Common English Phrases Using the Verb 'Say' – With Tamil Meaning

Learning everyday phrases is one of the most effective ways to improve your spoken English. On this page, you will find common phrases using the verb "say" in different tenses and practical daily situations. Each phrase is presented in English with Tanglish pronunciation and Tamil translation so that Tamil speakers can understand and use them confidently in real conversations.

How to Use the Verb 'Say'

The verb "say" (சொல்) is an irregular verb (say – said – said). It is used to express words, opinions, or information in speech.

Verb Definition and Tenses

Verb Form English Tamil
Base Form say சொல்
Past Tense said சொன்னேன்
Past Participle said சொல்லியிரு-
Present Participle saying சொல்லிக் கொண்டிரு-

said - சொல்லியிரு- மற்றும் saying - சொல்லிக் கொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெறும்.

Example Sentences in Different Tense Forms

These example sentences demonstrate how the verb "say" functions across various continuous, perfect, and modal structures in practical daily conversations.

  1. Say your name clearly. - நீங்கள் உங்கள் பெயரைத் தெளிவாகச் சொல்லுங்கள்.
  2. I always tell the truth. - நான் எப்போதும் உண்மையையே சொல்கிறேன்.
  3. I told him the news yesterday. - நான் நேற்று அவனிடம் அந்தச் செய்தியைச் சொன்னேன்.
  4. I will tell you the details tomorrow. - நான் நாளை விவரங்களைச் சொல்வேன்.
  5. I am saying the answer now. - நான் இப்போது பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
  6. I was telling a story to my daughter. - நான் என் மகளிடம் ஒரு கதை சொல்லிக் கொண்டிருந்தேன்.
  7. I will be making the announcements at this time tomorrow. - நாளை இந்நேரம் நான் அறிவிப்புகளைச் சொல்லிக் கொண்டிருப்பேன்.
  8. I have said this rule several times. - நான் இந்த விதியை பலமுறை சொல்லியிருக்கிறேன்.
  9. I had told him the time before he started. - அவன் புறப்படுவதற்கு முன்பே நான் நேரத்தைச் சொல்லியிருந்தேன்.
  10. I would have said the reason if you had asked. - நீங்கள் கேட்டிருந்தால் நான் காரணத்தைச் சொல்லியிருப்பேன்.
  11. I have been saying this for a long time. - நான் நீண்ட காலமாக இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
  12. I had been saying that for months before they listened. - அவர்கள் கேட்கும் வரை மாதக்கணக்கில் நான் அதைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
  13. By the time I retire, I will have been saying those motivational quotes for 20 years. - நான் ஓய்வுபெறும் நேரத்திற்குள், அந்த ஊக்கமளிக்கும் பொன்மொழிகளை நான் 20 ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருப்பேன்.

Questions and Responses

Plans & Intentions

  1. Will she tell the truth? - அவள் உண்மையைச் சொல்வாளா?
  2. Would you say this to her during the meeting? - கூட்டத்தின் போது இதை அவளிடம் சொல்வாயா?
  3. What does she say about her career? - அவள் தன் தொழிலைப் பற்றி என்ன சொல்கிறாள்?
  4. She speaks about her future plans. - அவள் அவளுடைய எதிர்காலத் திட்டங்கள் பற்றிச் சொல்கிறாள்.
  5. She spoke about her career ambitions. - அவள் அவளுடைய வேலை இலட்சியம் பற்றிச் சொன்னாள்.
  6. She will say the message to you too. - அவள் அந்தச் செய்தியை உனக்கும் சொல்வாள்.
  7. What is she saying right now? - அவள் இப்போது என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாள்?
  8. Did you tell the matter to father? - நீ விஷயத்தை அப்பாவிடம் சொன்னாயா?
  9. Did you say anything about the event? - அந்த நிகழ்வைப் பற்றி நீ ஏதேனும் சொன்னாயா?
  10. Yes, I said everything clearly. - ஆமாம், நான் எல்லாவற்றையும் தெளிவாகச் சொன்னேன்.
  11. Yes, I told them to come early. - ஆமாம், நான் அவர்களைச் சீக்கிரம் வரச் சொன்னேன்.
  12. I said that already to the team. - நான் ஏற்கனவே அதை அணியிடம் சொன்னேன்.
  13. What did you say to the manager? - நீங்கள் மேலாளரிடம் என்ன சொன்னீர்கள்?
  14. I said that "it's nice". - "அது நன்றாக இருக்கிறது" என்று நான் சொன்னேன்.
  15. I told him to study well for exams. - நான் அவனைத் தேர்வுக்கு நன்றாகப் படிக்கச் சொன்னேன்.
  16. I have told her to come home. - நான் அவளை வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறேன்.
  17. When did you say that to him? - நீங்கள் எப்போது அதை அவரிடம் சொன்னீர்கள்?
  18. He said it last Friday morning. - அவர் அதை கடந்த வெள்ளிக்கிழமை காலை சொன்னார்.
  19. I have said this several times to them. - நான் பலமுறை இதை அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்.
  20. Why did you tell that secret to everyone? - அந்த ரகசியத்தை ஏன் எல்லோரிடமும் சொன்னீர்கள்?
  21. What are you saying about this proposal? - இந்த திட்ட முன்மொழிவைப் பற்றி நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?
  22. I am telling her to buy a new car. - நான் அவளை ஒரு புதிய கார் வாங்கச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
  23. What were you saying to the driver? - நீங்கள் ஓட்டுநரிடம் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?
  24. I was telling her to buy vegetables. - நான் அவளிடம் காய்கறி வாங்கச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
  25. I was saying this to my daughter. - நான் என்னுடைய மகளிடம் இதைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
  26. Have you said this to Malar yet? - நீ மலரிடம் இதைச் சொல்லியிருக்கிறாயா?
  27. She has said the reason to you. - அவள் உன்னிடம் காரணத்தைச் சொல்லியிருக்கிறாள்.
  28. I have told the news to all my friends. - நான் என் நண்பர்கள் எல்லோரிடமும் இந்தச் செய்தியைச் சொல்லியிருக்கிறேன்.
  29. Yes, I had said it to everyone before the meeting. - ஆமாம், கூட்டத்திற்கு முன்பே நான் எல்லோரிடமும் அதைச் சொல்லியிருந்தேன்.
  30. How many times have you said this to him? - நீ எத்தனை முறை இதை அவனிடம் சொல்லியிருக்கிறாய்?
  31. I have said it only once. - நான் ஒரு முறை தான் அதைச் சொல்லியிருக்கிறேன்.
  32. Are you afraid to tell the truth? - நீ உண்மையைச் சொல்லப் பயப்படுகிறாயா?
  33. Yes, I am afraid to talk to him. - ஆமாம், அவரிடம் பேச நான் பயப்படுகிறேன்.

Suggestions, Requests & Offers

  1. Should I say the answer now? - நான் இப்போது பதிலைக் கூற வேண்டுமா?
  2. Shall we say our opinion to the team? - நாம் நமது கருத்தை அணியிடம் சொல்வோமா?
  3. Shall I speak about your achievements to them? - நான் உன்னுடைய சாதனைகளைப் பற்றி அவர்களிடம் சொல்லட்டுமா?
  4. Shall I say this matter to Amma? - நான் இந்த விஷயத்தை அம்மாவிடம் சொல்லட்டுமா?
  5. Shall I say a few points about AI? - நான் ஏஐ பற்றிச் சில குறிப்புகளைச் சொல்லட்டுமா?
  6. Shall I say the updates after some time? - நான் சிறிது நேரம் கழித்து அறிவிப்புகளைச் சொல்லட்டுமா?
  7. I shall state the guidelines clearly. - நான் வழிகாட்டுதல்களைத் தெளிவாகச் சொல்வேன்.
  8. We shall announce our decision tomorrow. - நாங்கள் எங்கள் முடிவை நாளை சொல்வோம்.
  9. He will say the exact price later. - அவர் சரியான விலையைப் பிறகு சொல்வார்.
  10. They will share their feedback after testing. - சோதனைக்குப் பிறகு அவர்கள் கருத்துகளைச் சொல்வார்கள்.
  11. I will tell the story to you tomorrow. - நாளை நான் உனக்குக் கதை சொல்வேன்.
  12. They will be saying that it is fate. - அவர்கள் அது விதி என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
  13. May I say something about this topic? - நான் இந்த தலைப்பைப் பற்றி ஏதேனும் சொல்லலாமா?
  14. You may share your comments freely. - நீங்கள் உங்கள் கருத்துகளைத் தாராளமாகச் சொல்லலாம்.
  15. Do I have to say the code now? - நான் இப்போது குறியீட்டைச் சொல்ல வேண்டுமா?
  16. Yes, you have to say it right now. - ஆமாம், நீங்கள் இப்பொழுதே அதைச் சொல்ல வேண்டும்.
  17. You can say whatever you think. - நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதைச் சொல்லலாம்.
  18. Let's express our views in the meeting. - நாம் கூட்டத்தில் நம் கருத்துகளைச் சொல்வோம்.
  19. Let's explain the issue to the Manager. - நாம் இந்த சிக்கலை மேலாளரிடம் சொல்வோம்.
  20. You need courage to tell him the truth. - அவரிடம் உண்மையைச் சொல்ல உனக்குத் தைரியம் தேவை.
  21. You need courage to say that on stage. - அதை மேடையில் சொல்ல உனக்குத் தைரியம் தேவை.
  22. Let's say we start at 5 PM. - நாம் மாலை 5 மணிக்குத் தொடங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
  23. Let's say the budget is ₹5,000. - பட்ஜெட் ₹5,000 என்று வைத்துக்கொள்வோம்.

Negative Questions & Responses

  1. Didn't you tell him the time? - நீ அவனிடம் நேரத்தைச் சொல்லவில்லையா?
  2. Yes, I didn't say anything to him. - ஆமாம், நான் அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை.
  3. I didn't say anything wrong to you. - நான் உன்னிடம் தவறாக ஒன்றும் சொல்லவில்லை.
  4. I said nothing about your mistake. - உன் தவறினைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை.
  5. Don't be afraid to express your view. - உன் கருத்தைச் சொல்லப் பயப்படாதே.
  6. Don't hesitate to ask your doubts. - உன் சந்தேகங்களைக் கேட்க/சொல்லத் தயங்காதே.
  7. Aren't you afraid to state the facts? - உண்மைகளைச் சொல்ல நீ பயப்படவில்லையா?
  8. No, I am not afraid to speak up. - இல்லை, பேசுவதற்கு நான் பயப்படவில்லை.
  9. He didn't tell me the location. - அவர் எனக்கு இடத்தை சொல்லவில்லை.
  10. Why didn't you tell the truth earlier? - நீ ஏன் முன்பே உண்மையைச் சொல்லவில்லை?
  11. How did you share that difficult news? - அந்தக் கடினமான செய்தியை நீங்கள் எப்படிச் சொன்னீர்கள்?
  12. I didn't say it directly to him. - நான் அதை அவரிடம் நேரடியாகச் சொல்லவில்லை.
  13. I said it through a mediator. - நான் மத்தியஸ்தர் மூலமாகச் சொன்னேன்.
  14. Had you told that to Pari before leaving? - கிளம்புவதற்கு முன் பாரியிடம் அதைச் சொல்லியிருந்தீர்களா?
  15. My father didn't allow me to tell the truth. - என் தந்தை என்னை உண்மையைச் சொல்ல அனுமதிக்கவில்லை.
  16. Otherwise, I would have told everything to Pari. - இல்லையெனில் நான் பாரியிடம் எல்லாவற்றையும் சொல்லியிருப்பேன்.
  17. You can't say that to your father. - உன்னால் அதை உன் தந்தையிடம் கூற முடியாது.
  18. Can't you tell this message to Ram? - இந்த செய்தியை உன்னால் ராமிடம் கூற முடியாதா?
  19. Yes, I can't say this to Ram. - ஆமாம், என்னால் இதை ராமிடம் கூற முடியாது.
  20. No, I can tell Ram clearly. - இல்லை, என்னால் அதை ராமிடம் தெளிவாகக் கூற முடியும்.
  21. Won't you tell the answer to Ram? - நீ ராமிடம் பதிலைக் கூற மாட்டாயா?
  22. I won't tell lies to anyone. - நான் யாருக்கும் எந்தப் பொய்களையும் சொல்ல மாட்டேன்.
  23. I won't tell that secret to you. - நான் அந்த ரகசியத்தை உனக்குச் சொல்ல மாட்டேன்.
  24. Don't say that rude phrase again. - நீ மீண்டும் அந்த நாகரிகமற்ற சொற்றொடரைச் சொல்லாதே.
  25. Don't tell this news to her now. - நீ இந்தச் செய்தியை இப்போது அவளிடம் சொல்லாதே.
  26. Don't state approximate values in calculations. - கணக்கீடுகளில் தோராயமான மதிப்பைச் சொல்லாதீர்கள்.
  27. Haven't you been repeating this complaint for a long time? - நீ இந்த புகாரை நீண்ட காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கவில்லையா?
  28. No, I have not been making that complaint for a long time. - இல்லை, நான் அந்த புகாரை நீண்ட காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கவில்லை.
  29. You can't say anything without proof. - ஆதாரம் இல்லாமல் உன்னால் எதுவும் சொல்ல முடியாது.
  30. I can't say the exact date right now. - என்னால் அந்தச் சரியான தேதியை இப்போது சொல்ல முடியாது.
  31. Don't I have to tell the truth in court? - நான் நீதிமன்றத்தில் உண்மையைச் சொல்ல வேண்டாமா?
  32. No, you don't have to say anything now. - இல்லை, நீங்கள் இப்போது எதுவும் சொல்ல வேண்டாம்.

How to Say in English

Practice translating daily spoken statements into English using "say" along with Tanglish pronunciation and Tamil translation.

  1. அவள் யோகா பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
    Aval yoga pattri sollik kondirukkiraal.
    She is talking about Yoga.
  2. அவள் சூர்யா பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
    Aval Surya pattri sollik kondirundhaal.
    She was talking about Surya.
  3. அவள் அரசியல் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பாள்.
    Aval arasiyal pattri sollik kondiruppaal.
    She will be talking about politics.
  4. எனது ஆசிரியர் சீக்கிரம் வரச் சொல்லியிருக்கிறார்.
    Enadhu aasiriyar seekiram vara solliyirukkiraar.
    My teacher has told me to come early.
  5. எனது ஆசிரியர் சீக்கிரம் வரச் சொல்லியிருந்தார்.
    Enadhu aasiriyar seekiram vara solliyirundhaar.
    My teacher had told me to come early.
  6. புதிய கொள்கைகள் பற்றித் தலைவர் சொல்லியிருந்தார்.
    Pudhiya kolgaigal pattri thalaivar solliyirundhaar.
    The chairman had spoken about new policies.
  7. எனது ஆசிரியர் நீட் பற்றிச் சொல்லியிருப்பார்.
    Enadhu aasiriyar NEET pattri solliyiruppaar.
    My teacher would have spoken about NEET.
  8. அவர்கள் ஊரடங்கு பற்றிச் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
    Avargal ooradanggu pattri sollikkondirundhirukkiraargal.
    They have been talking about the lockdown.
  9. அவர்கள் விதிகள் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்திருந்தார்கள்.
    Avargal vidhigal pattri sollikkondirundhirundhaargal.
    They had been talking about the rules.
  10. அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்திருப்பார்கள்.
    Avargal eadhavadhu sollik kondirundhiruppaargal.
    They would have been saying something.
  11. நீ அவனை நன்றாக படிக்கச் சொல்.
    Nee avanai nandraaga padikka sol.
    Tell him to study well.
  12. நீ அவர்களை அமைதியாக இருக்கச் சொல்.
    Nee avargalai amaidhiyaaga irukka sol.
    Tell them to keep quiet.
  13. நீ பயம் இல்லாமல் சொல்.
    Nee bayam illaamal sol.
    Speak without fear.
  14. உனக்கு என்ன வேண்டும் என்று சொல்.
    Unakku enna vaendum endru sol.
    Say what you want.
  15. நான் சொல்கிற படி செய்.
    Naan solgira padi sey.
    Do as I say.
  16. நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய்.
    Naan enna solgiraeno adhai sey.
    Do what I say.
  17. நீங்கள் சொல்ல வேண்டும்.
    Neengal solla vaendum.
    You have to say.
  18. நீங்கள் அவளிடம் சொல்ல வேண்டும்.
    Neengal avalidam solla vaendum.
    You have to tell her.
  19. நீங்கள் சந்துருவுக்குச் சொல்லுங்கள்.
    Neengal Chandruvalukku sollungal.
    Tell Chandru.
  20. நீங்கள் எல்லோரிடமும் சொல்லுங்கள்.
    Neengal elloridamum sollungal.
    Tell everyone.
  21. துல்லியமான மதிப்பைச் சொல்லுங்கள்.
    Thulliyamaana madhippai sollungal.
    State the accurate value.
  22. மீண்டும் சொல்லுங்கள்.
    Meendum sollungal.
    Say it again.
  23. சரியான மதிப்பைச் சொல்லுங்கள்.
    Sariyaana madhippai sollungal.
    State the correct value.
  24. மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள்.
    Meendum orumurai sollungal.
    Say it once again.
  25. மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
    Meendum meendum sollungal.
    Say it again and again.
  26. நான் சொல்வதை திரும்பச் சொல்லுங்கள்.
    Naan solvadhai thirumba sollungal.
    Repeat what I say.
  27. என்னைச் சொல்லவிடுங்கள்.
    Ennai solla vidungal.
    Let me speak.
  28. நான் வரமாட்டேன் என்று அவளிடம் சொல்.
    Naan varamaatten endru avalidam sol.
    Tell her that I won't come.
  29. வேகமாகச் சொல்லவும்.
    Vegamaaga sollavum.
    Say it fast.
  30. மெதுவாகச் சொல்.
    Medhuvaaga sol.
    Say it slowly.
  31. உங்களுடைய மகனிடம் சொல்லுங்கள்.
    Ungaludaiya maganidam sollungal.
    Tell your son.
  32. தினமும் நீ வாய்ப்பாடு சொல்ல வேண்டும்.
    Dhinamum nee vaaippaadu solla vaendum.
    You should recite multiplication tables daily.
  33. நான் சொன்னதைச் செய்.
    Naan sonnadhai sey.
    Do what I said.
  34. உங்களுக்கு நான் பிறகு சொல்கிறேன். பை.
    Ungalukku naan piragu solgiren. Bye.
    I will tell you later. Bye.

Common Mistakes with 'Say'

Frequently Asked Questions (FAQ)

  1. Q: What is the main difference between "say" and "tell"?
    A: Use "say" when focusing on the words spoken (e.g., "He said hello"). Use "tell" when focusing on who receives the information, followed directly by an object (e.g., "He told me the truth").
  2. Q: Can I say "He said me"?
    A: No, "He said me" is grammatically incorrect. You should say "He said to me" or "He told me".
  3. Q: What does "Needless to say" mean?
    A: "Needless to say" means that something is so obvious or expected that it does not need to be explained (e.g., "Needless to say, it was a great day").
  4. Q: Is "I am saying" used commonly in English?
    A: Yes, "I am saying" (present continuous) is used when clarifying your current statement or opinion (e.g., "I am saying that we should leave early").
  5. Q: How do I use "Let's say" in daily conversations?
    A: "Let's say" is used to make a hypothetical assumption or suggestion (e.g., "Let's say we meet at 6 PM").
  6. Q: What is the past participle form of "say"?
    A: The past participle of "say" is "said" (e.g., "I have said everything I know").
  7. Q: Can "say" be followed directly by a clause starting with "that"?
    A: Yes, it is very common (e.g., "She said that she was busy"). The word "that" can also be omitted in informal speech.

Summary (English + Tamil explanation)

You have now learned many useful English phrases with "say" that are commonly used in everyday conversation. Practising these sentences will help you become more fluent and confident when speaking English.

இப்பக்கத்தில் "சொல்" (say) என்ற வினைச்சொல்லுடன் பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் நீங்கள் கற்றுக்கொண்டுள்ளீர்கள். இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.

Practice Tips

Keep practising by saying the phrases out loud and using them in real-life situations. Your command over commonly used verbs like "say" forms a solid base for more advanced English skills.

Do It Yourself: Try to make sentences using the verb tell

Verb Form English Tamil
Base Form tell சொல்
Past Tense told சொன்னேன்
Past Participle told சொல்லியிரு--
Present Participle telling சொல்லிக் கொண்டிரு-

People Also Learn

👉 Daily English phrases - BUY (வாங்கு)

👉 Tenses with Examples - DO (செய்)

👉 Sample Job Interview Guide

👉 Emergency Help Conversation

👉 The Milkmaid and Her Pail Story in English