Word
சொல் - வார்த்தை
Parts of Speech
The term 'parts of speech' refers to words that perform different functions in a sentence in order to give the sentence a proper meaning and structure.
Words - சொற்கள்
Words are classified into eight types. They are :
சொற்கள் (வார்த்தைகள்) எட்டு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவைகள்:
1. Noun - பெயர்ச்சொல்
Noun is a name of a person, place or a thing/object.
பெயர்ச்சொல் என்பது ஒருவரின் பெயர், ஒரு இடத்தின் பெயர் அல்லது ஒரு பொருளின் பெயர் ஆகும்.
1.1 Types of Nouns - பெயர்ச்சொல் வகைகள்
- Proper Noun- ஒருவர் அல்லது ஒன்றின் பெயர்
- Common Noun- பொதுவான பெயர்
1.1 a) Proper Noun - ஒருவர் அல்லது ஒன்றின் பெயர்
Proper noun names a person, place or object in particular.
குறிப்பிட்ட ஒருவர், ஓரிடம் அல்லது ஒரு பொருளைக் குறிக்கும் சொல் ஒருவர் அல்லது ஒன்றின் பெயர் எனப்படும்.
Example:
- Dr.Subbiah- ஒருவரின் பெயர்
- Chennai - ஒரு இடத்தின் பெயர்
- TV - ஒரு பொருளின் பெயர்
1.1 b) Common Noun - பொதுவான பெயர்
A common noun is a name given in common to every person, place or thing of the same class or kind.
ஒரே வகையான நபர்கள், இடம் மற்றும் பொருட்களைக் குறிக்கும் சொல் பொதுவான பெயர் எனப்படும்.
Example:
- men - ஆண்கள், women - பெண்கள்,
- doctor - மருத்துவர், farmer - விவசாயி,
- animals - விலங்குகள், tree - மரம்.
2. Pronoun - மாற்றுப்பெயர்
Pronoun is a word that is used instead of a noun or phrase that contains a noun.
பெயர்சொல் அல்லது பெயர்தொடருக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் சொல் மாற்றுப்பெயர் ஆகும்.
Example:
- Ram - ன் மாற்றுப்பெயர் நான், அவன், அவர்
- School - ன் மாற்றுப்பெயர் அது
2.1.1 Personal Pronoun - ஒருவர் அல்லது ஒன்றின் மாற்றுப்பெயர்
- You- நீ, நீங்கள், உனக்கு, உங்களுக்கு
- They - அவர்கள், அவைகள்
- I - நான்
- We - நாம், நாங்கள்
- He - அவன், அவர்
- She - அவள்
- It - அது, அந்த
- us - எங்களை, எங்களுக்கு
- him - அவனை, அவனுக்கு
- her - அவளை, அவளுக்கு
- me - எனக்கு, என்னை
- this - இது, இந்த
- that - அது, அந்த
- them - அவர்களை, அவைகளை
2.1.2 Demonstrative pronouns - சுட்டுப்பெயர்
- This - இது, இந்த
- That - அது, அந்த
- These - இவைகள், இவர்கள்
- Those -அவைகள், அவர்கள்
2.1.3 Interrogative pronouns - வினாச்சொல்
- Who - யார்?
- Whom - யாரை?
- Which - எது?
- What - என்ன?
- Whose - யாருடைய?
2.1.4 Relative pronouns - இனங்சுட்டுப்பெயர்
A word that refers to a previous noun in a sentence is called Relative Pronoun.
ஒரு வாக்கியத்தில் முன்னர் குறிப்பிடப் பட்டுள்ள பெயர்ச்சொல்லைச் சுட்டும் வார்த்தை (சொல்) இனஞ்சுட்டுப் பெயர் என்று அழைக்கப்படும்.
- Whichever - எதுவாயினும்
- Who - யார்
- Whoever - யாராயினும்
- Whatever - என்னவாயினும்
- Whomever - யாருக்காயினும்
- Whosever - யாருடையதாயினும்
- that - அது
- Which - எது
Example:
The lady who lives next door is a teacher.
பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒரு ஆசிரியர்.
இதில் who என்ற இனஞ்சுட்டுப் பெயர் lady என்ற பொதுவான பெயர்ச்சொல்லைக் (Common noun) குறிக்கிறது.
2.1.5 Indefinite Pronouns - பொதுநிலை சுட்டுப்பெயர்
Indefinite pronoun is a word that is not sure or clear about the persons or thing.
உறுதியில்லாத ஒன்றை, அல்லது நபர்களைக் குறிக்கும் சொல் பொதுநிலைச் சுட்டுப்பெயர் எனப்படும்.
- Some - சில,சிலர்,கொஞ்சம்
- Few - ஒரு சில
- None - ஒன்றுமில்லை, ஒருவருமில்லை
- Each - ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும்
- Every - எல்லோரையும், எல்லாவற்றையும்
- Anyone - யாராவது ஒருவர்
- Someone - யாரோ ஒருவர்
- Everyone - எல்லோரும்
- No one - ஒருவருமில்லை
- Anybody - யாராவது ஒருவர்
- Somebody - யாரோ ஒருவர்
- Everybody - எல்லோரும்
- Anything - ஏதேனும் ஒன்று, எதுவானாலும்
- Something - ஏதோ ஒன்று
- Everything - எல்லாம்
- Nothing - ஒன்றுமில்லை
Example:
Some of you come with me.
உங்களில் சிலர் என்னுடன் வாருங்கள்.
இதில் Some என்பது Indefinite pronoun
2.1.6 Reflexive Pronouns - தற்சுட்டுப்பெயர்
Reflexive Pronoun is a word that refers to a person who performs an action (Subject).
செயலைச் செய்பவரையே (பெயர்ச் சொல்லையே) குறிப்பிடும் சொல் தற்சுட்டுப்பெயர் எனப்படும்.
- Myself - நானே
- Yourself - நீயே, நீங்களே
- Himself - அவனே, அவனையே
- Herself - அவளே, அவளையே
- Itself - அதுவே, தானே, தானாகவே
- Yourselves - நீயே, நீங்களே, உனக்கே
- Ourselves - நாங்களே
- Themselves - அவர்களே, அவைகளே
Example:
I did this myself.
நானே இதை செய்தேன்.
இதில் myself என்பது Reflexive Pronoun of I
3.Verbs - வினைச்சொல்
Verb represents a Physical action.
ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல்.
Example:
run - ஓடு, talk - பேசு, dance - நடனமாடு,
shout - கத்து, cook - சமை.
Verb also represents a mental action (மனதால் செய்யும் செயல்)
Example:
think - யோசி, believe - நம்பு, fear - பயம்,
want - விருப்பம், wonder - ஆச்சர்யம்.
3.1 Auxiliary Verbs - துணை வினைச்சொற்கள்
Auxiliary verbs are called as Linking verbs.
துணை வினைச்சொற்கள் இணைக்கும் வினைச்சொற்கள் என்று அழைக்கப்படுகிறது.
It comes with continuous tense and past participle.
அது தொடர் வினையெச்சம் மற்றும் முடிவுற்ற வினையெச்சங்களுடன் சேர்ந்து வரும்.
To learn more about auxiliary verbs visit the page: Auxiliary Verbs - துணை வினைச்சொற்கள்4. Prepositions - (முன்) இடைச்சொல்
Preposition is a word or phrase that is used before a noun, pronoun or verb to give a meaningful statement.
இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச் சொல்லுக்கும் வினைச் சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் ஆகும்.
Example:
- kept in the box - பெட்டிக்குள் வைத்தேன்
- bought for mother - அம்மாவுக்காக வாங்கினேன்
- gave to father - அப்பாவுக்குக் கொடுத்தேன்
5. Adjective - பெயரடை
Adjective is a word that tells more about a noun.
பெயர்ச் சொல்லை மேலும் விவரிக்கும் சொல் பெயரடை எனப்படும்.
Example:
Malaimathi is a good student - மாலைமதி ஒரு நல்ல மாணவி.
இதில் good என்பது adjective.
6. Adverb - வினையடை
Adverb is a word that tells more about a verb.
ஒரு வினைக்கு கூடுதல் தகவலை சேர்க்கும் சொல் வினையடை எனப்படும்.
Example:
- Speak slowly - மெதுவாகப் பேசு.
- arrive early - சீக்கிரமாக வந்து சேர்.
- I know her well - அவளை நான் நன்றாக அறிவேன்.
slowly, early and well are adverbs.
7. Conjunction - இணைப்புச்சொல்
Conjunction is a word that joins words or sentences together.
வார்த்தைகளை அல்லது வாக்கியங்களை ஒன்றாக இணைக்கும் சொல் இணைப்புச்சொல் எனப்படும்.
My son and daughter will come for Pongal -
எனது மகனும் மகளும் பொங்கலுக்கு வருவார்கள்.
இதில் and என்பது conjunction
7.1.1 Correlative conjunctions - இணையாக பயன்படும் இணைப்புச் சொற்கள்
- either ... or - இரண்டில் ஒன்று
- neither ... nor - இரண்டுமில்லை
- Both ... and - இரண்டும் சேர்ந்து
- Though ... yet - இருந்தபோதிலும்
- Whether .... or - இதுவா அதுவா
- not only.... but also - இதுமட்டுமில்லை அதுவும்கூட
7.1.2. Compound conjunctions - கூட்டு இணைக்கும் சொற்கள்
- in order that - நோக்கத்துடன்
- even if - இருந்தாலும்
- so that - காரணத்திற்காக
- provided that - நிபந்தனையின் பேரில்
- as though - போல
- as well as - கூட, மேலும்
- as soon as - உடனேயே
- as if - போல
7.1.3. Co-ordinating conjunction - சமமான இணைப்புச்சொற்கள்
- and - மற்றும், உம்
- but - ஆனால்
- for - ஆக, க்காக
- or - அல்லது
- nor- இன்றி
- also- மேலும், கூட
7.1.4.Sub - ordinating conjunction - சார்ந்து இருக்கும் இணைப்புச்சொற்கள்
- after - பிறகு
- because - ஏனெனில்
- if - ஆல்
- that - அது, அந்த
- though, although - இருந்தபோதிலும்
- till - வரை
- unless - இல்லாவிடில்
- before - முன்னால்
- as - மாதிரி, போல
- when - எப்பொழுது
- where - எங்கு
- while - பொழுது
8. Interjection - வியப்பிடைச்சொல் அல்லது உணர்ச்சிக் குறிப்புச்சொல்
Example:
- Wow!
- Oh!
- Hurray!
Wow! This is very nice.
வாவ்! இது மிகவும் அழகாக இருக்கிறது.
Oh no! I left my key in the car.
ஓ நோ! நான் என்னுடைய சாவியை காரில் விட்டு விட்டேன்.
Listening Practice
இந்த ஆடியோவில் உள்ள வாா்த்தைகளைக் கேட்டு, தங்களின் கவனித்துக் கேட்கும் திறனையும், ஆங்கில உச்சரிப்பையும் மேம்படுத்துங்கள்.
Word - வாா்த்தை
🎧 Listen - கேட்கவும்
Summary (English + Tamil explanation):
You have now learned the types of words or parts of speech. Practising these words will help you become more fluent and confident when speaking English.
நீங்கள் இப்போது வார்த்தைகளின் வகைகள் அல்லது பேச்சின் பகுதிகளைக் கற்றுக்கொண்டீர்கள். இந்த வார்த்தைகளைப் பயிற்சி செய்வது ஆங்கிலம் பேசும்போது மிகவும் சரளமாகவும் நம்பிக்கையுடனும் இருக்க உதவும்.
Practice tips
Keep practising by saying the words aloud and using them in real life situations. Your command over types of words forms a solid base for more advanced English skills.
Do it yourself
Try to make sentences using the following words:
Active voice and Passive Voice Idioms-சொலவடை Homophones and Heterophones Learn to ask Questions
