Common English Phrases Using the Verb 'Eat' – With Tamil Meaning
Learning everyday phrases is one of the most effective ways to improve your spoken English. On this page, you will find common phrases using the verb "eat" in different tenses and practical daily situations. Each phrase is presented in English with Tanglish pronunciation and Tamil translation so that Tamil speakers can understand and use them confidently in real conversations.
How to Use the Verb 'Eat'
The verb "eat" (சாப்பிடு) is an irregular verb (eat – ate – eaten). It refers to consuming food. In daily conversations, it is often interchanged with "have" or "take" for meals (e.g., have breakfast, take lunch).
- Routine Meal Consumption:
Example: I eat breakfast at 8 AM every day. (நான் தினமும் காலை 8 மணிக்கு காலை உணவு சாப்பிடுகிறேன்.) - Future Intentions (going to eat):
Example: I am going to eat lunch now. (நான் இப்போது மதிய உணவு சாப்பிடப் போகிறேன்.) - Dietary Habits & Preferences:
Example: She eats only vegetarian food. (அவள் சைவ உணவு மட்டுமே சாப்பிடுகிறாள்.) - Common Idiomatic Expressions:
- Eat out: (வெளியே உணவகத்தில் சாப்பிடு) – Let's eat out tonight.
- Eat up: (முழுவதும் சாப்பிட்டு முடி) – Eat up your vegetables.
- Have a bite: (கொஞ்சம் சாப்பிடு) – Let's have a quick bite before we leave.
Verb Definition and Tenses
| Verb Form | English | Tamil |
|---|---|---|
| Base Form | eat | சாப்பிடு |
| Past Tense | ate | சாப்பிட்டேன் |
| Past Participle | eaten | சாப்பிட்டிரு- |
| Present Participle | eating | சாப்பிட்டுக் கொண்டிரு- |
eaten - சாப்பிட்டிரு- மற்றும் eating - சாப்பிட்டுக் கொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெறும்.
Example Sentences in Different Tense Forms
- I eat rice for lunch. - நான் மதிய உணவிற்கு சாதம் சாப்பிடுகிறேன்.
- I ate an apple. - நான் ஒரு ஆப்பிள் சாப்பிட்டேன்.
- I will eat dinner later. - நான் பிறகு இரவு உணவு சாப்பிடுவேன்.
- I am eating breakfast. - நான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.
- I was eating snacks. - நான் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
- I will be eating biryani at this time tomorrow. - நாளை இந்நேரம் நான் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்.
- I have eaten Thai food before. - நான் இதற்கு முன்பு தாய் உணவு சாப்பிட்டிருக்கிறேன்.
- I had eaten lunch before he came. - அவன் வருவதற்கு முன்பே நான் மதிய உணவு சாப்பிட்டிருந்தேன்.
- I would have eaten if you had called me. - நீங்கள் என்னை அழைத்திருந்தால் நான் சாப்பிட்டிருப்பேன்.
- I have been eating healthy food for a month. - நான் ஒரு மாதமாக ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.
- I had been eating fast food before I fell sick. - எனக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதற்கு முன்பு வரை நான் துரித உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
- I would have been eating dinner now if the bus arrived on time. - பேருந்து சரியான நேரத்திற்கு வந்திருந்தால் இந்நேரம் நான் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்திருப்பேன்.
Questions and Responses
Learn how to ask questions in English?
Wh-Word Questions
- What do you eat for breakfast? - காலை உணவிற்கு நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?
- I eat Idli for breakfast. - நான் காலை உணவிற்கு இட்லி சாப்பிடுகிறேன்.
- What do you want to eat? - நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள்?
- I like to eat lemon rice with chicken fry. - நான் எலுமிச்சை சாதத்துடன் வறுத்த கோழி சாப்பிட விரும்புகிறேன்.
- When would you eat lunch? - நீங்கள் எப்பொழுது மதிய உணவு சாப்பிடுவீர்கள்?
- I would eat lunch at 1 o'clock. - நான் 1 மணிக்கு மதிய உணவு சாப்பிடுவேன்.
- When would you come for dinner? - நீங்கள் இரவு உணவிற்கு எப்பொழுது வருவீர்கள்?
- When would you come to eat? - நீங்கள் சாப்பிட எப்பொழுது வருவீர்கள்?
- What did you eat for dinner? - இரவு உணவிற்கு நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்?
- I ate Chapati for dinner. - நான் இரவு உணவிற்கு சப்பாத்தி சாப்பிட்டேன்.
- Where did you eat lunch? - நீங்கள் எங்கு மதிய உணவு சாப்பிட்டீர்கள்?
- I ate at home. - நான் வீட்டில் சாப்பிட்டேன்.
- I ate in a restaurant. - நான் உணவகத்தில் சாப்பிட்டேன்.
- Where are you eating right now? - நீங்கள் இப்போது எங்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
- I am eating at Hotel Taj. - நான் தாஜ் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.
- Where do you usually eat? - நீங்கள் வழக்கமாக எங்கே சாப்பிடுகிறீர்கள்?
- With whom did you eat dinner? - நீங்கள் யாருடன் இரவு உணவு சாப்பிட்டீர்கள்?
- I ate with Ram. - நான் ராமுடன் சாப்பிட்டேன்.
- I ate with my mother. - நான் என்னுடைய அம்மாவுடன் சாப்பிட்டேன்.
- I ate with my family. - நான் எனது குடும்பத்துடன் சாப்பிட்டேன்.
- I ate alone. - நான் தனியாக சாப்பிட்டேன்.
- When did you eat? - நீங்கள் எப்பொழுது சாப்பிட்டீர்கள்?
- We ate around 3 o'clock. - நாங்கள் 3 மணி வாக்கில்தான் சாப்பிட்டோம்.
- Why did you eat fast food? - நீ ஏன் துரித உணவு சாப்பிட்டாய்?
- Why didn't you eat your lunch? - நீங்கள் ஏன் மதிய உணவு சாப்பிடவில்லை?
- Because I was not hungry. - ஏனெனில் எனக்கு பசி இல்லை.
- What did you have for breakfast? - காலை உணவாக நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்?
- I had Dosa. - நான் தோசை சாப்பிட்டேன்.
- What do you have for breakfast today? - இன்று காலை உணவிற்கு உங்களிடம் என்ன இருக்கிறது?
How Questions
- How did you eat without a spoon? - கரண்டி இல்லாமல் நீங்கள் எப்படிச் சாப்பிட்டீர்கள்?
- I ate with my hands. - நான் என் கைகளால் சாப்பிட்டேன்.
- How would you eat this spicy food? - இந்த காரமான உணவை நீங்கள் எப்படிச் சாப்பிடுவீர்கள்?
- I will eat with a spoon. - நான் கரண்டியால் சாப்பிடுவேன்.
- How many times have you eaten pizza? - நீ எத்தனை முறை பீட்சா சாப்பிட்டிருக்கிறாய்?
- I have eaten pizza only once. - நான் ஒரு முறை தான் பீட்சா சாப்பிட்டிருக்கிறேன்.
Learn how to ask questions in English?
Learn about may/might shall/should can/could usage
Auxiliary Verb Questions (Do, Did, Will, May, Shall, Can, Should, etc.)
- Do you eat non-vegetarian food? - நீங்கள் அசைவ உணவு சாப்பிடுகிறீர்களா?
- Yes, I do. / Yes, I eat non-veg. - ஆமாம், நான் சாப்பிடுகிறேன்.
- Did you eat your breakfast? - நீ காலை உணவு சாப்பிட்டாயா?
- I didn't eat. - நான் சாப்பிடவில்லை.
- I didn't eat anything. - நான் எதுவும் சாப்பிடவில்லை.
- I haven't eaten yet. - நான் இன்னும் சாப்பிடவில்லை.
- Did you eat fast food yesterday? - நீ நேற்று துரித உணவு சாப்பிட்டாயா?
- No, I didn't eat. - இல்லை, நான் சாப்பிடவில்லை.
- Yes, I ate. - ஆமாம், நான் சாப்பிட்டேன்.
- Haven't you eaten anything since morning? - நீ காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லையா?
- Would she eat mutton curry? - அவள் ஆட்டிறைச்சி குழம்பு சாப்பிடுவாளா?
- She won't eat mutton. - அவள் ஆட்டிறைச்சி சாப்பிட மாட்டாள்.
- She eats only vegetarian food. - அவள் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவாள்.
- I will eat mutton. - நான் ஆட்டிறைச்சி சாப்பிடுவேன்.
- I will eat curd rice for lunch. - நான் மதிய உணவுக்கு தயிர் சாதம் சாப்பிடுவேன்.
- They don't eat non-veg on Fridays. - அவர்கள் வெள்ளிக்கிழமையில் அசைவம் சாப்பிட மாட்டார்கள்.
- Was I eating lunch when you called? - நீங்கள் அழைத்தபோது நான் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேனா?
- I was not eating lunch then. - நான் அப்போது மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கவில்லை.
- I was eating breakfast. - நான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
- May I eat food now, Doctor? - டாக்டர், நான் இப்போது உணவு சாப்பிடலாமா?
- May I eat sweets today? - நான் இன்று இனிப்புகள் சாப்பிடலாமா?
- You may eat all kinds of food except fast food. - நீங்கள் துரித உணவு தவிர மற்ற அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடலாம்.
- May I eat non-vegetarian food? - நான் அசைவ உணவு சாப்பிடலாமா?
- You may eat. - நீங்கள் சாப்பிடலாம்.
- You may eat a little. - நீங்கள் கொஞ்சமாக சாப்பிடலாம்.
- But you should eat only a little. - ஆனால், நீங்கள் கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும்.
- Don't eat too much. - அதிகமாக சாப்பிடாதே.
- Can't you eat even this much food? - உன்னால் இவ்வளவு உணவைக் கூட சாப்பிட முடியாதா?
- My stomach is full; I can't eat any more. - என் வயிறு நிறைந்துவிட்டது; இதற்கு மேல் என்னால் சாப்பிட முடியாது.
- Can't you eat alone without help? - உன்னால் உதவியின்றி தனியாக சாப்பிட முடியாதா?
- Should I take medicine after food? - நான் உணவுக்குப் பிறகு மருந்து சாப்பிட வேண்டுமா?
- Should I eat bitter gourd curry? - நான் கட்டாயம் பாகற்காய் கூட்டு சாப்பிட வேண்டுமா?
- Are you eating a balanced diet? - நீங்கள் சரிவிகித உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா?
- Do you eat a balanced diet daily? - நீங்கள் தினமும் சரிவிகித உணவு சாப்பிடுகிறீர்களா?
- Have you eaten Thai food before? - நீங்கள் இதற்கு முன்பு தாய் உணவு சாப்பிட்டிருக்கிறீர்களா?
- I haven't eaten Thai food. - நான் தாய் உணவு சாப்பிட்டதில்லை.
- I have eaten Thai food in Chennai. - நான் சென்னையில் தாய் உணவு சாப்பிட்டிருக்கிறேன்.
- Shall I eat dinner after finishing my work? - என் வேலையை முடித்த பிறகு நான் இரவு உணவு சாப்பிடட்டுமா?
- I shall eat only after finishing my homework. - என் வீட்டுப்பாடத்தை முடித்த பிறகுதான் நான் சாப்பிடுவேன்.
- Shall we invite them to dinner tonight? - நாம் அவர்களை இன்று இரவு உணவிற்கு அழைக்கலாமா?
- I'm going to eat lunch. Are you coming or not? - நான் மதிய உணவு சாப்பிடப் போகிறேன். நீ வருகிறாயா இல்லையா?
- Had your dinner? - இரவு உணவு சாப்பிட்டு விட்டீர்களா?
- Yes, I had. - ஆமாம், நான் சாப்பிட்டுவிட்டேன்.
- No, I hadn't. - இல்லை, நான் சாப்பிடவில்லை.
- No, not yet. - இல்லை, இன்னும் இல்லை.
Learn about will/would will/shall may/might usage
How to Say in English
Practice translating daily spoken statements into English using "eat" along with Tanglish pronunciation and Tamil translation.
-
அவன் எப்பொழுதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.
Avan eppozhuthum saappittuk kondiruppaan.
He is always eating. -
நான் எப்பொழுதும் சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டேன்.
Naan eppozhuthum saappittuk kondirukka maatten.
I won't be eating all the time. -
நான் நண்டு சாப்பிட்டிருக்கிறேன்.
Naan nandu saappittirukkiren.
I have eaten crab. -
நான் சீன உணவு சாப்பிட்டிருக்கிறேன்.
Naan Chinese unavu saappittirukkiren.
I have eaten Chinese food. -
அவள் வெளியில் எதுவும் சாப்பிட மாட்டாள்.
Aval veliyil edhum saappitta maattaal.
She won't eat anything outside. -
நீங்கள் சுவரொட்டி (மண்ணீரல்) சாப்பிட வேண்டும்.
Neengal suvarotti (manneeral) saappida vendum.
You have to eat spleen. -
நீங்கள் சாப்பிடப் போங்கள்.
Neengal saappida pongal.
You go and eat. -
நீங்கள் போய் மதிய உணவு சாப்பிடுங்கள்.
Neengal poy madhiya unavu saappidungal.
Go and have your lunch. -
நீங்கள் கட்டாயம் ஆட்டிறைச்சி சாப்பிடக் கூடாது.
Neengal kattayam aattiraicchi saappida koodaadhu.
You must not eat mutton. -
நீங்கள் கொழுப்புச் சத்துள்ள உணவுகள் சாப்பிடக் கூடாது.
Neengal kozhuppu sathulla unavugal saappida koodaadhu.
You shouldn't eat fatty foods. -
நீங்கள் கொழுப்புச் சத்துள்ள உணவு சாப்பிடாதீர்கள்.
Neengal kozhuppu sathulla unavu saappidaadheegal.
Don't eat fatty food. -
நீங்கள் அங்கே சாப்பிடாதீர்கள்.
Neengal angae saappidaadheegal.
Don't eat there. -
நீங்கள் உணவுக் கூடத்தில் சாப்பிடுங்கள்.
Neengal unavu koodathil saappidungal.
Eat in the dining hall. -
உன்னால் சாப்பிட முடியும்.
Unnaal saappida mudiyum.
You can eat. -
உன்னால் சாப்பிட முடியாது.
Unnaal saappida mudiyaadhu.
You can't eat. -
உன்னால் அவ்வளவு சாப்பிட முடியாது. உணவை மீதம் வைக்காதே.
Unnaal avvalavu saappida mudiyaadhu. Unavai meedham vaikkaadhae.
You can't eat that much. Don't leave leftover food. -
உன்னால் இவ்வளவு சாப்பிட முடியாது. உணவை வீணாக்காதே.
Unnaal ivvalavu saappida mudiyaadhu. Unavai veenaakkaadhae.
You can't eat this much. Don't waste food. -
என்னைச் சாப்பிட விடுங்கள்.
Ennai saappida vidungal.
Let me eat. -
வீட்டு உணவு மட்டும் சாப்பிடு.
Veettu unavu mattum saappidu.
Eat only home-cooked food. -
இதற்கு மேல் காத்திருக்க முடியாது. நாம் சாப்பிடுவோம்.
Idharku mael kaathirukka mudiyaadhu. Naam saappiduvoam.
Can't wait any longer. Let's eat. -
வேகமாகச் சாப்பிடவும்.
Vegamaaga saappidavum.
Eat quickly. -
வேகமாகச் சாப்பிடக் கூடாது.
Vegamaaga saappida koodaadhu.
You shouldn't eat fast. -
வேகமாகச் சாப்பிடாதே.
Vegamaaga saappidaadhae.
Don't eat fast. -
மெதுவாகச் சாப்பிடு.
Medhuvaaga saappidu.
Eat slowly. -
அவள் மிகவும் குறைவாகத் தான் சாப்பிடுகிறாள்.
Aval migavum kuraivaaga thaan saappidugiraal.
She eats very little. -
அவன் அதிகமாகச் சாப்பிடுகிறான்.
Avan adhigmaga saappidugiraan.
He eats a lot. -
நாங்கள் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
Naangal oru unavagathil saappittuk kondirundhoam.
We were eating at a restaurant. -
என்னுடைய அப்பா என்னைச் சாப்பிடுவதற்கு அனுமதிக்கவில்லை.
Ennudaiya appa ennai saappiduvadharku anumadhikkavillai.
My father didn't allow me to eat. -
இல்லையெனில் எல்லா பர்கர்களையும் நானே சாப்பிட்டிருப்பேன்.
Illaiyenil ella burgargalaiyum naanae saappittiruppen.
Otherwise, I would have eaten all the burgers myself. -
இல்லை. நான் ஒருபோதும் சாப்பிட்டதில்லை.
Illai. Naan orubodhum saappittadhillai.
No, I have never eaten it. -
நான் லண்டனில் ஒரு முறை பேன் கேக் சாப்பிட்டிருக்கிறேன்.
Naan London-il oru murai pancake saappittirukkiren.
I have eaten pancakes in London once. -
காலை உணவு சாப்பிடு.
Kaalai unavu saappidu.
Have breakfast. -
கொஞ்சம் உணவு சாப்பிடுங்கள்.
Konjam unavu saappidungal.
Have some food. -
நேரத்திற்குச் சாப்பிடு.
Naerathirku saappidu.
Have food on time. -
தயவுசெய்து இரவு உணவிற்கு எங்கள் வீட்டிற்கு வரவும்.
Dhayavuseydhu iravu unavirku engal veettrirku varavum.
Please come to our home for dinner. -
என்னுடன் பணிபுரிபவர் இரவு உணவிற்கு நம்மை அழைத்திருக்கிறார்.
Ennudan panipuribavar iravu unavirku nammai azhaithirukkiraar.
My colleague invited us to dinner. -
நான் மிகவும் பசியாக இருக்கிறேன். நான் இரவு உணவு சாப்பிடப் போகிறேன். பை.
Naan migavum pasiyaaga irukkiren. Naan iravu unavu saappida pogiren. Bye.
I am very hungry. I am going to have dinner. Bye.
Common Mistakes with 'Eat'
-
❌ I ate my breakfast at 8 AM.
✅ I had my breakfast at 8 AM.
(உணவு சாப்பிடுவதைக் குறிப்பிட 'ate' என்பதை விட 'had' எனக் கூறுவது மிகவும் இயல்பான ஆங்கில நடை.) -
❌ He eats meals very fastly.
✅ He eats meals very fast.
(ஆங்கிலத்தில் 'fastly' என்ற வார்த்தை கிடையாது; 'fast' மட்டுமே பயன்படுத்த வேண்டும்.) -
❌ Don't eat empty stomach.
✅ Don't eat on an empty stomach.
(வெறும் வயிற்றில் சாப்பிடுவதைக் குறிப்பிட 'on an empty stomach' எனப் பயன்படுத்த வேண்டும்.) -
❌ Did you ate lunch?
✅ Did you eat lunch?
('Did' என்ற துணை வினைச்சொல் வந்த பிறகு past tense (`ate`) வரக் கூடாது; present tense (`eat`) மட்டுமே வர வேண்டும்.) -
❌ She doesn't eats non-veg.
✅ She doesn't eat non-veg.
('Doesn't' வந்த பிறகு வினைச்சொல்லுடன் 's' அல்லது 'es' சேர்க்கக் கூடாது.)
Frequently Asked Questions (FAQ)
-
Q: What is the difference between "eat", "have", and "take" when referring to meals?
A: All three are correct, but "have" (e.g., have lunch) sounds most natural in modern spoken English. "Eat" focuses directly on the action of consuming food, while "take" is slightly more formal. -
Q: Can I say "I am eating lunch"?
A: Yes, "I am eating lunch" is grammatically correct and widely used when you are currently in the process of eating. -
Q: What does the phrase "eat out" mean?
A: "Eat out" means to eat a meal at a restaurant or food stall rather than cooking and eating at home. -
Q: Is "I have eaten" correct for past action?
A: Yes, "I have eaten" (present perfect) is used when talking about past eating experience without stating a specific time (e.g., "I have eaten Thai food"). -
Q: What is the difference between "eat" and "eat up"?
A: "Eat" simply refers to consuming food, whereas "eat up" emphasizes finishing all the food on your plate completely. -
Q: How do I ask someone if they had their meal politely in English?
A: You can ask "Have you had your lunch/dinner?" or simply "Did you have your lunch?"
Summary (English + Tamil explanation)
You have now learned many useful English phrases with "eat" that are commonly used in everyday conversation. Practising these sentences will help you become more fluent and confident when speaking English.
இப்பக்கத்தில் "சாப்பிடு" (eat) என்ற வினைச்சொல்லுடன் பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் நீங்கள் கற்றுக்கொண்டுள்ளீர்கள். இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.
Practice Tips
Keep practising by saying the phrases out loud and using them in real-life situations. Your command over commonly used verbs like "eat" forms a solid base for more advanced English skills.
Do It Yourself: Try to make sentences using the verb drink
| Verb Form | English | Tamil |
|---|---|---|
| Base Form | drink | குடி |
| Past Tense | drank | குடித்தேன் |
| Past Participle | drunk | குடித்திரு- |
| Continuous | drinking | குடித்துக் கொண்டிரு- |
People Also Learn
👉 Daily English phrases - GO (போ)