்லை. பத்திரிக்கையாளர்கள் என் வீட்டில் பிரபலம் இல்லை. என் தந்தைக்கு செய்திகளில் ஆர்வம் உண்டு. ஆனால் பத்திரிக்கையாளர்கள் மீது மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவர்களில் பெரும்பாலோர் திமிர்பிடித்தவர்கள், நேர்மையற்றவர்கள் மேலும் பொறுப்பற்றவர்கள் என அவர் நினைக்கிறார்.
iv Gokul, Why do you want to be a politician? டேவிட், நீ ஏன் அரசியல்வாதியாக விரும்புகிறாய்?
Gokul I'm really disappointed with our government. Young people have a lot to say, but the politicians don't listen to them. They just think teenagers are lazy and miserable. நான் நமது அரசாங்கத்தின் மீது மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். இளைஞர்கள் சொல்வதற்கு நிறைய விசயங்கள் இருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகள் அவைகளை கேட்பதில்லை. பதின்மவயதினர் சோம்பேறிகள் மற்றும் பரிதாபகரமானவர்கள் என அவர்கள் நினைக்கின்றனர்.
iv Why do you think, you could be a politician? நீ அரசியல்வாதியாக முடியும் என ஏன் நினைக்கிறாய்?
Gokul I'm passionate about my country. I also have the right character. I’m not at all shy. In fact, I am very out going and I am good at public speaking. I am only sixteen now. So I'm very inexperienced but I'm serious about politics. நான் எனது நாட்டைப்பற்றி ஆர்வமாக இருக்கிறேன். மேலும் எனக்கு சரியான கேரக்டர் (குணம்) உள்ளது. எனக்கு கூச்ச சுபாவம் இல்லை. நான் வெளியே போக வல்லவன். பொதுக்கூட்டத்தில் நல்ல பேசுபவன். எனக்கு இப்பொழுது பதினாறு வயது தான். ஆதலால் எனக்கு அனுபவம் இல்லை. ஆனால் நான் அரசியலில் தீவிரமாக உள்ளேன்.
iv Ram, Why do you want to be a Surgeon? ராம், நீ ஏன் அறுவை சிகிச்சை நிபுணராக விரும்புகிறாய்?
Ram Well, many surgeons in UK are men. And I think that’s unfair and wrong in the 21st Century. I think my generation is responsible for getting more women into important jobs. நல்லது. யுகே-யிலுள்ள பெரும்பாலான அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆண்கள். 21-ம் நூற்றாண்டில் அது நியாயமற்றது மற்றும் தவறானது என நான் நினைக்கிறேன். முக்கியமான வேலைகளில் அதிகமான பெண்கள் சேர்வது எனது தலைமுறையினரின் பொறுப்பு என நான் நினைக்கிறேன்.
iv What special qualities, do you think you need to be a surgeon? அறுவை சிகிச்சை நிபுணராவதற்கு என்ன சிறப்புத் தகுதி தேவை என நீ நினைக்கிறாய்?
Ram I think I need to be caring, sensible and very hard working. நான் அக்கறையுடனும், விவேகத்துடனும், கடின உழைப்பாளியாகவும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

Listening Practice

இந்த நேர்காணலில் உள்ள உரையாடலைக் கேட்டு தங்களின் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்துங்கள்.
3.Teenage Doings And Ambitions - பதின்ம வயது செய்கைகள் மற்றும் லட்சியங்கள்

🎧 Listen - கேட்கவும்
Finished. Click ▶ to replay.

4.Role Model - ரோல் மாடல் ( முன் மாதிரி)

4.1 Meaning - பொருள்
role model முன் மாதிரி
own சொந்த
successful வெற்றிகரமான
because ஏனெனில்
send அனுப்பு
similar ஒரே மாதிரி
inspires தூண்டு
admire ரசி
constitute அமை
charities தொண்டு
space விண்வெளி
several பல
give கொடு
energetic ஆற்றல்மிக்க
dyslexic எழுதுவதில் பேசுவதில் குறைபாடு
generous தாராள குணம்
somehow எப்படியோ
interested ஆர்வம்
4.Role Model - ரோல் மாடல் ( முன் மாதிரி)

🎧 Listen - கேட்கவும்
Finished. Click ▶ to replay.

4.2 Interview - நேர்காணல்

Inter viewer Who is your role model? உன்னுடைய முன்மாதிரி யார்?
Ram My role model? என்னுடைய முன்மாதிரி?
Inter viewer Yes. Who inspires you? ஆமாம். உங்களைத் தூண்டுவது யார்?
Ram Oh! Richard Thomson. ஓ! ரிச்சர்டு தாம்சன்.
Inter viewer What does he do? அவர் என்ன செய்கிறார்.
Ram He owns SSI அவர் எஸ் எஸ் ஐ நிறுவனத்தை வைத்துள்ளார்.
Inter viewer Why do you admire him? நீங்கள் ஏன் அவரை போற்றுகிறீர்கள்?
Ram Because he is so energetic and successful. He was into constituting Newton school. He is dyslexic. But now he is one of the richest business man in the world. Dyslexia - learning disorder ஏனெனில் அவர் மிகவும் ஆற்றல் மிக்கவர். வெற்றியாளர். அவர் நியு+ட்டன் பள்ளியை நிறுவுவதில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு சொல்எழுத்துக்கேடு. (எழுதுவது, படிப்பதில் இயலாமை). ஆனால் இப்பொழுது அவர் உலகின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவர்.
Inter viewer Does he give any money to charity? அவர் தொண்டுக்கு ஏதாவது பணம் கொடுக்கிறாரா?
Ram Yes. He is very generous. ஆமாம். அவர் தாராள குணமுள்ளவர்.
Inter viewer Which charity does he give money to? எந்த தொண்டு நிறுவனத்துக்கு அவர் பணம் கொடுக்கிறார்?
Ram Different Aftrican charities. I think. பல்வேறு ஆப்பிரிக்கத் தொண்டு நிறுவனங்கள் என நான் நினைக்கிறேன்.
Inter viewer Have you ever met him? நீங்கள் எப்பொழுதாவது அவரை சந்தித்ததுண்டா?
Ram No. Never. But I have seen him several times. இல்லை. ஒருபோதும் இல்லை. ஆனால் நான் அவரை சில தடவை பார்த்திருக்கிறேன்.
Inter viewer What is he doing now? அவர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
Ram He is developing the first ever space boat for third gen Architect. He wants to send people into space. அவர் மூன்றாம் தலைமுறை ஆர்க்கிடெக்ட் நிறுவனத்திற்காக வின்வெளிப் படகை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப விரும்புகிறாh.
Inter viewer Are you similar to him in any way? நீங்கள் ஏதாவது விதத்தில் அவரைப் போல் உள்ளீர்களா?
Ram Yes. In some ways I am. For example, I am dyslexic too. But Somehow I am very interested in business. ஆமாம். சில வழிகளில் (விதத்தில்) நான். உதாரணமாக, எனக்கும் சொல்லெழுத்துக் கேடு. ஆனால் எப்படியோ எனக்கு(ம்) தொழிலில் அதிக விருப்பம்.

5.Welcome to the world of work - வேலை உலகிற்கு வரவேற்கிறோம்

5.1 Meaning - பொருள்
voluntary தன்னார்வம்
elderly வயோதிகர்
unhappy சந்தோசமற்ற
involve ஈடுபடு
exactly மிகச்சரியாக
feed உணவளி
sometimes சிலநேரங்களில்
farm பண்ணை
responsible பொறுப்பு
skill திறமை
selfish சுயநலம்
kind வகை
often அடிக்கடி
spend செலவு
organic இயற்கையான
lots அதிகம்
pig பன்றி
during பொழுது
fantastic அற்புதமான
believe நம்பிக்கை
team குழு
impress வசீகரி
visit வருகை
lonely தனிமை
family குடும்பம்
farming விவசாயம்
plant நடு
collect சேகரி
inorganic செயற்கை
environment சுற்றுச்சூழல்
future எதிர்காலம்
community சமுதாயம்
5.Welcome to the world of work - வேலை உலகிற்கு வரவேற்கிறோம்

🎧 Listen - கேட்கவும்
Finished. Click ▶ to replay.

5.2 Interview - நேர்காணல்

Inter viewer Today we have two young people in the studio and they are going to talk to us about voluntary work. Welcome to the show Geetha and Anitha.
இன்று ஸ்டுடியோவில் இரண்டு இளைஞர்கள் நம்முடன் இருக்கிறார்கள். அவர்கள் தன்னார்வப் பணியைப் பற்றி நம்முடன் பேசப் போகிறார்கள். கீதா, அனிதா (தங்களை) நிகழ்ச்சிக்கு வரவேற்கிறோம்.
Geetha Anitha Thankyou. Thankyou.
நன்றி. நன்றி.
Inter viewer Ani, let’s start with you. What kind of voluntary work do you do?
அனி, உங்களிடமிருந்து ஆரம்பிப்போம். நீங்கள் என்ன மாதிரியான தன்னார்வப் பணி செய்கிறீர்கள்?
Anitha I visit elderly people in the homes. There are people in my town, who don’t have any family. Some of them have a dog or cat. But often they feel lonely and unhappy. I spend time with them and most of the time they just want to talk.
நான் வீடுகளில் இருக்கும் முதியவர்களை சந்திப்பேன். எனது ஊரில் குடும்பம் இல்லாதவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் நாய் அல்லது பூனை வைத்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் மகிழ்ச்சியில்லாமல் தனிமையாக உணர்கிறார்கள். நான் அவர்களுடன் நேரம் செலவளிக்கிறேன். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் பேச விரும்புகிறார்கள்.
Inter viewer That’s great Ani. What about you Geetha. What kind of voluntary work you involve?
அது பெரிய (விசயம்) அனிதா. உனக்கு என்ன கீதா. நீங்கள் என்ன வகையான தன்னார்வப் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள்?
Geetha I work in an organic farm.
நான் இயற்கை வேளான் பண்ணையில் வேலை செய்கிறேன்.
Inter viewer What exactly do you do on the farm?
நீங்கள் பண்ணையில் சரியாக என்ன வேலை செய்கிறீர்கள்?
Geetha I do lots of different jobs. I plant trees and vegetables. I feed the pigs and chickens. I collect the eggs from the chickens. And sometimes I cook lunch for all the other volunteers. It’s a big farm and there are fifteen volunteers.
நான் பலவிதமான நிறைய வேலைகள் செய்கிறேன். நான் மரம், காய்கறி செடிகள் நடுகிறேன். நான் பன்றி, கோழிகளுக்கு உணவிடுகிறேன். கோழிகளிடமிருந்து முட்டைகளை சேகரிக்கிறேன். மேலும் சில நேரங்களில் மற்ற எல்லா தன்னார்வலர்களுக்கும் மதிய உணவு சமைக்கிறேன். அது ஒரு பெரிய பண்ணை. அதில் பதினைந்து தன்னார்வலர்கள் உள்ளனர்.
Inter viewer How many hours do you work Anitha?
நீங்கள் எத்தனை மணி நேரம் வேலை செய்கிறீர்கள்? கேரல்.
Anitha I’m used to it. And I have a busy social life. I don't have much free time especially at the weekend. So, I do two or three hours during the week.
எனக்கு அது பழகிவிட்டது. மேலும் எனக்கு பரபரப்பான சமூக வாழ்க்கை உள்ளது. எனக்கு குறிப்பாக வார நாட்களில் அதிக ஓய்வு நேரம் கிடையாது. ஆதலால் நான் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வார நாட்களில் வேலை செய்கிறேன்.
Inter viewer And you Geetha?
நீ கீதா?
Geetha I do quite a lot. I go every Saturday and Sunday. We start very early in the morning and finish at about seven o’clock in the evening. It's very hard work. And I feel tired at the end of the day. But I don't mind because I love being on the farm.
நான் நிறைய செய்கிறேன். நான் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் செல்கிறேன். நாங்கள் அதிகாலை தொடங்கி மாலை சுமார் ஏழு மணிக்கு முடிக்கிறோம். அது மிகக் கடினமான வேலை. நான் நாளிறுதியில் மிகச் சோர்வாக உணர்கிறேன். ஆனால் நான் கவலைப்படுவதில்லை ஏனெனில் நான் பண்ணையில் இருப்பதை விரும்புகிறேன்.
Inter viewer What sort of people volunteer?
என்ன மாதிரியான மக்கள் தன்னார்வப் பணி செய்கிறார்கள்?
Anitha Fantastic people. Haha.. No. Volunteers are caring people. Of course a lot of people are caring. But volunteers are more likely to do something about it.
அற்புதமான மக்கள். ஹாஹா. இல்லை. தன்னார்வலர்கள் அக்கறையுள்ள மக்கள். நிச்சயமாக நிறைய மக்கள் அக்கறையுள்ளவர்கள். ஆனால் தன்னார்வலர்கள் அது குறித்து ஏதாவது நிச்சயமாக செய்பவர்கள்.
Inter viewer So, what do you do in this voluntary work Geetha?
எனவே, இந்த தன்னார்வப் பணியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
Geetha I am passionate about the environment. And I'm interested in responsible farming. I believe that organic farming is very important for the future. I also like working in a team. I learn important life skills and I’m more confident in the farm. Also I want to study farming in Agriculture. So this is good experience.
நான் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவன். நான் பொறுப்பான விவசாயத்தில் விருப்பமுள்ளவன். இயற்கை விவசாயம் எதிர்காலத்திற்கு மிக முக்கியம் என நம்புகிறேன். ஒரு குழுவில் வேலை செய்வதையும் விரும்புகிறேன். ஒரு முக்கியமான வாழ்க்கைத் திறனைக் கற்றுக்கொள்கிறேன். நான் பண்ணையில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன். மேலும் விவசாயத்தில் பண்ணை விவசாயம் படிக்க விரும்புகிறேன். எனவே இது ஒரு நல்ல அனுபவம்.
Inter viewer What about you Anitha?
உனக்கு என்ன அனிதா?
Anitha Well. There are problems in my community and I want to help. There’s also a selfish reason for doing it. It impresses people and I like that.
நல்லது. என்னுடைய சமூகத்தில் பிரச்சனைகள் உள்ளது. நான் உதவ விரும்புகிறேன். அதை செய்வதில் ஒரு சுயநலக் காரணமும் இருக்கிறது. அது மக்களை ஈர்க்கிறது மேலும் நான் அதை விரும்புகிறேன்.
Inter viewer Thank you Anitha and Thankyou Geetha.
நன்றி அனிதா. நன்றி கீதா.

6.About Voluntary Work - தன்னார்வ பணி பற்றி

6.1 Meaning - பொருள்
asked கேட்டான்
chose தேர்ந்தெடுத்தான்
extreme அதிகம்
faith நம்பிக்கை
communication தொடர்பு
ago முன்னால்
weather சீதோஸ்னம்
hot சூடு
helpful உதவி
recommend பரிந்துரை
amazing அற்புதமான
quite ரொம்ப
cold குளிர்
culture கலாச்சாரம்
adventure சாகசம்
6.Voluntary work in Africa - ஆப்ரிக்காவில் தன்னார்வப் பணி

🎧 Listen - கேட்கவும்
Finished. Click ▶ to replay.

6.2 Voluntary work in Africa - ஆப்ரிக்காவில் தன்னார்வப் பணி

வணக்கம். நான் பெல்கி. ஆப்ரிக்காவில் தன்னார்வப் பணி செய்வது பற்றி உங்களுடன் பேசும்படி உங்கள் ஆசிரியர் என்னைக் கேட்டிருக்கிறார். நான் தென் அமெரிக்காவில் சில வருடங்களுக்குமுன் பணியாற்றினேன். அதன் பிறகு போன வருடம் ஆறு மாதங்கள் ஆப்ரிக்காவில் பணியாற்றினேன். அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆப்ரிக்காவில் தன்னார்வலர்களுக்கு நிறைய வேலைகள் உள்ளன. நான் விலங்குகளுடன் வேலை செய்வதைத் தேர்ந்தெடுத்தேன். நான் பெற்றோர் இல்லாத குட்டி யானைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். வேறு நாடுகளில் நிறைய மக்கள் தன்னார்வப் பணி செய்வதைப் பற்றி கட்டாயமாக கவனமாக சிந்திக்க வேண்டும். அது எளிதான வேலை அல்ல. நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும். மேலும் சில நேரங்களில் விசயங்கள் உங்கள் சொந்த நாட்டிலிருந்து வேறுபட்டிருக்கும். உதாரணமாக வானிலை சில நேரங்களில் மிகக் கடுமையாக இருக்கும். அது மிக வெப்பமாகவோ மிகக் குளிராகவோ இருக்கலாம். தன்னார்வப் பணி செய்யும் மக்கள் நம்பிக்கை, உதவும் குணம் மற்றும் வேறு கலாச்சாரங்களில் விருப்பமுள்ளவர்களாக இருக்கவேண்டும். தன்னார்வலராக பணியாற்றும்பொழுது நிறைய புது விசயங்களைக் கற்றுக்கொள். மேலும் நீங்கள் தனியாக வேலை செய்யவில்லை. ஒரு குழுவில் வேலை செய்கிறீர்கள். ஆதலால் நீங்கள் சிறந்த குழு வீரராகவும் நல்ல தகவல் தொடர்பு திறன் கொண்டவராகவும் இருக்க வேண்டும். இது உங்களுக்கு சரியானது என நினைத்தால் நான் வாலன்டீர் டுடே (நிறுவனத்தை) யை பரிந்துரை செய்ய முடியும். மற்றவர்களுக்கு உதவவும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் விருப்பமுள்ள பொறுப்புள்ள இளைஞர்களை அவர்கள் எப்பொழுதும் தேடுகிறார்கள். வாலன்டீர்டுடே இணையதளத்திற்குச் செல்லவும். அது ஒரே வார்த்தை. காம். நீங்கள் எல்லா சாகசத்தைப் பற்றியும் படித்துக்கொள்ளலாம். அல்லது நீங்கள் அவர்களை 07923341565 என்ற எண்ணில் அழைக்கலாம். சரி என்னுடைய நம்பரையும் குறித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் 023645567213 (என்ற எண்ணை அழைக்கலாம்).
Hi, I am Pelky. Your teacher has asked me to talk to you about doing voluntary work in Africa. I worked in South America few years ago and then in Africa last year for six months. It was amazing. There are lots of jobs for volunteers in Africa. I chose to work with animals. And I have to look after young elephants that have no parents. A lot of people do voluntary work in other countries which you must think about it carefully. It’s not a easy work. You have to work long hours. And sometimes things are very different from your own country. For example, the weather is sometimes quite extreme. They can be very hot or very cold. People who volunteers should be faith and helpful and also interested in different cultures. You learn a lot of new things when you work as a volunteer. Also you don’t work on your own. You work in a team. So you need to be a good team player and have good communication skills. If you think it is right for you then I can recommend volunteer today. --- They are always looking for responsible young people who want to help others and learn new skills. Go online to volunteerstoday. That’s one word dot com. And you can read all about the adventure. Or you can phone them on 07923 341565. Ok note my number too in case if you have any questions that 023645567213

7.What the teen agers really like? - பதின்ம வயதினர் என்ன மாதிரியானவர்கள்?

7.1 Meaning - பொருள்
recent அன்மையில்
reason காரணம்
suggest பரிந்துரை
uncommunicative பேசாமல்
obsessed அதீத ஆசை
few சில
adorable அபிமானமான
generous தாராளமான
fun கேளிக்கை
monster பூதம்
grumpy எரிச்சல்
prefer விருப்பம்
definitely நிச்சயமாக
wrong தவறு
survey புள்ளிவிவரம்
behave நடந்துகொள்
need தேவை
lazy சோம்பேறி
chatting அரட்டை
comments கருத்துகள்
cheerful மகிழ்ச்சியான
loyal விசுவாசமான
argue வாதாடு
usually பொதுவாக
hate வெறு
individuals தனிநபர்
travel பயணம்
selfish சுயநலம்
show காட்டு
badly மோசமாக
badtemper கெட்ட குணம்
report அறிக்கை
helpful உதவிகரமாக
negative எதிர்மறை
interesting சுவராஸ்யம்
modest சாதாரண
unhelpful உதவாத
apologize மன்னிப்பு
stereotype குறுகிய வட்டம்
grandparents தாத்தா, பாட்டி
information தகவல்
7.What the teen agers really like? - பதின்ம வயதினர் என்ன மாதிரியானவர்கள்?

🎧 Listen - கேட்கவும்
Finished. Click ▶ to replay.

7.2 Interview - நேர்காணல்

Inter viewer A recent survey shows that there are reasons why teen agers behave badly. This study suggests that teen agers need to sleep more. About 65 percent of the parents, say their teen agers are bad tempered, uncommunicative and lazy. The report also shows that most teen agers are obsessed with their friends. They spend more time chatting online or playing computer games than doing home work. Most parents also say their teen age children are selfish and unhelpful. Only few of them help with house works at all. Your comments ------- Malaimathi.
பதின்ம வயதினர் ஏன் மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு காரணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு காட்டுகிது. இந்த ஆய்வு பதின்ம வயதினர் அதிகம் தூங்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. சுமார் 65 சதவிகிதப் பெற்றோர்கள் தங்கள் பதின்ம வயதினர் அதிக கோபமுடைய கலகலப்பாக வெளிப்படையாக பேசாத சோம்பேறிகள் எனக் கூறினர். பெரும்பாலான பதின்ம வயதினர் தங்கள் நண்பர்களுடன் வெறித்தனமாக உள்ளனர் என மேலும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அவர்கள் வீட்டு வேலை செய்வதைவிட அதிக நேரம் இணையத்தில் அரட்டை அடிப்பது, கணினியில் விளையாடுவதில் செலவிடுகின்றனர். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய பதின்ம வயது பிள்ளைகள் சுயநலவாதிகள், உதவாதவர்கள் எனக் கூறுகின்றனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வீட்டு வேலைகளில் உதவி செய்கின்றனர். உங்களுடைய கருத்துக்கள் ---- மாலைமதி.
Malai mathi Why are people so negative about teenagers? Most of us are adorable, cheerful, very hard working, interesting, bribe, generous, loyal, helpful and very good cooks. Oh and very modest.
பதின்ம வயதினரைப் பற்றி மக்கள் ஏன் எதிர்மறையாக (நினைக்கிறார்கள்)? எங்களில் பெரும்பாலோர் அபிமானத்துக்குரிய, மகிழ்ச்சியான, கடினமாக உழைக்கின்ற, சுவராஸ்யமான,லஞ்சம், தாராளகுணமுள்ள, விசுவாசமுள்ள, உதவி செய்பவர்கள். மேலும் நல்ல சமையல்காரர்கள். ஓ மேலும் மிகவும் பணிவானவர்கள்.
Inter viewer Bala
Bala The most important thing in my life is not my fun, it is my parents. We love each other. We don’t argue or fight. We go to the park after school. We sit under a tree, eat ice creams and talk about guys. We like cooking and camping not just texting and computer games. I don’t have time to read much. But I play the guitar and sing. I am not a bad tempered monster. I usually apologize when I am wrong and I like spending time with grandparents.
எனது வாழ்க்கையின் முக்கியமான விசயம் எனது பெற்றோரின் மகிழ்ச்சி தான். என்னுடையதல்ல. நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். நாங்கள் தர்க்கம் பண்ணவோ சண்டை போடவோ மாட்டோம். பள்ளி முடிந்ததும் நாங்கள் பூங்காவிற்கு செல்கிறோம். மரத்தடியில் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுகிறோம். தோழர்களைப் பற்றி பேசுகிறோம். குறுஞ்செய்தி அனுப்புதல், கணினி விளையாட்டு விளையாடுவது மட்டுமின்றி சமைப்பது, முகாமிடுவதையும் விரும்புகிறோம். எனக்கு நிறைய படிக்க நேரம் இல்லை. ஆனால் நான் கிட்டார் வாசிப்பேன். பாடுவேன். நான் கெட்ட குணமுள்ள அரக்கன் அல்ல. தவறு செய்யும் பொழுது பொதுவாக நான் மன்னிப்புக் கேட்பேன். மற்றும் எனது தாத்தா பாட்டியுடன் நேரம் செலவிடுவதை விரும்புகிறேன்.
Inter viewer Suja
Suja Teen agers are definitely not lazy. I get up at 6.30 am every school day. And I work hard whole day. I never make plans to meet friends in the evening that’s when I do my home work. I think I need about nine and half hours sleep at night. But I usually get only seven hours. So I’m sometimes a big grumpy like my parents.
பதின்ம வயதினர் நிச்சயமாக சோம்பேறிகள் இல்லை. ஒவ்வொரு பள்ளி நாளிலும் நான் 6.30 மணிக்கு எழுகிறேன். நான் நாள் முழுவதும் கடினமாக உழைக்கிறேன். நான் வீட்டுப்பாடம் செய்யும்பொழுது மாலை நேரங்களில் நண்பர்களை சந்திக்க ஒருபோதும் திட்டமிடுவதில்லை. எனக்கு ஒன்பதரை மணி நேரம் தூக்கம் தேவை என நினைக்கிறேன். ஆனால் பொதுவாக எனக்கு ஏழு மணி நேரம் தான் கிடைக்கிறது. எனவே நான் சில சமயங்களில் எனது பெற்றோரைப் போல் பெரிய எரிச்சல்காரன்.
Inter viewer Kumari
Kumari I hate stereotypes. Not all teen agers are the same. Some of us are lazy. Some of us aren’t. Some of us like chatting online or playing computer games. But some of us prefer to play foot ball or golf from one. Ok, some of the things people say about teen agers are true. For example, music is really, really important to us. We like different kinds of music. We are individuals.
நான் தவறான கருத்துகளை வெறுக்கிறேன். எல்லா பதின்ம வயதினரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. எங்களில் சிலர் சோம்பேறிகள். எங்களில் சிலர் (சோம்பேறிகள்) அல்ல. எங்களில் சிலர் இணையத்தில் அரட்டை அடிப்பது, கணினியில் விளையாட்டு விளையாடுவதை விரும்புகின்றனர். ஆனால் எங்களில் சிலர் கால்பந்து விளையாடுவது அல்லது கோல்ப் விளையாடுவதை விரும்புகிறோம். சரி. பதின்ம வயதினரைப் பற்றி மக்கள் சொல்லும் ஒரு சில விசயங்கள் சரி தான். உதாரணமாக இசை எங்களுக்கு உண்மையாகவே முக்கியமானது. நாங்கள் வெவ்வேறு வகையான இசையை விரும்புகிறோம். நாங்கள் தனி நபர்கள்.
Inter viewer Malavan
Malavan I don’t think I am selfish. I care about other people. I am interested in the world. I want to travel and learn about other cultures. Then I want to get a job in a developing country. Most of my friends are like me. Where did you find your information. It’s wrong.
நான் சுயநலவாதி என்று நான் நினைக்கவில்லை. நான் மற்றவர்களை கவனித்துக் கொள்கிறேன். எனக்கு இந்த உலகத்தின் மீது விருப்பம் உள்ளது. நான் பயணம் செய்து மற்ற கலாச்சாரத்தைப் பற்றி அறிய விரும்புகிறேன். அடுத்து நான் வளரும் நாட்டில் வேலை பெற விரும்புகிறேன். பெரும்பாலான எனது நண்பர்கள் என்னைப் போன்றவர்கள். உங்கள் தகவலை எங்கு கண்டீர்கள். அது தவறானது.

8.How to use Skype - ஸ்கைப்பை எப்படி பயன்படுத்துவது?

8.1 Meaning - பொருள்
grandma பாட்டி
ready ஆயத்தம்
too far ரொம்ப தூரம்
tell சொல்
icon சிறு படம்
scrollup மேலே நகர்த்து
skype சாட்டிங் மென்பொருள்
till அதுவரை
growing வளர்
8.How to use Skype - ஸ்கைப்பை எப்படி பயன்படுத்துவது?

🎧 Listen - கேட்கவும்
Finished. Click ▶ to replay.

8.2 Conversation - உரையாடல்

Grand son Ok. Grandma. I am going to tell you how to use Skype. You ready? சரி. பாட்டி. நான் ஸ்கைப் எப்படி பயன்படுத்துவது என உங்களுக்குக் கூறப் போகிறேன். நீங்கள் தயாரா?
Grand mother Yes, I am ready. ஆம். நான் தயார்.
Grand son Are you have a computer? உங்களிடம் கணினி உள்ளதா?
Grand mother Yes. But it is into off. ஆம். ஆனால் அது ஆஃப் ஆக உள்ளது.
Grand son Ok. Switch it on. சரி. அதை ஆன் பண்ணுங்க.
Grand mother Ok. I switched it on. Do I need to log on to facebook? சரி. நான் அதை ஆன் பண்ணி விட்டேன். நான் பேஸ்புக்கில் உள்நுளைய வேண்டுமா?
Grand son No. No. You don’t have to log on to anything. We are doing skype not facebook. Just click on the skype icon. இல்லை. இல்லை. நீங்கள் எதிலும் உள்நுளைய வேண்டியதில்லை. நாம் ஸ்கைப் செய்கிறோம் (பயன் படுத்துகிறோம்) பேஸ்புக் அல்ல. ஸ்கைப் ஐகானை கிளிக் செய்தால் போதும்.
Grand mother Is it blue? அது நீலமா?
Grand son Yes. Click on the blue icon. Use the mouse. ஆம். நீல ஐகானை கிளிக் செய்யவும். மௌஸ் பயன்படுத்தவும்.
Grand mother Ok. I think I will open the page. I can see a long list of names. சரி. நான் பக்கத்தை திறப்பேன் என நினைக்கிறேன். ஒரு நீண்ட பெயர் பட்டியலைப் பார்க்க முடிகிறது.
Grand son That’s right. Now scroll down the page till you find my name. அது சரி. என்னுடைய பெயரை பார்க்கும் வரை கீழே நகர்த்தவும்.
Grand mother Ok. I am scrolling down the page. Oh.. ho. I gone too far. சரி. நான் கீழே நகர்த்துகிறேன். ஓ.. ஹோ.. நான் ரொம்ப தூரம் போய்விட்டேன்.
Grand son That’s all right. Just scroll up the page. அதெல்லாம் சரி தான். பக்கத்தை மேலே நகர்த்தவும்.
Grand mother Yeah. Yes. Here we are. ஆம். ஆம். இங்கிருக்கிறோம்.
Grand son Click on my name and you should see a phone icon. It is green. என்னுடைய பெயரை கிளிக் செய்யவும். நீ கட்டாயம் கைபேசி ஐகானைப் பார்ப்பாய். அது பச்சை.
Grand mother Yes. I can see a green icon. Shall I click on it? ஆமாம். என்னால் பச்சை ஐகானைப் பார்க்க முடிகிறது. நான் அதை கிளிக் செய்யவா?
Grand son Yes. ஆமாம்.
Grand mother It is ringing. மணி அடிக்கிறது.
Grand son I know. It’s my number. Hello. எனக்குத் தெரியும். அது என்னுடைய எண். ஹலோ.
Grand mother Hello. Ohhhh. I can see you. ஹலோ. ஓ... என்னால் உன்னை பார்க்க முடிகிறது.
Grand son And I can see you too. You can hang up now. We can chat on skype. என்னாலும் உங்களைப் பார்க்க முடிகிறது. நாம் இப்பொழுது ஸ்கைப்பில் சேட் பண்ணலாம்.
Grand mother Ok. Ohh. It is lovely to see you. Are you growing your hair? சரி. ஓ... உன்னைப் பார்க்க அன்பாக இருக்கிறது. நீ முடி வளர்க்கிறாயா?

9.About TV Programme - தொலைகாட்சி நிகழ்ச்சி பற்றி

9.1 Meaning - பொருள்
really உண்மையில்
ecology சூழலியல்
difficult கடினம்
fascinating கண்கவர்
hopeless நம்பிக்கையற்ற
incredible நம்பமுடியாத
archaeologist தொல்பொருள் நிபுனர்
energy ஆற்றல்
amazing அற்புதமான
geology நிலவியல்
marine biology கடல்சார் உயிரியல்
enjoy அனுபவி
keen முனைப்பு
experiment சோதனை
mountain மலை
physicist இயற்பியலாளர்
miss தவறவிடு
fun வேடிக்கை
9.About TV Programme - தொலைகாட்சி நிகழ்ச்சி பற்றி

🎧 Listen - கேட்கவும்
Finished. Click ▶ to replay.

9.2 Conversation - உரையாடல்

Ram You’re really good at science. Are you going to be a scientist?
உண்மையிலேயே நீ அறிவியலில் சிறந்து (விளங்குகிறாய்). நீ விஞ்ஞானியாகப் போகிறாயா?
Suja I like to. My dad is an archialogist. And of course he wants me to do Archialogy. But some how I’m keen on taking up world things. I prefer to do something useful like Ecology and help with the worlds’ energy problems and things. How about you?
நான் விரும்புகிறேன். எனது அப்பா ஒரு தொல்லியல் நிபுணர். நிச்சயமாக நான் தொல்லியல் (படிக்க வேண்டும்) என விரும்புகிறார். ஆனால் எப்படியோ நான் உலக விசயங்களை எடுத்துக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன். நான் சுற்றுச்சூழலியல் போன்ற பயனுள்ள ஒன்றை செய்ய விரும்புகிறேன். மற்றும் உலகின் ஆற்றல் பிரச்சனைகள் விசயங்களுக்கு உதவ விரும்புகிறேன். நீ எப்படி?
Ram When I was younger, I was quite good at chemistry. I enjoyed doing experiments. It was fun. Now it is getting a big too difficult. I think I will study languages.
நான் இளமையாக இருந்த போது வேதியலில் மிகச் சிறந்து விளங்கினேன். நான் பரிசோதனைகள் செய்வதில் மகிழ்ச்சியடைந்தேன். அது வேடிக்கையாக இருந்தது. அது இப்பொழுது மிகவும் கடினமாகி வருகிறது. நான் மொழிகள் படிப்பேன் என நினைக்கிறேன்.
Gokul There was an amazing programme on TV last night. Did you see it? On about mountains of the world.
நேற்றிரவு தொலைக்காட்சியில் ஒரு அற்புதமான நிகழ்ச்சி. நீ பார்த்தாயா? உலகிலுள்ள மலைகள் பற்றியது.
Bala I did. You’re right. It was fascinating. I really enjoy Geology.
நான. பார்த்தேன். நீ சரி தான். அது வசீகரமாக இருந்தது. நான் உண்மையாகவே புவியியலை விரும்புகிறேன்.
Gokul Me too. It is a good series. Last week, it was about a famous physicist. I am hopeless with physics. So it was good for me.
நானும் தான். அது ஒரு நல்ல தொடர். கடந்த வாரம் அது ஒரு இயற்பியலாளர் பற்றியது. நான் இயற்பியலில் நம்பிக்கை(தேர்ச்சி)யற்றவன். எனவே அது எனக்கு நல்லது.
Bala I missed that one. But next weeks, is about marine biology. Dive is in Australia have found incredible farms on the water. I mustn’t miss that one.
நான் அதை தவற விட்டுவிட்டேன். ஆனால் அடுத்த வாரங்கள், கடல் உயிரியல் பற்றியது. ஆஸ்ட்ரேலியாவிலுள்ள டைவ், தண்ணீரில் நம்பமுடியாத பண்ணைகளைக் கண்டு பிடித்திருக்கிறது. நான் அதைக் கட்டாயம் தவறவிடக் கூடாது.

Summary (English + Tamil explanation):

You have now learned many model interview questions and answers. Practising these interviews will help you to face any kind of interview in your life.. நீங்கள் இப்போது பல மாதிரி நேர்காணல் கேள்விகள் மற்றும் பதில்களைக் கற்றுக்கொண்டீர்கள். இந்த நேர்காணல்களைப் பயிற்சி செய்வது உங்கள் வாழ்க்கையில் எந்த வகையான நேர்காணலையும் எதிர்கொள்ள உதவும்.

Practice tips

Keep practising interviews aloud and use them in real life situations. Your command over interviewing different peoples forms a solid base for more advanced English skills.

Do it yourself

Try to make questions and answers to interview the following people:
  • Doctor
  • Tennis Player
  • Actor
  • Candidate applied for the post of Manager
  • Dancer