Common English Phrases Using the Verb 'Give' With Tamil Meaning
Learning everyday phrases is one of the most effective ways to improve your spoken English. On this page, you will find common phrases using the verb "give" in different tenses and practical daily situations. Each phrase is presented in English with Tanglish pronunciation and the Tamil equivalent so that Tamil speakers can understand and use them confidently in real conversations.
How to Use the Verb 'Give'
The verb "give" (கொடு / தா) is an irregular verb used to transfer something to another person. It generally follows two main structural patterns in English:
- Pattern 1 (Verb + Someone + Something):
Example: Give me the book. (எனக்கு அந்தப் புத்தகத்தைத் தா.) - Pattern 2 (Verb + Something + to + Someone):
Example: Give the book to him. (அந்தப் புத்தகத்தை அவனிடம் கொடு.)
It is also widely used in common phrasal verbs such as Give up (கைவிடு / விட்டுவிடு) and Give back (திரும்பிக் கொடு).
Verb Definition and Tenses
| Verb Form | English | Tamil |
|---|---|---|
| Base Form | Give | கொடு |
| Past Tense | Gave | கொடுத்தேன் |
| Past Participle | Given | கொடுத்திரு- |
| Present Participle | Giving | கொடுத்துக்கொண்டிரு- |
given - கொடுத்திரு- மற்றும் giving - கொடுத்துக்கொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெறும்.
Example Sentences in Different Tense Forms
The examples include simple present, past, future, continuous, and imperative forms to help you see how "give" changes in different contexts. These are practical sentences you can start using immediately—whether at home, school, work, or while travelling abroad.
- You give the book - நீங்கள் புத்தகத்தைக் கொடுங்கள்.
- I give money to him - நான் அவருக்குப் பணம் கொடுக்கிறேன்.
- I gave the key yesterday - நான் நேற்று சாவியைக் கொடுத்தேன்.
- I will give the report tomorrow - நான் நாளை அறிக்கையைக் கொடுப்பேன்.
- I am giving medicine to mother - நான் அம்மாவுக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
- I was giving flood relief materials - நான் வெள்ள நிவாரணப் பொருட்களை கொடுத்துக் கொண்டிருந்தேன்.
- I will be giving food to Hari - நான் ஹரிக்கு உணவு கொடுத்துக் கொண்டிருப்பேன்.
- I have given the assignment to the teacher - நான் ஆசிரியரிடம் ஒப்படைப்பைக் கொடுத்திருக்கிறேன்.
- I had given the project document earlier - நான் ஏற்கனவே திட்டப் பணி ஆவணத்தைக் கொடுத்திருந்தேன்.
- I would have given the money to you - நான் உங்களிடம் பணத்தைக் கொடுத்திருப்பேன்.
- I have been giving donations every month - நான் ஒவ்வொரு மாதமும் நன்கொடை கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறேன்.
- I had been giving blood till 2018 - நான் 2018 வரை இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்திருந்தேன்.
- I would have been giving financial support every quarter - நான் ஒவ்வொரு காலாண்டிலும் நிதி உதவி கொடுத்துக் கொண்டிருந்திருப்பேன்.
Questions and Responses
- Did you give the key to him? - நீ சாவியை அவரிடம் கொடுத்தாயா?
- No. I didn’t give the key. - இல்லை. நான் சாவியைக் கொடுக்கவில்லை.
- Yes. I gave him the key. - ஆமாம். நான் அவரிடம் சாவியைக் கொடுத்தேன்.
- How much money did you give? - நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?
- I gave him only a little money. - நான் அவருக்குக் கொஞ்சம் பணம் தான் கொடுத்தேன்.
- You don’t give money to him. - நீ அவனுக்குப் பணம் கொடுக்காதே.
- When did he give the report? - அவர் எப்பொழுது அறிக்கையைக் கொடுத்தார்?
- He gave the report yesterday. - அவர் நேற்று அறிக்கையைக் கொடுத்தார்.
- Why did you give your mobile to him? - நீங்கள் ஏன் உங்களுடைய கைபேசியை அவரிடம் கொடுத்தீர்கள்?
- He asked for my phone to call his father. - அவர் தனது தந்தையை அழைப்பதற்காக என் தொலைபேசியைக் கேட்டார்.
- Where did you give the old books? - நீங்கள் பழைய புத்தகங்களை எங்கு கொடுத்தீர்கள்?
- I gave the books to the Library - புத்தகங்களை நான் நூலகத்திற்குக் கொடுத்தேன்.
- Didn’t you give the tablet to mother? - நீ அம்மாவுக்கு மாத்திரை கொடுக்கவில்லையா?
- Why didn’t you give the tablet on time? - நீ ஏன் நேரத்தில் மாத்திரை கொடுக்கவில்லை?
- I forgot to give the tablet - நான் மாத்திரை கொடுக்க மறந்துவிட்டேன்.
- May I give this document? - நான் இந்த ஆவணத்தைக் கொடுக்கலாமா?
- Should I give my original certificate? - நான் கட்டாயம் என்னுடைய அசல் சான்றிதழைக் கொடுக்கவேண்டுமா?
- No. You shouldn't give the original document. - இல்லை. நீங்கள் அசல் ஆவணத்தைக் கொடுக்கக்கூடாது.
- Where are they giving free masks? - எங்கு அவர்கள் இலவச முகக்கவசம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?
- Where is the free mask being given? - இலவச முகக்கவசம் எங்கு கொடுக்கப்படுகிறது?
- Where was the free mask given yesterday? - இலவச முகக்கவசம் நேற்று எங்கு கொடுக்கப்பட்டது?
- They are giving it in the ration shop - நியாய விலைக் கடையில் கொடுக்கிறார்கள்.
- I want to give money to PM Relief Fund - நான் பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் கொடுக்க விரும்புகிறேன்.
- How will you give the donation? - நீங்கள் எப்படி நன்கொடையைக் கொடுப்பீர்கள்?
- I will give the donation by cheque - நான் காசோலையாக நன்கொடையைக் கொடுப்பேன்.
- How many times have you given blood? - நீ எத்தனை முறை இரத்தம் கொடுத்திருக்கிறாய்?
- I have given blood only once - நான் ஒரு முறை தான் இரத்தம் கொடுத்திருக்கிறேன்.
- What for did you give the money? - எதற்காக நீ பணம் கொடுத்தாய்?
- I gave money to pay the exam fees. - தேர்வுக் கட்டணம் செலுத்த நான் பணம் கொடுத்தேன்.
- When did you give the feedback form? - நீங்கள் எப்பொழுது கருத்துப் படிவத்தைக் கொடுத்தீர்கள்?
- I gave the feedback form last month - நான் போன மாதம் கருத்துப் படிவத்தைக் கொடுத்தேன்.
- When had you given the advance money? - நீ எப்பொழுது முன்பணத்தைக் கொடுத்திருந்தாய்?
- I had given the advance money last year - நான் போன வருடம் முன்பணத்தைக் கொடுத்திருந்தேன்.
- How much money can you give me? - உங்களால் எனக்கு எவ்வளவு பணம் தர முடியும்?
- How much money will you give for this? - இதற்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?
- I can give Rs.5000 only. - 5000 ரூபாய் தான் என்னால் தர முடியும்.
- Please give me a hint on how much it costs. - இதன் விலை எவ்வளவு என்று ஒரு குறிப்பு கொடுங்கள்.
- Approximately Rs.10000/- - தோராயமாக 10000 ரூபாய்.
- How much food should I give the cat? - பூனைக்கு எவ்வளவு உணவு கொடுக்க வேண்டும்?
-
Dry food: About 10 to 15 grams per kg of body weight daily. - உலர் உணவு: உடல் எடையில் ஒரு கிலோகிராமுக்குத் தினமும் சுமார் 10 முதல் 15 கிராம் வரை.
Wet food: About 50 to 65 grams per kg of body weight daily. - ஈரப்பதமான உணவு: உடல் எடையில் ஒரு கிலோகிராமுக்குத் தினமும் சுமார் 50 முதல் 65 கிராம் வரை. - Give me an idea of how much time we have. - நமக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்று ஒரு யோசனை கொடுங்கள்.
- We have only two hours left. - நமக்கு இன்னும் இரண்டு மணிநேரம் மட்டுமே உள்ளது.
Learn more about may/might shall/should can/could usage
How to Say in English
Practice translating daily spoken statements into English using "give" along with Tanglish pronunciation and Tamil translation.
-
Tamil: உன்னுடைய கைபேசியை ஒரு நிமிடம் தா.
Tanglish: Unnodaiya kaipesiyai oru nimidam thaa.
English: Give your mobile for a minute. -
Tamil: நான் ஏற்கனவே சாவியை கொடுத்துவிட்டேன்.
Tanglish: Naan earkanavey saaviyai koduthuvittaen.
English: I gave the key already. -
Tamil: நான் இந்த கடிதத்தை என்னுடைய பெற்றோருக்கு கொடுப்பேன்.
Tanglish: Naan indha kadhidhathai ennodaiya petroorukku koduppaen.
English: I will give this letter to my parents. -
Tamil: அவள் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.
Tanglish: Aval ellorukkum prasadham koduthu kondirukkiraal.
English: She is giving Prasadham to everyone. -
Tamil: அவர் கோடையில் மோர் கொடுத்துக் கொண்டிருந்தார்.
Tanglish: Avar koodaiyil moor koduthu kondirundhaar.
English: He was giving buttermilk in summer. -
Tamil: அவள் ஹரிக்கு உணவு கொடுத்துக் கொண்டிருப்பாள்.
Tanglish: Aval Harikku unavu koduthu kondiruppaal.
English: She will be giving food to Hari. -
Tamil: மேலாளர் எனக்கு நிறைய வேலை கொடுத்திருக்கிறார்.
Tanglish: Melaalar enakku niraiya vaelai koduthirukkiraar.
English: Manager has given me a lot of work. -
Tamil: மேலாளர் கிளம்புவதற்கு முன்பு எனக்கு நிறைய வேலை கொடுத்திருந்தார்.
Tanglish: Manager kilambuvadharkku munbu enakku niraiya vaelai koduthirundhaar.
English: Manager had given me a lot of work before leaving. -
Tamil: மேலாளர் இந்நேரத்திற்கு எனக்கு நிறைய வேலை கொடுத்திருப்பார்.
Tanglish: Melalar inneraththirku enakku niraiya velai koduththiruppar.
English: Manager would have given me a lot of work by now. -
Tamil: அவர் 2018-லிருந்து இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
Tanglish: Avar 2018-ilirundhu iratham koduthu kondirundhirukkiraar.
English: He has been giving blood since 2018. -
Tamil: அவர் 2018 வரை இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்திருந்தார்.
Tanglish: Avar 2018 varai iratham koduthu kondirundhirundhaar.
English: He had been giving blood till 2018. -
Tamil: நான் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிதி உதவி கொடுத்துக் கொண்டிருந்திருப்பேன்.
Tanglish: Naan moondru maadhathirku orumurai nidhi udhavi koduthu kondirundhiruppaen.
English: I would have been giving financial support once in three months. -
Tamil: எனக்கு முதலில் புத்தகத்தை தாருங்கள்.
Tanglish: Enakku mudhalil puthagathai thaarungal.
English: Give me the book first. -
Tamil: என்னுடைய குடையைத் திரும்பத் தா.
Tanglish: Ennodaiya kudaiyai thirumbath thaa.
English: Give back my umbrella. -
Tamil: என்னுடைய புத்தகத்தை உடனடியாகத் திரும்பத் தா.
Tanglish: Ennodaiya puthagathai udanaadiyaaga thirumbath thaa.
English: Give back my book immediately. -
Tamil: இந்த பழைய துணிகளை கொடுத்துவிடு.
Tanglish: Indha pazhaya thunigalai yaaraavadhu koduthuvidu.
English: Give away these old clothes. -
Tamil: கெட்ட சுகாதார பழக்கங்களை விட்டு விடு.
Tanglish: Ketta sugadhaara pazhakangalhai vittu vidu.
English: Give up bad health habits. -
Tamil: புகைப்பழக்கத்தை முழுவதுமாக விட்டு விடு.
Tanglish: Pugaipazhakathai muzhudhu maaga vittu vidu.
English: Give up smoking completely. -
Tamil: கெட்ட பழக்கங்களை வாழ்க்கையின் தொடக்கத்திலேயே விட்டு விடு.
Tanglish: Ketta pazhakangalai vaazhkkaiyin thodakkathilaeye vittu vidu.
English: Give up bad habits early in life. -
Tamil: நான் எனது இருக்கையை ஒரு சிறுவனுக்கு விட்டுக்கொடுத்தேன்.
Tanglish: Naan enadhu irukkayai oru siruvanukku vittuk koduthaen.
English: I gave up my seat to a little boy. -
Tamil: நம்பிக்கையை விட்டு விடாதே.
Tanglish: Nambikkaiyai vittu vidaadhae.
English: Don’t give up hope. -
Tamil: தயவுசெய்து உங்களுடைய நீல பேனாவைத் தாருங்கள்.
Tanglish: Dhayavuseydhu ungaludaiya neela penavaai thaarungal.
English: Please give your blue pen. -
Tamil: ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு கொடுங்கள்.
Tanglish: Aadharavatra kulandhaigalukku unavu kodungal.
English: Give food to the orphan children. -
Tamil: அவள் ஒவ்வொரு மாதமும் நன்கொடை கொடுக்கிறாள்.
Tanglish: Aval ovvoru maadhamaum naangodai kodukiraal.
English: She gives donation every month. -
Tamil: நான் உனக்கு சரியான பதில் கொடுப்பேன்.
Tanglish: Naan unakku sariyaana badhil koduppaen.
English: I will give you the right answer. -
Tamil: நான் உனக்கு தரமான புத்தகங்களை தருவேன்.
Tanglish: Naan unakku tharamana puthagangalai tharuvaen.
English: I will give you standard books. -
Tamil: நீங்கள் சரியான விளக்கம் கொடுக்கவேண்டும்.
Tanglish: Neengal sariyaana vilakkam kodukkavaendum.
English: You have to give proper explanation. -
Tamil: நீங்கள் ஹரிக்கு பணம் கொடுக்கவேண்டும்.
Tanglish: Neengal Harikku panam kodukkavaendum.
English: You have to give money to Hari. -
Tamil: நீங்கள் ஒவ்வொருவருக்கும் இனிப்பு கொடுக்கவேண்டும்.
Tanglish: Neengal ovvoruvarukkum inippu kodukkavaendum.
English: You have to give sweets to everyone. -
Tamil: நீங்கள் கட்டாயம் ரசீது கொடுக்கவேண்டும்.
Tanglish: Neengal kattayam raseedhu kodukkavaendum.
English: You should give receipt without fail. -
Tamil: நீங்கள் அவசியம் அசல் ஆவணங்களை கொடுக்கவேண்டும்.
Tanglish: Neengal avasiyam aasal aavanangalai kodukkavaendum.
English: You must give original documents. -
Tamil: நீங்கள் கட்டாயம் தவறான விவரங்களை கொடுக்கக் கூடாது.
Tanglish: Neengal kattayam thavaraana vivarangalai kodukka koodaadhu.
English: You shouldn’t give false details. -
Tamil: நீ உன் கருத்தை கொடுக்கலாம்.
Tanglish: Nee un karuthai kodukkalaam.
English: You may give your opinion. -
Tamil: உன்னால் நிதி உதவி கொடுக்க முடியும்.
Tanglish: Unnaal nidhi udhavi kodukka mudiyum.
English: You can give financial help. -
Tamil: உன்னால் ஒவ்வொரு முறையும் காரணங்கள் கொடுக்க முடியாது.
Tanglish: Unnaal ovvoru muraiyum kaaranangal kodukka mudiyaadhu.
English: You can’t give excuses every time. -
Tamil: என்னை என் விளக்கத்தை முதலில் கொடுக்கவிடுங்கள்.
Tanglish: Ennai en vilakkathai mudhalil kodukka vidungal.
English: Let me give my presentation first. -
Tamil: ஒவ்வொரு வீட்டிற்கும் நிவாரணப் பொருட்களை கொடு.
Tanglish: Ovvoru veettirgum nivaarana porutkalai kodu.
English: Give relief materials to each and every home. -
Tamil: கருத்துரு பதிவு படிவத்தை வேகமாகக் கொடுக்கவும்.
Tanglish: Karuthuru badhivu padhavathai vaegamaaga kodukkavum.
English: Give the feedback form fast. -
Tamil: உன்னால் முடியும் போது உதவி கொடு.
Tanglish: Unnaal mudiyum poothu udhavi kodu.
English: Give help when you can. -
Tamil: உன்னால் முடியும் போதெல்லாம் ஆலோசனை கொடு.
Tanglish: Unnaal mudiyum poothellaam aalochanai kodu.
English: Give advice whenever you can. -
Tamil: உங்களுடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுங்கள்.
Tanglish: Ungaludaiya kulandhaigalukku nalla kalviyaik kodungal.
English: Give good education to your children. -
Tamil: காய்கறி வாங்க நீங்கள் 500 ரூபாய் தான் கொடுத்தீர்கள்.
Tanglish: Kaikari vaanga neengal 500 roobai thaan kodutheergall.
English: You gave only Rs. 500 to buy vegetables. -
Tamil: தேர்வுக் கட்டணம் செலுத்த அப்பா 1000 ரூபாய் கொடுத்தார்.
Tanglish: Thaervu kattanam selutha appa 1000 roobai koduthaar.
English: Father gave Rs.1000 to pay exam fees. -
Tamil: அவள் அவளுடைய பிறந்தநாளுக்கு தோழிகளுக்கு இனிப்புக் கொடுக்கிறாள்.
Tanglish: Aval avaludaiya pirandhanalukku thozhigalukku inippu kodukiraal.
English: She gives sweets to her friends on her birthday. -
Tamil: நான் நாளை அறிக்கையைக் கொடுப்பேன்.
Tanglish: Naan naalai arikkaiyaik koduppaen.
English: I shall give the report tomorrow. -
Tamil: நாங்கள் எங்கள் முழு ஆதரவை கொடுப்போம்.
Tanglish: Naangal engal muzhu aadharavai koduppom.
English: We shall give our full support. -
Tamil: அவர் துல்லியமான தகவலை கொடுப்பார்.
Tanglish: Avar thulliyamaana thagavalai koduppaar.
English: He will give accurate information. -
Tamil: அவர்கள் தகுதியான மாணவர்களுக்கு கல்வித்தொகை கொடுப்பார்கள்.
Tanglish: Avargal thagudhiyaana maanavargalukku kalvidogai koduppaargal.
English: They will give scholarship to eligible students. -
Tamil: நாங்கள் அண்ணா நகரில் வெள்ள நிவாரணப் பொருட்களை கொடுத்துக் கொண்டிருந்தோம்.
Tanglish: Naangal Anna Nagaril vellani vaarana porutkalai koduthu kondirundhom.
English: We were giving flood relief materials in Anna Nagar. -
Tamil: நான் மாலையில் அம்மாவுக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தேன்.
Tanglish: Naan maalaiyil ammaavukku marundhu koduthu kondirundhaen.
English: I was giving medicine to mother in the evening. -
Tamil: பழைய துணிகளை முதியோர் இல்லத்துக்குக் கொடு.
Tanglish: Pazhaya thunigalai mudhiyor illathukku kodu.
English: Give old clothes to the Old Age Home. -
Tamil: சரி. நான் மாத நன்கொடையை முதியோர் இல்லத்துக்குக் கொடுக்கிறேன்.
Tanglish: Sari. Naan maadha nangoodaiyai mudhiyor illathukku kodukiraen.
English: Ok. I will give monthly donation to the Old Age Home. -
Tamil: நான் ஒரு கார் வாங்க கடன் தொகை கொடுத்தேன்.
Tanglish: Naan oru kaar vaanga kadan thogai koduthaen.
English: I gave loan amount to buy a car. -
Tamil: வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்கள்.
Tanglish: Veettil ullha periyavargalukku mariyaadhai kodungal.
English: Give respect to elders at home. -
Tamil: நேற்று நான் திட்டப் பணி ஆவணத்தைக் கொடுத்தேன்.
Tanglish: Naetru naan thittap pani aavanathai koduthaen.
English: Yesterday I gave the project document. -
Tamil: நாளை நான் பணத்தைக் கொடுப்பேன்.
Tanglish: Naalai naan panathai koduppaen.
English: I will give the money tomorrow. -
Tamil: நான் எனது சுய விவரங்களை யாருக்கும் கொடுக்க மாட்டேன்.
Tanglish: Naan enadhu suuya vivarangalai yaarukkum kodukka maattaen.
English: I won’t give my personal details to anyone. -
Tamil: நீங்கள் எப்பொழுதும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
Tanglish: Neengal eppozhudhum suvaadharaathirku mukkiyathuvam kodukka vaendum.
English: You should give priority to health always. -
Tamil: நான் அடிக்கடி நிதி உதவி கொடுப்பேன்.
Tanglish: Naan adikkadi nidhi udhavi koduppaen.
English: I will give financial assistance often. -
Tamil: ஆமாம். போன வருடம் நான் என் பங்களிப்பை கொடுத்திருந்தேன்.
Tanglish: Aamaam. Poona varudam naan en pangaliphai koduthirundhaen.
English: Yes. I had given my contribution last year. -
Tamil: அதை ஏன் கொடுத்துவிட்டாய்?
Tanglish: Athai aen koduthuvittai?
English: Why did you give that away? -
Tamil: எனக்கு ஏன் அறிவுரை கூறுகிறாய்?
Tanglish: Enakku aen arivurai koorukirai?
English: Why do you give me advice? -
Tamil: அவள் ஏன் அவனுக்கு ஒரு பொம்மையைக் கொடுத்தாள்?
Tanglish: Aval aen avanukku oru pommaiyaik koduthal?
English: Why did she give him a toy? -
Tamil: உன்னிடம் உள்ளதை என்னிடம் கொடு.
Tanglish: Unnidam ullathai ennidam kodu.
English: Give me what you have. -
Tamil: உன்னால் எதைக் கொடுக்க முடியும் என்பதை நான் அறிய விரும்புகிறேன்.
Tanglish: Unnal ethaik kodukka mudiyum enbathai naan ariya virumbukiren.
English: I want to know what you can give. -
Tamil: அவர்கள் உனக்கு எதைக் கொடுக்கிறார்கள் என்று என்னிடம் சொல்.
Tanglish: Avarkal unakku ethaik kodukkirarkal endru ennidam sol.
English: Tell me what they give you. -
Tamil: நான் எனது அண்டை வீட்டாருக்கு பண்டிகை இனிப்பு கொடுக்கப் போய்க் கொண்டிருக்கிறேன்.
Tanglish: Naan enadhu andai veettaarukku pandigai inippu kodukka poyik kondirukkiraen.
English: I am going to give festival sweets to my neighbours. -
Tamil: சரி. வருகிறேன்! சீக்கிரம் பார்க்கலாம்.
Tanglish: Sari. Varataam! Seikkiram paarkkalaam.
English: Ok. Bye! See you soon.
Learn more about will/would will/shall can/could usage
Common Mistakes with 'Give'
-
❌ I gave to him a book.
✅ I gave him a book. / I gave a book to him.
Reason: நபரையும் பொருளையும் தொடர்ந்து குறிப்பிடும் போது 'gave him a book' என நேரடியாகப் பயன்படுத்த வேண்டும்.
-
❌ Give me a test. (Meaning: I want to write an exam)
✅ Take a test. / Give me an exam paper.
Reason: மாணவர்கள் தேர்வு எழுதுவதைக் குறிப்பிட 'take a test' எனக் கூற வேண்டும்; ஆசிரியர் தேர்வு நடத்துவதே 'give a test'.
-
❌ Give a try.
✅ Give it a try.
Reason: 'முயற்சித்து பார்' எனக் கூறும்போது 'it' சேர்த்து 'Give it a try' எனக் கூற வேண்டும்.
-
❌ I will give you an advice.
✅ I will give you a piece of advice. / I will give you some advice.
Reason: 'Advice' என்பது எண்ண முடியாத பெயர்ச்சொல், எனவே 'an advice' எனக் கூறக் கூடாது.
-
❌ Please give me a response back.
✅ Please give me a response. / Please respond.
Reason: 'Response' என்பதிலேயே 'திரும்பப் பதிலளித்தல்' என்ற பொருள் உள்ளதால் 'back' என்ற வார்த்தை தேவையில்லை.
Frequently Asked Questions (FAQ)
-
Q: What does "give up" mean?
A: To stop trying or quit a habit/task.
-
Q: What does "give in" mean?
A: To finally agree or surrender after resisting pressure.
-
Q: What does "give away" mean?
A: To donate items for free or to accidentally reveal a secret.
-
Q: What does "give back" mean?
A: To return an item to its owner.
Summary (English + Tamil explanation)
You have now learned many useful English phrases with "give" that are commonly used in everyday conversation. Practising these sentences will help you become more fluent and confident when speaking English.
இப்பக்கத்தில் "give" உடன் பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் நீங்கள் கற்றுக்கொண்டுள்ளீர்கள். இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.
Practice Tips
Keep practising by saying the phrases out loud and using them in real life situations. Your command over commonly used verbs like "give" forms a solid base for more advanced English skills.
Do It Yourself: Try to Make Sentences Using the Verb 'Receive'
| Verb Form | English | Tamil |
|---|---|---|
| Base Form | Receive | பெற்றுக்கொள் |
| Past Tense | Received | பெற்றுக்கொண்டேன் |
| Past Participle | Received | பெற்றிரு- |
| Present Participle | Receiving | பெற்றுக்கொண்டிரு- |
People also learn
👉 Daily English phrases - EAT (சாப்பிடு)