Common English Phrases Using the Verb 'Take' With Tamil Meaning
On this page, you will find common phrases using the verb take in different tenses and practical daily situations. Each phrase is presented in English with the Tamil equivalent so that Tamil speakers can understand and use them confidently in real conversations.
How to use the verb take in everyday Spoken English
Use the verb "take" in daily life to mean carrying an object, using transport, needing time, eating or drinking, or doing a daily action.
Daily Phrases with 'Take'
- Take this. — இதை எடுத்துக்கொள்.
- Take that. — அதை எடுத்துக்கொள்.
- Take one. — ஒன்றை எடுத்துக்கொள்.
- Take both. — இரண்டையும் எடுத்துக்கொள்.
- Take a shower. — குளி.
- I take a shower every morning. — நான் தினமும் காலையில் குளிக்கிறேன்.
- Take a break. — ஓய்வு எடு.
- We take a break at noon. — நாங்கள் மதிய வேளையில் ஓய்வு எடுக்கிறோம்.
- Please take a seat. — தயவுசெய்து அமருங்கள்.
- She takes a lot of photos. — அவள் நிறையப் படங்கள் எடுக்கிறாள்.
- Take care! (when saying goodbye). — கவனமாக இருங்கள்! (விடைபெறும்போது).
- Take a photo. — ஒரு புகைப்படம் எடு.
- Can you take a photo of us? — எங்களை ஒரு புகைப்படம் எடுக்க முடியுமா?
Carrying things (Take — எடுத்துச் செல்)
- Take this to the office. — இதை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.
- Take the bag with you. — பையை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
Transportation (Take — செல்)
- I take the bus to work. — நான் வேலைக்கு பேருந்தில் செல்கிறேன்.
- Let's take the train. — நாம் ரயிலில் செல்வோம்.
Choosing / Buying (Take — வாங்கு / தேர்ந்தெடு)
- I'll take this one. — நான் இதை எடுத்துக்கொள்வேன்.
- I'll take two. — நான் இரண்டு எடுத்துக்கொள்வேன்.
Food and Medicine (Take — மருந்து உட்கொள்)
- Take the medicine. — மருந்தை உட்கொள்ளுங்கள்.
- Have you taken your medicine? — உங்கள் மருந்தை உட்கொண்டீர்களா?
- I take sugar in my tea. — நான் என் தேநீரில் சர்க்கரை சேர்த்துக்கொள்வேன்.
- Remember to take your medicine. — உங்கள் மருந்தை உட்கொள்ள நினைவில் கொள்ளுங்கள்.
Time (Take — நேரம் எடுத்துக்கொள்)
- How long does it take? — இதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
- It takes ten minutes. — இதற்கு பத்து நிமிடங்கள் ஆகும்.
- Take your time. — உங்களுக்குத் தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
- It will take some time to complete. — இதை முடிக்க சிறிது நேரம் ஆகும்.
Verb Forms of 'take'
| Verb Form | English | Tamil |
|---|---|---|
| Base Form | take | எடு |
| Past Tense | took | எடுத்தேன் |
| Past Participle | taken | எடுத்திரு— |
| Present Participle | taking | எடுத்துக் கொண்டிரு— |
taken — எடுத்திரு— மற்றும் taking — எடுத்துக் கொண்டிரு— ஆகிய வினையெச்சங்கள் உதவி வினைச்சொற்களுடன் சேர்ந்து முழுமையான வினைச்சொற்றொடர்களை உருவாக்குகின்றன.
Example Sentences in Different Tense Forms
The example sentences include simple, continuous, perfect and perfect continuous forms to help you see how take changes in different contexts.
- I take the dog for a walk. — நான் நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறேன்.
- I took the 10.30 flight to London. — நான் லண்டனுக்குச் செல்லும் 10.30 மணி விமானத்தில் சென்றேன்.
- I will take the bus tomorrow. — நாளை நான் பேருந்தில் செல்வேன்.
- I am taking a walk in the park. — நான் பூங்காவில் நடந்து கொண்டிருக்கிறேன்.
- I was taking the bus when you called. — நீங்கள் அழைத்தபோது நான் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன்.
- I will be taking the exam at 10 AM tomorrow. — நாளை காலை 10 மணிக்கு நான் தேர்வு எழுதிக் கொண்டிருப்பேன்.
- I have taken the exam two times. — நான் இரண்டு முறை அந்த தேர்வை எழுதியிருக்கிறேன்.
- I had taken a seat before you arrived. — நீங்கள் வருவதற்கு முன்பே நான் அந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன்.
- By 5 PM, I will have taken my exam. — மாலை 5 மணிக்குள் நான் என் தேர்வை எழுதியிருப்பேன்.
- I have been taking medicine for two years. — நான் இரண்டு ஆண்டுகளாக மருந்து எடுத்துக் கொண்டு வருகிறேன்.
- I had been taking medicine for two years. — நான் இரண்டு ஆண்டுகளாக மருந்து எடுத்துக் கொண்டிருந்தேன்.
- By July, I will have been taking the train to work for six months. — ஜூலை மாதத்திற்குள், நான் வேலைக்கு ரயிலில் செல்லத் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியிருக்கும்.
Questions and Responses
These are practical questions and answers you can start using immediately — whether at home, school, work, or while traveling abroad.
Questions and Responses using Modal Verbs
- May I take this? — நான் இதை எடுக்கலாமா?
- Shall I take this? — நான் இதை எடுக்கட்டுமா?
- Ok. You go and take that. — சரி. நீ போய் அதை எடு.
- Shall I take the oranges? — நான் ஆரஞ்சுப் பழங்களை எடுக்கட்டுமா?
- Take one apple and some grapes. — ஒரு ஆப்பிளும் கொஞ்சம் திராட்சையும் எடுங்கள்.
- Could you please take this? — நீங்கள் இதை எடுக்க முடியுமா?
- Can't you take that? — நீங்கள் அதை எடுக்க முடியாதா?
- I can take that. — என்னால் அதை எடுக்க முடியும்.
- I can take a printout. — என்னால் பிரிண்ட் அவுட் எடுக்க முடியும்.
- I can't take money from the bank today. — வங்கியிலிருந்து இன்று என்னால் பணம் எடுக்க முடியாது.
- Would you take photos? — நீங்கள் புகைப்படம் எடுப்பீர்களா?
- No. My brother will take photos. — இல்லை. என் சகோதரர் புகைப்படம் எடுப்பார்.
- Will you take that? — நீ அதை எடுப்பாயா?
- I'll take this. — நான் இதை எடுப்பேன்.
- Won't you take that? — நீ அதை எடுக்க மாட்டாயா?
- I won't take that. — நான் அதை எடுக்க மாட்டேன்.
- Are you taking medicine for diabetes? — நீங்கள் நீரிழிவு நோய்க்கான மருந்து எடுத்துக்கொள்கிறீர்களா?
- Yes. I am taking medicine for diabetes. — ஆமாம். நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
- No. I am not taking medicine for diabetes. — இல்லை. நான் நீரிழிவு நோய்க்கான மருந்து உட்கொள்ளவில்லை.
- I am not taking any medicine for high blood pressure now. — நான் இப்போது உயர் இரத்த அழுத்தத்திற்காக எந்த மருந்தும் எடுத்துக்கொள்வதில்லை.
- Would she be taking the bus? — அவள் பேருந்தில் செல்வாளா?
- Yes. She would be taking the bus. — ஆமாம். அவள் பேருந்தில் சென்று கொண்டிருப்பாள்.
- Have you been taking medicine for BP for two years? — நீங்கள் இரண்டு ஆண்டுகளாக ரத்த அழுத்தத்திற்கான மருந்து எடுத்து வருகிறீர்களா?
- Yes. I have been taking medicine for two years. — ஆம். நான் இரண்டு ஆண்டுகளாக மருந்து எடுத்து வருகிறேன்.
- No. I am not taking any medicine. — இல்லை. நான் எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளவில்லை.
Learn more about will/would usage shall/should usage can/could usage
Questions and Responses using 'How'
- How should I take the medicine? — நான் இந்த மருந்தை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?
- Take one tablet in the morning after food. — காலை உணவுக்குப் பிறகு ஒரு மாத்திரையை உட்கொள்ளுங்கள்.
- How are you going to take that? — நீங்கள் அதை எப்படி எடுக்கப் போகிறீர்கள்?
- I don't know how to take that. — அதை எப்படி எடுப்பதென்று எனக்குத் தெரியாது.
- How much did you take? — நீங்கள் எவ்வளவு எடுத்தீர்கள்?
- I took only this much. — நான் இவ்வளவு தான் எடுத்தேன்.
- How much time does it take to cook rice? — அரிசி சமைக்க எவ்வளவு நேரம் ஆகும்?
- How many did you take? — நீ எத்தனை எடுத்தாய்?
- I took only two. — நான் இரண்டு மட்டும் தான் எடுத்தேன்.
- I took some dry fruits. — நான் கொஞ்சம் உலர் பழங்கள் எடுத்தேன்.
- I took one or two apples. — நான் ஒன்றிரண்டு ஆப்பிள் பழங்கள் எடுத்தேன்.
- I took a few guavas. — நான் சில கொய்யாப்பழங்கள் எடுத்தேன்.
- How can I take better care of my plants? — எனது செடிகளை நான் எவ்வாறு சிறப்பாகப் பராமரிக்கலாம்?
- Water the plant daily. Till the soil and put some manure monthly. — செடிக்குத் தினமும் தண்ணீர் ஊற்றவும். மாதந்தோறும் மண்ணைக் கிளறிவிட்டு, சிறிது உரம் இடவும்.
- How would she take the bag home? — அவள் பையை எப்படி வீட்டிற்கு எடுத்துச் செல்வாள்?
- I would help her to take it. — நான் அவளுக்கு அதை எடுக்க உதவுவேன்.
- How could she take the bag from the loft? — அவளால் எப்படி பரணிலிருந்து பையை எடுக்க முடியும்?
- How did you take that? — நீ அதை எப்படி எடுத்தாய்?
- I took it using a ladder. — நான் ஏணியைப் பயன்படுத்தி அதை எடுத்தேன்.
- How did you take that amazing photo? — அந்த அற்புதமான புகைப்படத்தை நீங்கள் எப்படி எடுத்தீர்கள்?
- I took that photo with my Canon Digital camera. — அந்தப் புகைப்படத்தை எனது கேனான் டிஜிட்டல் கேமராவைக் கொண்டு எடுத்தேன்.
- How long will it take to get there? — அங்கே செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?
- Only half an hour. — அரை மணி நேரம் தான்
- It will take two hours to reach there. — அங்கு சென்றடைய இரண்டு மணி நேரம் ஆகும்.
- How often do you take medicine? — நீங்கள் எவ்வளவு அடிக்கடி மருந்து உட்கொள்கிறீர்கள்?
- I take medicine twice a day. — நான் ஒரு நாளைக்கு இரண்டு முறை மருந்து எடுத்துக்கொள்கிறேன்.
- How often do you take a break? — நீங்கள் எவ்வளவு அடிக்கடி இடைவேளை எடுக்கிறீர்கள்?
- I take a short break once an hour. — நான் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு சிறிய இடைவேளை எடுக்கிறேன்.
- How often do you take a bus to work? — நீங்கள் எவ்வளவு அடிக்கடி வேலைக்குச் செல்ல பேருந்தைப் பயன்படுத்துகிறீர்கள்?
- I take a bus every weekday. — வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நான் பேருந்தில் செல்கிறேன்.
- How long does it take to get to the station? — நிலையத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும்?
- It takes 15 minutes by bus. — பேருந்தில் 15 நிமிடங்கள் ஆகும்.
How to ask questions in English?
Questions and Responses using 'Wh—word'
- Why are you going to take that? — நீங்கள் ஏன் அதை எடுக்கப் போகிறீர்கள்?
- Why did you take that? — நீங்கள் ஏன் அதை எடுத்தீர்கள்?
- The teacher told me to take the book — ஆசிரியர் என்னை புத்தகத்தை எடுக்கச் சொன்னார்கள்.
- For whom did you take it? — நீ யாருக்காக அதை எடுத்தாய்?
- I took that for my daughter. — நான் அதை எனது மகளுக்காக எடுத்தேன்.
- Who took it? — யார் அதை எடுத்தாா்கள்?
- I took it because it is mine. — நான் அதை எடுத்தேன், ஏனெனில் அது என்னுடையது.
- Who told you to take the book? — உன்னைப் புத்தகத்தை எடுக்கச் சொன்னது யார்?
- Nobody told me to take the book. — யாரும் என்னை புத்தகத்தை எடுக்கச் சொல்லவில்லை.
- Ram told me to take the book — ராம் என்னை புத்தகத்தை எடுக்கச் சொன்னார்.
- Mother told me to take a bowl — அம்மா என்னை ஒரு கிண்ணம் எடுக்கச் சொன்னார்கள்.
- Who took the money? — பணத்தை யார் எடுத்தார்கள்?
- Hari took the money to pay exam fees. — தேர்வுக் கட்டணம் செலுத்த ஹரி பணத்தை எடுத்தான்.
- Who has taken that? — யார் அதை எடுத்திருக்கிறார்கள்?
- You must have taken that. — நீ அதை கட்டாயம் எடுத்திருக்க வேண்டும்.
- Did you take that? — நீங்கள் அதை எடுத்தீர்களா?
- Where did you take this? — நீங்கள் இதை எங்கே எடுத்தீர்கள்?
- I took this there. — நான் இதை அங்கு எடுத்தேன்.
- I took this photo in Mumbai. — நான் இந்த புகைப்படத்தை மும்பையில் எடுத்தேன்.
- When did you take that? — நீங்கள் அதை எப்பொழுது எடுத்தீர்கள்?
- I took it two days ago. — நான் அதை இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்தேன்.
Learn more about wh-word questions
How to say the Tamil sentences in English?
- தயவுசெய்து இதை எடுங்கள்.
please ithai edungal.
Please take this. - அதை எடுக்காதீர்கள்.
athai edukkatheerkal.
Don't take that. - இந்த பழங்களை எடுங்கள்.
intha pazhangalai edungal.
Take these fruits. - ஒரு ஸ்பூன் உப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.
oru spoon uppu eduththukkollungal.
Take a spoonful of salt. - இதை எடுங்கள் அல்லது அதை எடுங்கள்.
ithai edungal allathu athai edungal.
Take either this or that. - அவை இரண்டில் எதையும் எடுக்காதே.
avai irandil ethaiyum edukkathe.
Don't take either of them. - எதையும் எடுக்காதீர்கள்.
ethayum edukkatheerkal.
Don't take anything. - இரண்டையும் எடுக்கவும்.
irandaiyum edukkavum.
Take both. - அவர் இரண்டையும் எடுத்தார்.
irandaiyum eduththaar.
He took both. - அவர் இரண்டையும் எடுத்திருக்கிறார்.
irandaiyum eduthirukkirar.
He has taken both. - ஒன்று மட்டும் எடு.
ondru mattum edu.
Take only one. - இன்னொன்று எடுத்துக் கொள்ளுங்கள்.
innondru eduthu-k kollungal.
Take one more. - வேறொன்று எடுங்கள்.
verondru edungal.
Take another one. - உங்களுக்கு விருப்பமானதை எடுங்கள்.
ungalukku viruppamanathai edungal.
Take whatever you like. - இதை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.
ithai aluvalakathirku eduthu-ch sellungal.
Take this to the office. - தேவையானதை மட்டும் எடு.
thevayanathai mattum edu.
Take only the necessary things. - மாத்திரையை தவறாமல் எடு.
maathiraiyai thavaramal edu.
Take the tablet without fail. - அந்தப் புத்தகத்தை எடு.
andha puthakathai edu.
Take that book. - மதிய உணவை எடுத்துச் செல்ல மறக்காதே.
mathiya unavai eduththu-ch chella marakkathe.
Don't forget to take your lunch with you. - என்னை இதை எடுக்க விடுங்கள்.
ennai ithai edukka vidungal.
Let me take this. - முதலில் அதை என்னை எடுக்க விடுங்கள்.
athai muthalil ennai edukka vidungal.
Let me take it first. - நாம் ஒரு இடைவேளை எடுப்போம்.
naam oru idaivelai eduppom.
Let's take a break. - நாம் பார்க்கலாம்.
naam parkkalam.
Let's take a look. - நாம் டாக்ஸியில் செல்ல வேண்டாம்.
naam taxi-yil sella vendam.
Let's not take a taxi. - நான் உன்னை அதை எடுக்க விட மாட்டேன்.
naan unnai athai edukka vida maaten.
I won't let you take it. - நீ அவசியம் ஓய்வு எடுக்கவேண்டும்.
nee avasiyam oivu edukka vendum.
You must take a break. - நீ அடிக்கடி விடுப்பு எடுக்கக் கூடாது.
nee adikkadi viduppu edukka-k kudathu.
You mustn't take leave too often. - நீ இதை எடுக்க வேண்டும்.
nee ithai edukka vendum.
You should take this. - நீ ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுக்கக் கூடாது.
nee aalayathin ullae puhaippadam edukka-k kudaathu.
You shouldn't take photos inside the temple. - நான் எடுத்திருக்கிறேன்.
naan eduthirukkiren.
I have taken. - ராம் எடுத்திருந்தான்.
ram eduthirunthan.
Ram had taken. - பணத்தை யார் எடுத்திருப்பார்கள்?
panathai yaar eduthirupparkal?
Who would have taken the money? - பணத்தை அவன் எடுத்திருப்பான்.
panathai avan eduthiruppan
He would have taken the money. - பணத்தை அவன் எடுத்திருக்கக் கூடும்.
panathai avan eduththirukkak koodum.
He might have taken the money. - அதற்குள் அவன் பணத்தை எடுத்திருக்க மாட்டான்.
panathai avan eduthirukka mattan.
He won't have taken the money by then. - யார் டிக்கெட் எடுக்கப் போகிறார்கள்?
yaar ticket edukka-p pokirarkal?
Who is going to take the tickets? - நீங்கள் மதிய உணவு எடுத்துக் கொண்டீா்களா?
neengal mathiya unavu eduthu-k kondirkala?
Did you take your lunch? - ஆமாம். நான் எடுத்து விட்டேன்.
aamam. naan eduthu viten.
Yes. I took. - இல்லை. நான் எடுக்கவில்லை.
illai. naan edukkavillai.
No. I didn't take. - அப்பாவை எடுக்கச் சொல்.
appavai edukka-ch sol.
Ask Dad to take it. - அப்பா, மூன்று டிக்கெட் எடுங்கள்.
appa, moondru ticket edungal.
Dad, take three tickets. - அப்பா அதை எடுத்திருப்பார்.
appa athai eduthiruppar.
Dad would have taken it. - எனக்கும் எடுங்கள்.
enakkum edungal.
Take for me too. - நீ என்னுடைய புத்தகத்தை எடுத்திருக்கிறாயா?
nee ennuduya puthakathai eduthirukiraya?
Have you taken my book? - நீ என்னுடைய புத்தகத்தை எடுத்தாயா?
nee ennudaya puthakathai eduthaya?
Did you take my book? - நான் உன்னுடைய புத்தகத்தை எடுத்தேன்.
naan unnudaya puthakathai eduthen.
I took your book. - நான் உன்னுடைய புத்தகத்தை எடுக்கவில்லை.
naan unnudaya puthakathai edukkavillai.
I didn't take your book. - ராம் அதை எடுத்திருக்கிறான்.
ram athai eduthirukkiran.
Ram has taken it. - அவர் அதை எடுத்திருந்தார்.
avar athai eduththirunthar.
He had taken it. - அவர்கள் அதை எடுத்திருக்கவில்லை.
avarkal athai eduththirukkavillai.
They haven't taken it. - அந்தப் பையை யார் எடுக்கப் போகிறார்கள்?
antha paiyai yaar edukka-p pokirarkal?
Who is going to take the bag? - ராம் பையை எடுக்க மாட்டான்.
ram paiyai edukka mattan.
Ram won't take the bag. - அவளை பையை எடுக்கச் சொல்லுங்கள்.
avalai paiyai edukka-ch sollungal.
Ask her to take the bag. - நான் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
naan ungalidamirunthu vidai perukiren.
I take leave of you (formal). - Ok. Bye. Take care.
Common Mistakes with 'Take'
-
❌ I am taking tea every morning.
✅ I take tea every morning.
(தினமும் செய்யும் வழக்கமான செயல்களுக்கு Present Continuous (`am taking`) பயன்படுத்தக் கூடாது; Simple Present (`take`) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.) -
❌ She took a picture for me.
✅ She took a picture of me.
(ஒருவரைப் புகைப்படம் எடுப்பதாகக் கூறும்போது 'picture of' எனக் கூற வேண்டும், 'picture for' அல்ல.) -
❌ Please take a rest.
✅ Please take rest. / Please get some rest.
('Rest' என்பது எண்ண முடியாத பெயர்ச்சொல் (uncountable noun), எனவே அதன் முன் 'a' பயன்படுத்தக் கூடாது.) -
❌ I will take exam tomorrow.
✅ I will sit for an exam tomorrow. / I will take an exam tomorrow.
('Exam' என்பது எண்ணக்கூடிய பெயர்ச்சொல் (countable noun), எனவே 'an exam' எனக் குறிப்பிட வேண்டும்.) -
❌ It took to me two hours.
✅ It took me two hours.
(நேரத்தைக் குறிப்பிடும் போது 'took' அடுத்து நேரடியாக நபரைக் குறிப்பிட வேண்டும்; 'to me' எனப் பயன்படுத்தக் கூடாது.)
Frequently Asked Questions (FAQ)
-
Q: What is the past tense of take?
A: The past tense of take is took.
Example: I took the bus yesterday. — நான் நேற்று பேருந்தில் சென்றேன்.
-
Q: What is the past participle of take?
A: The past participle of take is taken.
Example: I have taken the exam. — நான் தேர்வு எழுதியுள்ளேன்.
-
Q: What does "take a break" mean?
A: "Take a break" means to stop what you are doing for a short time to rest, relax, or do something else.
Example: I need to take a coffee break. — நான் காபி குடிக்க ஒரு இடைவேளை எடுக்க வேண்டும்.
-
Q: What does "take a bus" mean?
A: "Take a bus" means to travel from one place to another by bus.
Example: I take the bus to work. — நான் வேலைக்குச் செல்ல பேருந்தில் செல்கிறேன்.
-
Q: What is the difference between "take" and "bring"?
A: The main difference between bring and take is the direction of movement relative to the speaker. Bring means to move something toward the speaker or listener, while take means to move something away from the speaker.
Examples:
Take this trash outside, please. (Moving away from you) — தயவுசெய்து இந்தக் குப்பையை வெளியே எடுத்துச் செல்லுங்கள்.
Please bring a cup of tea to my desk. (Moving toward you) — தயவுசெய்து என் மேசைக்கு ஒரு கோப்பை தேநீர் கொண்டு வாருங்கள். -
Q: How do I use “take” with time?
A: We use the verb "take" with time to show how much duration an action needs or requires. It normally uses the dummy subject "it" or a specific person, following patterns like "It takes [time]" or "It takes [person] [time] to do something".
Examples:
- It takes ten minutes to boil water. — தண்ணீரை கொதிக்க வைக்க பத்து நிமிடங்கள் ஆகும்.
- The exam takes two hours. — தேர்வுக்கு இரண்டு மணி நேரம் ஆகும்.
- It takes me twenty minutes to walk to the shop. — கடைக்கு நடந்து செல்ல எனக்கு இருபது நிமிடங்கள் ஆகும்.
- It takes them all day to clean the house. — வீட்டைச் சுத்தம் செய்ய அவர்களுக்கு நாள் முழுவதும் ஆகும்.
Go to tense forms Go to Say in English Go to Questions and Responses
Summary (English + Tamil explanation)
You have now learned many useful English phrases with "take" that are commonly used in everyday conversation. Practising these sentences will help you become more fluent and confident when speaking English.
இப்பக்கத்தில் எடு என்ற வினைச்சொல்லுடன் பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் நீங்கள் கற்றுக்கொண்டுள்ளீர்கள். இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.
Practice Tips
Keep practising by saying the phrases out loud and using them in real life situations. Your command over commonly used verbs like "take" forms a solid base for more advanced English skills.