Tenses - Rules and Examples using the Verb take
ஆங்கிலத்தில் காலங்கள் ஒரு செயல் எப்போது நிகழ்கிறது (கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்) மற்றும் அதன் கால அளவு/நிறைவு (தனிவினை, தொடர்வினை, முடிவுற்ற வினை, முடிவுற்ற தொடர் வினை) ஆகியவற்றைக் காட்டுகின்றன, இது நிகழ்கால தனிவினை (நான் நடக்கிறேன்) மற்றும் முடிவுற்ற எதிர்கால தொடர் வினை (நான் நடந்து கொண்டிருப்பேன்) போன்ற 12 பொதுவான வினை வடிவங்களை உருவாக்குகிறது, இது பழக்கவழக்கங்கள், நடந்து கொண்டிருக்கும் செயல்கள் அல்லது கால இணைப்புகளுடன் முடிக்கப்பட்ட நிகழ்வுகளை விவரிக்கப் பயன்படுகிறது.
இந்தப் பக்கத்தில், நான்கு முக்கிய வகையான ஆங்கில காலங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம் — தனிவினை, தொடர்வினை, முடிவுற்ற வினை, முடிவுற்ற தொடர் வினை. ஆங்கிலத்தில் வெவ்வேறு காலங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை தமிழ் பேசுபவர்கள் புரிந்துகொள்ள உதவுவதற்காக, ஒவ்வொரு கால வடிவங்களின் தொகுப்பும் ஆங்கிலம் மற்றும் தமிழில் மாதிரி வாக்கியங்களுடன் விளக்கப்பட்டுள்ளது .
English tenses show when an action happens (past, present, future) and its duration/completion (simple, continuous, perfect, perfect continuous), creating 12 common verb forms like Present Simple (I walk) and Future Perfect Continuous (I will have been walking), used to describe habits, ongoing actions, or completed events with time connections.
On this page you can learn how the four major types of English tenses work — simple, continuous, perfect, and perfect continuous. Each set of tense forms is explained with sample sentences in English, along with Tamil meaning to help Tamil speakers understand how different English tenses are used in everyday spoken English.
Simple - தனிவினை
Simple tenses in English are the most basic forms for present, past, and future actions, focusing on habits or facts, completed events without emphasizing duration or completion, and they are the Simple Present, Simple Past, and Simple Future. These are fundamental for daily communication, describing general truths (e.g., Sun rises), regular habits (e.g., She takes), or single events in time (e.g., She took).
1.1 Simple Present - நிகழ்காலத் தனிவினை
The simple present tense is used to express habits, general truths, repeated actions or unchanging situations, emotions and wishes.
Example: You walk for two hundred meters, then you turn left.
Simple Present - Rules
- I/We/You/They - டன் present tense வரும்.
- He/She/It - டன் present tense மற்றும் s,es அல்லது ies வரும்.
- he, she, it - டன் o,h-ல் முடியும் நிகழ்கால வினைகள் வரும் பொழுது es சேர்க்க வேண்டும். மற்ற நிகழ்கால வினைகளுடன் s சேர்க்க வேண்டும்.
- he, she, it - டன் y- ல் முடியும் நிகழ்கால வினைகள் வந்தால் y- ஐ எடுத்துவிட்டு ies சேர்க்க வேண்டும்.
- he, she, it - டன் modal auxiliary verb வரும் பொழுது s அல்லது es சேர்க்கத் தேவையில்லை.
Simple Present - Examples
Affirmative Sentences
- You take - நீ எடு
- Take this - இதை எடுங்கள்.
- Take a bowl - ஒரு கிண்ணம் எடுங்கள்.
- I take - நான் எடுக்கிறேன்.
- We take - நாங்கள் எடுக்கிறோம்.
- They take - அவர்கள் எடுக்கிறார்கள்.
- You go - நீ போ.
- He goes - அவன் போகிறான்.
- They watch - அவர்கள் பார்க்கிறார்கள்.
- She watches - அவள் பார்க்கிறாள்.
- They take - அவர்கள் எடுக்கிறார்கள்.
- It takes - அது எடுக்கிறது.
- I eat - நான் சாப்பிடுகிறேன்.
- She eats - அவள் சாப்பிடுகிறாள்.
- He takes - அவர் எடுக்கிறார்.
- It goes - அது போகிறது.
- She takes - அவள் எடுக்கிறாள்.
- You fly- நீ பற.
- It flies - அது பறக்கிறது.
- She can do - அவளால் செய்ய முடியும்.
- He must go - அவன் கட்டாயம் போகவேண்டும்.
Negative Sentences
- Don't take - எடுக்காதே.
- I don't take - நான் எடுப்பதில்லை.
- You don't take - நீ எடுக்காதே.
- You too don't take - நீயும் எடுக்காதே.
- He doesn't take - அவன் எடுப்பதில்லை.
Interrogative Sentences
- Do you take? - நீ எடுக்கிறாயா?
- Does he take? - அவன் எடுக்கிறானா?
- Doesn’t she take? - அவள் எடுக்கலையா?
- Don’t you take? - நீங்க எடுக்கலையா?
1.2 Simple past - இறந்தகாலத் தனிவினை
The simple past tense is used to talk about a completed action in a time before now. The simple past is the basic form of past tense in English. The time of the action can be in the recent past or the distant past and action duration is not important.
Example: We saw a good film last week.
Simple Past - Rules
- I/We/You/They/He/She/It - டன் past tense வரும்.
- I/We/You/They/He/She/It - டன் did மற்றும் present tense வரும்.
(or-அல்லது)
Simple Past - Examples
Affirmative Sentences
- I took- நான் எடுத்தேன்.
- I did take - நான் எடுத்தேன்.
- I took - நான் எடுத்தேன்.
- You took - நீங்கள் எடுத்தீர்கள்.
- He took - அவர் எடுத்தார்.
- She took - அவள் எடுத்தாள்.
- It took - அது எடுத்தது.
- They took - அவர்கள் எடுத்தார்கள்.
- We took - நாங்கள் எடுத்தோம்.
Negative Sentences
- She didn’t take - அவள் எடுக்கவில்லை.
- I didn’t take - நான் எடுக்கவில்லை.
Interrogative Sentences
- Did you take? - நீ எடுத்தாயா?
- Didn’t you take? - நீங்கள் எடுக்கவில்லையா?
- Did she take? - அவள் எடுத்தாளா?
- Didn’t she take? - அவள் எடுக்கவில்லையா?
1.3 Simple Future - எதிர்காலத் தனிவினை
The simple future refers to a time later than now, and expresses facts or certainty.
Example: Ram will go to college tomorrow
Simple Future - Rules
- He/She/It/You/They - டன் will/would மற்றும் present tense வரும். will would rules
- I/We - டன் will/shall மற்றும் present tense வரும். will shall rules
Simple Future - Examples
Affirmative Sentences
- We shall take - நாம் எடுப்போம்.
- You will take - நீ எடுப்பாய்.
- I will take - நான் எடுப்பேன்.
- They would take - அவர்கள் எடுப்பார்கள்.
Negative Sentences
- She won’t take - அவள் எடுக்கமாட்டாள்.
- They won’t take - அவர்கள் எடுக்கமாட்டார்கள்.
Interrogative Sentences
- Won’t you take? - நீ எடுக்கமாட்டாயா?
- Will you take? - நீ எடுப்பாயா?
- Will you take? - நீங்கள் எடுப்பீர்களா?
- Will I take? - நான் எடுப்பேனா?
- Shall I take? - நான் எடுக்கட்டுமா?
- Will he take? - அவர் எடுப்பாரா?
- Will she take? - அவள் எடுப்பாளா?
- Would they take? - அவர்கள் எடுப்பார்களா?
- Wouldn't they take? - அவர்கள் எடுக்கமாட்டார்களா?
2.Continuous - தொடர்வினை
Continuous tense shows actions in progress, using the verb "to be" (am, is, are, was, were, will be) + the "-ing" form of the main verb (present participle), covering present (happening now), past (happened over time), and future (will happen over time). Examples: Present: "She is reading." Past: "They were singing." Future: "He will be working.".
2.1 Present Continuous - நிகழ்காலத் தொடா்வினை
The present continuous is used to describe an action that is going on at this moment.
Example: You are studying English grammar.
Present Continuous - Rules
- We/You/They - டன் are மற்றும் continuous tense வரும்
- He/She/It - டன் is மற்றும் continuous tense வரும்.
- I - டன் am மற்றும் continuous tense வரும்.
Present Continuous - Examples
Affirmative Sentences
- They are taking - அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
- He is taking - அவன் எடுத்துக் கொண்டிருக்கிறான்.
- It is taking - அது எடுத்துக் கொண்டிருக்கிறது.
- I am taking - நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
Negative Sentences
- They are not taking - அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
- It isn’t taking - அது எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
- I amn’t taking - நான் எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
Interrogative Sentences
- Aren’t you taking? - நீ எடுத்துக் கொண்டிருக்கவில்லையா?
- Are you taking? - நீ எடுத்துக் கொண்டிருக்கிறாயா?
- Are they taking? - அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்களா?
- Aren’t they taking? - அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கவில்லையா?
2.2 Past Continuous - இறந்தகாலத் தொடா்வினை
The past continuous describes actions or events in a time before now, which began in the past and were still going on when another event occurred.
Example: They were waiting for the bus when she called.
Past Continuous - Rules
- We/You/They - டன் were மற்றும் continuous tense வரும்
- He/She/It/I - டன் was மற்றும் continuous tense வரும்
Past Continuous - Examples
Affirmative Sentences
- They were taking - அவர்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
- She was taking - அவள் எடுத்துக் கொண்டிருந்தாள்.
- He was taking - அவர் எடுத்துக் கொண்டிருந்தார்.
- It was taking - அது எடுத்துக் கொண்டிருந்தது.
- I was taking - நான் எடுத்துக் கொண்டிருந்தேன்.
Negative Sentences
- They weren’t taking - அவர்கள் எடுத்துக் கொண்டிருந்ததில்லை.
- She wasn’t taking - அவள் எடுத்துக் கொண்டிருந்ததில்லை.
Interrogative Sentences
- Were you taking? - நீ எடுத்துக் கொண்டிருந்தாயா?
- Weren’t you taking? - நீ எடுத்துக் கொண்டிருக்கவில்லையா?
2.3 Future Continuous - எதிர்காலத் தொடா்வினை
The future continuous refers to an unfinished action or event that will be in progress at a time later than now. The future continuous is used for quite a few different purposes. The future continuous can be used to project ourselves into the future.
Example: He'll be coming to the meeting, I expect.
Future Continuous - Rules
- He/She/It/You/They/I/We - டன் will be / would be மற்றும் continuous tense வரும்
Future Continuous - Examples
Affirmative Sentences
- They will be taking - அவர்கள் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
- She will be taking - அவள் எடுத்துக் கொண்டிருப்பாள்.
- It would be taking - அது எடுத்துக் கொண்டிருக்கும்.
- We shall be taking - நாங்கள்; எடுத்துக் கொண்டிருப்போம்.
- They will be taking - அவர்கள் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
Negative Sentences
- She won’t be taking - அவள் எடுத்துக் கொண்டிருக்கமாட்டாள்.
- They won’t be taking - அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.
Interrogative Sentences
- Will she be taking? - அவள் எடுத்துக் கொண்டிருப்பாளா?
- Won’t she be taking? - அவள் எடுத்துக் கொண்டிருக்கமாட்டாளா?
- Will you be taking? - நீங்கள் எடுத்துக் கொண்டிருப்பீர்களா?
- Won’t you be taking? - நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கமாட்டீர்களா?
- Will they be taking? - அவர்கள் எடுத்துக் கொண்டிருப்பார்களா?
Perfect - முடிவுற்ற வினை
Perfect tenses (Present, Past, Future) in English show actions completed relative to a specific time, using "have/has/had/will have" + past participle (e.g., have eaten, had gone, will have finished), linking past actions to present results or sequencing events across time. They focus on completion, not duration, and are key for expressing experience, recent events, or future milestones.
3.1 Present Perfect - முடிவுற்ற நிகழ்கால வினை
The present perfect is used to indicate a link between the present and the past. The time of the action is before now but not specified, and we are often more interested in the result than in the action itself.
Example: I have just finished my work.
Present Perfect-Rules
- I/We/You/They - டன் have மற்றும் past participle வரும்.
- He/She/It - டன் has மற்றும் past participle வரும்.
Present Perfect-Examples
Affirmative Sentences
- You have taken - நீ எடுத்திருக்கிறாய்.
- They have taken - அவர்கள் எடுத்திருக்கிறார்கள்.
- It has taken - அது எடுத்திருக்கிறது.
- Yes. I have taken - ஆமாம். நான் எடுத்திருக்கிறேன்
- No. I have taken - இல்லை. நான் எடுத்திருக்கிறேன்
Negative Sentences
Interrogative Sentences
- Have you taken? - நீ எடுத்திருக்கிறாயா?
- Haven’t you taken? - நீ எடுத்திருக்கவில்லையா?
- Has she taken? - அவள் எடுத்திருக்கிறாளா?
- Have I taken? - நான் எடுத்திருக்கிறேனா?
3.2 Past Perfect - முடிவுற்ற இறந்தகால வினை
The past perfect refers to a time earlier than before now. It is used to make it clear that one event happened before another in the past. It does not matter which event is mentioned first - the tense makes it clear which one happened first.
Example: The train had just left when I arrived at the station.
Past Perfect-Rules
- I/We/You/They/He/She/It - டன் had மற்றும் past participle வரும்.
Past Perfect- Examples
Affirmative Sentences
- I had taken - நான் எடுத்திருந்தேன்.
- They had taken - அவர்கள் எடுத்திருந்தார்கள்.
- It had taken - அது எடுத்திருந்தது.
- We had taken - நாங்கள் எடுத்திருந்தோம்.
- You had taken - நீ எடுத்திருந்தாய்.
Negative Sentences
- I hadn't taken - நான் எடுத்திருந்ததில்லை.
- They hadn't taken - அவர்கள் எடுத்திருந்ததில்லை.
- It hadn't taken - அது எடுத்திருந்ததில்லை.
Interrogative Sentences
- Had they taken? - அவர்கள் எடுத்திருந்தார்களா?
3.3 Future Perfect - முடிவுற்ற எதிர்கால வினை
The future perfect tense refers to a completed action in the future. When we use this tense we are projecting ourselves forward into the future and looking back at an action that will be completed some time later than now. It is most often used with a time expression.
Example: I would have finished my report by this time next week.
Future Perfect-Rules
- I/We/You/They/He/She/It - டன் will have / would have மற்றும் past participle வரும்.
- I/We - டன் shall have மற்றும் past participle வரும்.
Future Perfect - Examples
Affirmative Sentences
- They will have taken - அவர்கள் எடுத்திருப்பார்கள்.
- It will have taken - அது எடுத்திருக்கும்.
- I would have taken - நான் எடுத்திருப்பேன்.
- We shall have taken - நாங்கள் எடுத்திருப்போம்.
- You will have taken - நீ எடுத்திருப்பாய்.
Negative Sentences
- They won’t have taken - அவர்கள் எடுத்திருக்கமாட்டார்கள்.
- It won’t have taken - அது எடுத்திருக்காது.
- I won’t have taken - நான் எடுத்திருக்கமாட்டேன்.
Interrogative Sentences
- Would they have taken? - அவர்கள் எடுத்திருப்பார்களா?
- Won’t they have taken? - அவர்கள் எடுத்திருக்கமாட்டார்களா?
Perfect Continuous - முடிவுற்றத் தொடர்வினை
The perfect continuous tense (also known as perfect progressive) describes actions that started in the past and continue to the present, or have just stopped but have present results, emphasizing duration; it's formed with [have/has/had/will have] + been + verb(-ing), with present, past, and future forms like "I have been waiting," "She had been studying," or "They will have been living" by a certain time.
4.1 Present Perfect Continuous - முடிவுற்ற நிகழ்காலத் தொடர்வினை
The present perfect continuous is used to refer to an unspecified time between 'before now' and 'now'. The speaker is thinking about something that started but perhaps did not finish in that period of time. He/she is interested in the process as well as the result, and this process may still be going on, or may have just finished.
Example: I've been working on this report since eight o'clock this morning
Present Perfect Continuous - Rules
- I/We/You/They - டன் have been மற்றும் continuous tense வரும்.
- He/She/It - டன் has been மற்றும் continuous tense வரும்.
Present Perfect Continuous - Examples
Affirmative Sentences
- He has been taking leave often - அவர் அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
- He has been taking BP tablet for two years - இரண்டு வருடங்களாக அவர் பீபி மாத்திரை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
- She has been taking tablet for diabetic - அவர்கள் சர்க்கரை நோய்க்கு மாத்திரை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
- I have been taking money from ATM - நான் ஏடிஎம்-லிருந்து பணம் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறேன்.
- Every Sunday they have been taking book from Library - ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நூலகத்திலிருந்து அவர்கள் புத்தகம் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
Negative Sentences
- She hasn't been taking tablet for diabetic - அவள் சர்க்கரை நோய்க்கு மாத்திரை எடுத்துக் கொண்டிருந்திருக்கவில்லை.
- I haven't been taking money from ATM - நான் ஏடிஎம்-லிருந்து பணம் எடுத்துக் கொண்டிருந்திருக்கவில்லை.
Interrogative Sentences
- Have they been taking book from Library? - அவர்கள் நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்களா?
- Haven't you been taking book from Library? - நீ நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துக் கொண்டிருந்திருக்கவில்லையா?
4.2 Past Perfect Continuous - முடிவுற்ற இறந்தகாலத் தொடர்வினை
The past perfect continuous corresponds to the present perfect continuous, but with reference to a time earlier than 'before now'. As with the present perfect continuous, we are more interested in the process.
Example: Had you been waiting long before the taxi arrived?
Past Perfect Continuous - Rules
- I/We/You/They/He/She/It - டன் had been மற்றும் continuous tense வரும்.
Past Perfect Continuous - Examples
Affirmative Sentences
- I had been taking pull ups during college days - கல்லூரி நாட்களில் நான் தண்டால் எடுத்துக் கொண்டிருந்திருந்தேன்.
Negative Sentences
-
I hadn't' been taking - நான் எடுத்துக் கொண்டிருந்திருந்ததில்லை.
Interrogative Sentences
4.3 Future Perfect Continuous - முடிவுற்ற எதிர்காலத் தொடர்வினை
Like the future perfect simple, this form is used to project ourselves forward in time and to look back. It refers to events or actions that are currently unfinished but will be finished at some future time. It is most often used with a time expression.
Example: Next year I will have been working here for four years.
Future Perfect Continuous - Rules
- I/We/You/They/He/She/It - டன் will have been அல்லது would have been மற்றும் continuous tense வரும்.
Future Perfect Continuous - Examples
Affirmative Sentences
- If you have told me, I would have been taking the class till he comes - நீங்கள் என்னிடம் சொல்லியிருந்தால், நான் அவர் வரும் வரை வகுப்பு எடுத்துக் கொண்டிருந்திருப்பேன்.
- Would you have been taking notes till 10 o’clock? - நீங்கள் பத்து மணி வரை குறிப்பு எடுத்துக் கொண்டிருந்திருப்பீர்களா?
- If there had been no power cut, I would have been taking notes till 10 o’clock.
- மின்தடை இல்லாமல் இருந்திருந்தால், நான் பத்து மணி வரை குறிப்பு எடுத்துக் கொண்டிருந்திருப்பேன்.
- We would have been taking till tomorrow - நாங்கள் நாளை வரை எடுத்துக் கொண்டிருந்திருப்போம்.
Negative Sentences
- We will not have been taking notes for an hour - நாங்கள் ஒரு மணி நேரமாக குறிப்புகள் எடுத்து கொண்டிருந்திருக்க மாட்டோம்.
- She won't have been taking any breaks all day - அவள் நாள் முழுவதும் எந்த ஓய்வும் எடுத்துக் கொண்டிருந்திருக்கமாட்டாள் .
Interrogative Sentences
Listening Practice
இந்த ஆடியோவில் உள்ள உரையாடலைக் கேட்டு, வெவ்வேறு காலங்களில், ஆங்கில வாக்கியங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதோடு தங்களின் கவனித்துக் கேட்கும் திறனையும், ஆங்கில உச்சரிப்பையும் மேம்படுத்துங்கள்.
Simple example sentences using different tense forms
🎧 Listen - கேட்கவும்
Summary
You have now seen how English expresses time through four major tense categories: simple, continuous, perfect, and perfect continuous. Practice making and speaking sentences daily to build confidence in using English tenses in real conversations.
Simple sentences in different tenses for the verb take is given in this page.
இந்தக் பக்கத்தில் எடு என்ற வினைச்சொல்லிற்கு வெவ்வேறு காலங்களில் சிறு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
Similarly make simple sentences in different tenses using the verb go
இதேபோல் போ என்ற வினைச்சொல்லிற்கு வெவ்வேறு காலங்களில் சிறு வாக்கியங்களை உருவாக்குங்கள்.
Practice tips
Keep practising by saying the example sentences out loud and using them in real life situations. Your command over commonly used verbs like “take” in different tenses forms a solid base for more advanced English skills.
Do it yourself
Try to make sentences using the verb wash
| Tense Form | English | Tamil |
|---|---|---|
| Present | learn | கற்றுக்கொள் |
| Past | learned | கற்றுக்கொண்டேன் |
| Participle | learned | கற்றிரு- |
| Continuous | learning | கற்றுக்கொண்டிரு- |
Practice common Phrases using the verb 'take-எடு' Active voice and Passive Voice Idioms-சொலவடை Homophones and Heterophones Learn to ask Questions
