Common Phrases - பொதுவான சொற்றொடர்கள்

buy - விலைக்கு வாங்கு - வாங்கவும் - வாங்குங்கள்

Tenses of buy
Present Tense - நிகழ் காலம் Past Tense - இறந்த காலம் Past participle - முடிவுற்ற வினையெச்சம் Continuous - தொடர் வினையெச்சம்
buy - வாங்கு bought - வாங்கினேன் bought - வாங்கியிருக்- buying - வாங்கிக் கொண்டிரு-

bought - வாங்கியிரு- மற்றும் buying- வாங்கிக் கொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெரும்.

  1. You buy a car - நீ ஒரு கார் வாங்கு.
  2. Don’t buy now. Buy next month - இப்பொழுது வாங்காதே. அடுத்த மாதம் வாங்கு.
  3. Do you buy tomato? - நீ தக்காளி வாங்குகிறாயா?
  4. Buy brinjal. It is cheap - கத்தரிக்காய் வாங்குங்கள். அதன் விலை மலிவாக உள்ளது.
  5. Buy more Chacolates - நிறைய சாக்லேட் வாங்குங்கள்.
  6. Buy only one Chacolate - ஒரே ஒரு சாக்லேட் வாங்கு.
  7. Buy some more - இன்னும் கொஞ்சம் வாங்குங்கள்.
  8. Cabbage is not fresh. Don’t buy it - முட்டைக்கோஸ் புதியதாக இல்லை. அதை வாங்காதே.
  9. Don’t buy expired goods - காலாவதியான பொருட்களை வாங்காதே.
  10. Don’t buy in that shop - அந்தக் கடையில் வாங்காதே.
  11. Amma, buy me a new cell phone - அம்மா, எனக்கு ஒரு புது கைபேசி வாங்குங்கள்.
  12. I have to buy a new cell phone - நான் ஒரு புது கைபேசி வாங்கவேண்டும்.
  13. You go and buy - நீ போய் வாங்கு.
  14. You buy a bike - நீ ஒரு பைக் வாங்கு.
  15. I want to buy a car - நான் ஒரு கார்; வாங்க விரும்புகிறேன்.
  16. I wanted to buy a car - நான் ஒரு கார்; வாங்க விரும்பினேன்.
  17. You can buy a flight - உன்னால் ஒரு விமானத்தை வாங்க முடியும்.
  18. You can buy anything - உன்னால் எது வேண்டுமானாலும் வாங்க முடியும்.
  19. You can buy everything - உன்னால் எல்லாவற்றையும் வாங்க முடியும்.
  20. Buy anything - எது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்.
  21. I don’t have to buy - நான் வாங்க வேண்டியதில்லை.
  22. I have to buy - நான் வாங்க வேண்டும்.
  23. I have to buy some provisions - நான் கொஞ்சம் சாமான்கள் வாங்க வேண்டும்.
  24. I have to buy some groceries - நான் கொஞ்சம் மளிகை சாமான்கள் வாங்க வேண்டும்.
  25. You buy here - நீங்கள் இங்கே வாங்குங்கள்.
  26. Which one you want to buy? - நீங்கள் எதை வாங்க விரும்புகிறீர்கள்?
  27. I want to buy that one - நான் அந்த ஒன்றை வாங்க விரும்புகிறேன்.
  28. How many you want to buy? - நீங்கள் எத்தனை வாங்க விரும்புகிறீர்கள்?
  29. I want to buy three - நான் மூன்று வாங்க விரும்புகிறேன்.
  30. Buy in Farmer Market - உழவர் சந்தையில் வாங்கு.
  31. Don’t buy too much - மிக அதிகமாக வாங்காதே.
  32. Bought - வாங்கினேன்
  33. Did you buy? - நீ வாங்கினாயா?
  34. Did you buy? - நீங்கள் வாங்கிவிட்டீர்களா?
  35. Who bought this? - யார் இதை வாங்கினார்கள்?
  36. Did you buy this? - நீங்கள் இதை வாங்கினீர்களா?
  37. Did you buy gift for Rams’ wedding? - ராமுடைய திருமணத்துக்கு நீங்கள் பரிசு வாங்கிவிட்டீர்களா?
  38. Yes. I bought - ஆமாம். நான் வாங்கினேன்.
  39. Why did you buy this? - நீங்கள் ஏன் இதை வாங்கினீர்கள்?
  40. I bought for Ram - நான் ராமுக்காக வாங்கினேன்.
  41. I bought for you - நான் உனக்காக வாங்கினேன்.
  42. I bought to gift Ram on his birthday - ராமுடைய பிறந்த நாளுக்கு பரிசாகக் கொடுக்க நான் வாங்கினேன்.
  43. I bought because it’s cheap - அது விலை குறைவு ஆதலால் நான் வாங்கினேன்.
  44. I bought this dress for Rs.800 - நான் இந்த ஆடையை 800 ரூபாய்க்கு வாங்கினேன்.
  45. When did you buy? - நீங்கள் எப்பொழுது வாங்கினீர்கள்?
  46. Did you buy yesterday? - நீ நேற்று வாங்கினாயா?
  47. I bought today only - நான் இன்று தான் வாங்கினேன்.
  48. I bought last week - நான் போன வாரம் வாங்கினேன்.
  49. I bought last week itself - நான் போன வாரமே வாங்கி விட்டேன்.
  50. Did you buy in the Exhibition? - நீ பொருட்காட்சியில் வாங்கினாயா?
  51. My mother bought in the Temple festival - என்னுடைய அம்மா கோயில் திருவிழாவில் வாங்கினார்கள்.
  52. Did you buy in Malaysia? - நீங்கள் மலேசியாவில் வாங்கினீர்களா?
  53. I never bought Foreign goods - நான் ஒருபோதும் வெளிநாட்டுப் பொருட்களை வாங்கியதில்லை.
  54. Did you buy Online? - நீங்கள் ஆன்லைனில் வாங்கினீர்களா?
  55. No. I didn’t buy Online - இல்லை. நான் ஆன்லைனில் வாங்கவில்லை.
  56. Did you buy in Amazon? - நீங்கள் அமேசானில் வாங்கினீர்களா?
  57. We bought in Ebay - நாங்கள் இபேயில் வாங்கினோம்.
  58. For how much you bought? - நீங்கள் எவ்வளவுக்கு வாங்கினீர்கள?
  59. will buy - வாங்குவேன்
  60. would buy- வாங்குவேன்
  61. Will you buy this? - நீ இதை வாங்குவாயா?
  62. We will buy every week - நாங்கள் ஒவ்வொரு வாரமும் வாங்குவோம்.
  63. We won’t buy often - நாங்கள் அடிக்கடி வாங்க மாட்டோம்.
  64. Won’t you go to buy? - நீ வாங்கப் போக மாட்டாயா?
  65. I will go to buy at 10’o clock - நான் பத்து மணிக்கு வாங்கப் போவேன்.
  66. I won’t buy now - நான் இப்பொழுது வாங்;க மாட்டேன்.
  67. Shall I go to buy? - நான் வாங்கப் போகட்டுமா?
  68. I will buy only 1kg for us - நான் எங்களுக்கு ஒரு கிலோ தான் வாங்குவேன்.
  69. How would you buy? - நீங்கள் எப்படி வாங்குவீர்கள்?
  70. She would buy online - அவள் ஆன்லைனில் வாங்குவாள்.
  71. We would buy in the nearby shop - நாங்கள் அருகிலுள்ள கடையில் வாங்குவோம்.
  72. He would buy through broker - அவர் தரகர் மூலமாக வாங்குவார்.
  73. When would you buy? - நீங்கள் எப்பொழுது வாங்குவீர்கள்?
  74. We would buy tomorrow - நாங்கள் நாளை வாங்குவோம்.
  75. Ram would buy tomorrow - ராம் நாளை வாங்குவான்.
  76. This is the right time to buy - இது வாங்குவதற்கு சரியான நேரம்.
  77. Malar is buying - மலர்; வாங்கிக் கொண்டிருக்கிறாள்.
  78. I was buying - நான்; வாங்கிக் கொண்டிருந்தேன்.
  79. Appa will be buying crackers - அப்பா பட்டாசு வாங்கிக்கொண்டிருப்பார்.
  80. Ram has bought one already - ராம் ஏற்கெனவே ஒன்று வாங்கியிருக்கிறான்.
  81. We have bought more - நாங்கள் நிறைய வாங்கியிருக்கிறோம்.
  82. He had bought two plots - அவன் இரண்டு பிளாட் வாங்கியிருந்தான்.
  83. Meena would have bought now - இப்பொழுது அருணா வாங்கியிருப்பாள்.
  84. Arun won’t have bought it - அருண் அதை வாங்கியிருக்க மாட்டான்.
  85. He has been buying from the farmers - அவர் உழவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டிருந்;திருக்கிறார்.
  86. They had been buying online - அவர்கள் ஆன்லைனில் வாங்கிக் கொண்டிருந்;திருந்தார்கள்.
  87. I would have been buying in OLX - நான் ஓஎல்எக்ஸில் வாங்கிக் கொண்டிருந்;திருப்பேன்.

Try to make sentences using the following verb sell

Tenses of sell
Present Tense - நிகழ் காலம் Past Tense - இறந்த காலம் Past participle - முடிவுற்ற வினையெச்சம் Continuous - தொடர் வினையெச்சம்
sell - விற்பனை செய் sold - விற்பனை செய்தேன் sold - விற்பனை செய்திரு- selling - விற்பனை செய்துகொண்டிரு-


Next: Phrases - Sit - உட்காா்