Common English Phrases Using the Verb 'Stand' With Tamil Meaning

On this page, you will find common phrases using the verb "stand" in different tenses and practical daily situations. Each phrase is presented in English with Tanglish pronunciation and Tamil translation so that Tamil speakers can understand and use them confidently in real conversations.

How to Use the Verb 'Stand'

The verb "stand" (நில் / எழுந்து நில்) is an irregular verb (stand – stood – stood). Apart from referring to physical upright posture, it is frequently used in daily contexts to mean tolerating something, waiting in line, or taking a position on an issue.

Verb Definition and Tenses

Verb Form English Tamil
Base Form stand நில்
Past Tense stood நின்றேன்
Past Participle stood நின்றிரு-
Present Participle standing நின்று கொண்டிரு-

stood - நின்றிரு- மற்றும் standing- நின்று கொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெறும்.

Example Sentences in Different Tense Forms

The examples include simple present, past, future, continuous, and perfect forms to help you see how "stand" changes in complete, meaningful contexts.

  1. You stand near the gate - நீங்கள் கேட் அருகே நில்லுங்கள்.
  2. You stood in the second row yesterday - நீ நேற்று இரண்டாவது வரிசையில் நின்றாய்.
  3. You will stand near the entrance - நீ நுழைவாயில் அருகே நிற்பாய்.
  4. I am standing in the queue - நான் வரிசையில் நின்று கொண்டிருக்கிறேன்.
  5. I was standing at the bus stop - நான் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன்.
  6. I will be standing outside the office - நான் அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டிருப்பேன்.
  7. I have stood here for twenty minutes - நான் இங்கே இருபது நிமிடங்கள் நின்றிருக்கிறேன்.
  8. I had stood in the crowd before I found a seat - இருக்கை கிடைக்கும் முன் நான் கூட்டத்தில் நின்றிருந்தேன்.
  9. I would have stood there if you had asked me - நீங்கள் கேட்டிருந்தால் நான் அங்கே நின்றிருப்பேன்.
  10. I have been standing in this line since morning - நான் காலையிலிருந்தே இந்த வரிசையில் நின்று கொண்டிருக்கிறேன்.
  11. I had been standing there for two hours before the bus arrived - பேருந்து வருவதற்கு முன்பு நான் அங்கு இரண்டு மணி நேரமாக நின்று கொண்டிருந்தேன்.
  12. I would have been standing there if I hadn't taken a auto - நான் ஆட்டோ எடுக்கவில்லை என்றால் அங்கே நின்று கொண்டிருந்திருப்பேன்.

Questions and Responses

  1. Why do you stand here? - நீ ஏன் இங்கு நிற்கிறாய்?
  2. The teacher told me to stand here - ஆசிரியர் என்னை இங்கு நிற்கச் சொன்னார்கள்.
  3. Why do you stand outside the class? - வகுப்பிற்கு வெளியே நீ ஏன் நிற்கிறாய்?
  4. I stand outside the class because I came late - நான் தாமதமாக வந்ததால் வகுப்பிற்கு வெளியே நிற்கிறேன்.
  5. I stood outside the class because I was late - நான் தாமதமாக வந்ததால் வகுப்பிற்கு வெளியே நின்றேன்.
  6. Did you stand outside the classroom? - நீ வகுப்புக்கு வெளியே நின்றாயா?
  7. Yes, I stood outside for a few minutes - ஆமாம், நான் சில நிமிடங்கள் வெளியே நின்றேன்.
  8. How long did you stand outside the class? - வகுப்புக்கு வெளியே நீ எவ்வளவு நேரம் நின்றாய்?
  9. I stood for ten minutes - நான் பத்து நிமிடங்கள் நின்றேன்.
  10. Will you stand on the footboard? - நீ படிக்கட்டில் நிற்பாயா?
  11. I won't stand on the footboard hereafter - நான் இனிமேல் படிக்கட்டில் நிற்கமாட்டேன்.
  12. Won't you stand in the queue? - நீ வரிசையில் நிற்கமாட்டாயா?
  13. He will never stand in the queue - அவன் எப்பொழுதும் வரிசையில் நிற்க மாட்டான்.
  14. I will stand in the queue - நான் வரிசையில் நிற்பேன்.
  15. I will always stand in the queue - நான் எப்பொழுதும் வரிசையில் நிற்பேன்.
  16. Where are you standing right now? - நீ இப்போது எங்கே நின்று கொண்டிருக்கிறாய்?
  17. I am standing near the ticket counter - நான் டிக்கெட் கவுண்டர் அருகே நின்று கொண்டிருக்கிறேன்.
  18. Where are they standing? - அவர்கள் எங்கு நின்று கொண்டிருக்கிறார்கள்?
  19. They are standing near the bus stand - அவர்கள் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
  20. Why was he standing at the bus stop? - அவர் பேருந்து நிலையத்தில் ஏன் நின்று கொண்டிருந்தார்?
  21. He was standing to receive his daughter - அவர் அவருடைய மகளை வரவேற்க நின்று கொண்டிருந்தார்.
  22. Has he been standing for a long time? - அவர் நீண்ட நேரமாக நின்றிருக்கிறாரா?
  23. Yes, he has stood there for over an hour - ஆமாம், அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கே நின்றிருக்கிறார்.

How to Say in English

Practice translating daily spoken statements into English using "stand" along with Tanglish pronunciation and Tamil translation.

  1. Tamil: இறைவணக்கம். எல்லோரும் தயவுசெய்து எழுந்து நிற்கவும்.
    Tanglish: Iraivanakkam. Elloorum dhayavuseydhu ezhundhu nirkavum.
    English: Prayer. All of you please stand up.

  2. Tamil: இங்கேயும் அங்கேயும் நிற்காதீர்கள்.
    Tanglish: Ingaeyum angaeyum nirkaadheergal.
    English: Don't stand here and there.

  3. Tamil: மாணவர்களே, எல்லோரும் வரிசையில் நில்லுங்கள்.
    Tanglish: Maanavargalae, elloorum varisaiyil nillungal.
    English: Students, all of you stand in a queue.

  4. Tamil: நீ எழுந்து நில்.
    Tanglish: Nee ezhundhu nil.
    English: You stand up.

  5. Tamil: நீ இங்கே நில்.
    Tanglish: Nee ingae nil.
    English: You stand here.

  6. Tamil: வகுப்பிற்கு வெளியே போய் நில்.
    Tanglish: Vaguppirku veliyae poy nil.
    English: Go and stand outside the class.

  7. Tamil: என்னால் நீண்ட நேரம் நிற்க முடியாது.
    Tanglish: Ennaal neenda naeram nirka mudiyaadhu.
    English: I can't stand for too long.

  8. Tamil: நீங்கள் இங்கு நிற்கக்கூடாது.
    Tanglish: Neengal ingu nirka koodaadhu.
    English: You shouldn't stand here.

  9. Tamil: வழியில் நிற்காதீர்கள்.
    Tanglish: Vazhiyil nirkaadheergal.
    English: Don't stand in the way.

  10. Tamil: பேருந்தில் படிக்கட்டில் நிற்காதீர்கள்.
    Tanglish: Paerundhil padikkattil nirkaadheergal.
    English: Don't stand on the footboard in the bus.

  11. Tamil: இடி இடிக்கும் போது மரத்தின் அடியில் நிற்காதீர்கள்.
    Tanglish: Idi idikkum podhu marathin adiyil nirkaadheergal.
    English: Don't stand under trees during a thunderstorm.

  12. Tamil: மின்மாற்றியின் அடியில் நிற்காதீர்கள்.
    Tanglish: Minmaatriyin adiyil nirkaadheergal.
    English: Don't stand near or under the transformer.

  13. Tamil: விற்பனையாளர் நாள் முழுவதும் நின்று கொண்டிருக்க வேண்டும்.
    Tanglish: Virpanaiyaalar naal muzhudhum nindru kondirukka vaendum.
    English: The salesman has to stand for the whole day.

  14. Tamil: எல்லோரும் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றார்கள்.
    Tanglish: Elloorum dhesiya geethathirku ezhundhu nindraargal.
    English: Everyone stood up for the National Anthem.

  15. Tamil: அவர் கடைக்கருகில் நின்று கொண்டிருக்க மாட்டார்.
    Tanglish: Avar kadaikkarugil nindru kondirukka maattaar.
    English: He won't be standing near the shop.

  16. Tamil: அவர் கோயிலுக்கருகில் நின்று கொண்டிருப்பார்.
    Tanglish: Avar koyilukkarugil nindru kondiruppaar.
    English: He will be standing near the temple.

  17. Tamil: நான் நான்கு மணியிலிருந்து நின்று கொண்டிருக்கிறேன்.
    Tanglish: Naan naangu maniyilirundhu nindru kondirukkiraen.
    English: I have been standing here since 4 o'clock.

  18. Tamil: அவர்கள் ஆறு மணி வரை நின்று கொண்டிருந்தார்கள்.
    Tanglish: Avargal aaru mani varai nindru kondirundhaargal.
    English: They had been standing till 6 o'clock.

  19. Tamil: என்னால் இந்தச் சூட்டைத் தாங்க முடியவில்லை.
    Tanglish: Ennaal indha soottai thaanga mudiyavillai.
    English: I can't stand this heat.

  20. Tamil: கடினமான சூழ்நிலையிலும் நான் உனக்கு ஆதரவாக நிற்பேன்.
    Tanglish: Kadinamaana soozhnilaiyilum naan unakku aadharavaaga nirpaen.
    English: I will stand by you in tough times.

  21. Tamil: அவளுடைய திறமை அவளைத் தனியாகக் காட்டுகிறது.
    Tanglish: Avaludaiya thiramai avalai thaniyaagak kaattugiradhu.
    English: Her talent makes her stand out.

Common Mistakes with 'Stand'

Frequently Asked Questions (FAQ)

  1. Q: What does "stand up" mean?

    A: To rise to an upright position on your feet from sitting or lying down.

  2. Q: What does "can't stand" mean in daily English?

    A: It means to strongly dislike or be unable to tolerate something (e.g., "I can't stand noise").

  3. Q: What is the difference between "stand by" and "stand out"?

    A: "Stand by" means to support someone or be ready, while "stand out" means to be easily noticed or superior.

  4. Q: Is "stand in line" or "stand in queue" correct?

    A: Both are correct! "Stand in line" is common in American English, while "stand in a queue" is standard British English.

Summary (English + Tamil explanation)

You have now learned many useful English phrases with "stand" that are commonly used in everyday conversation. Practising these sentences will help you become more fluent and confident when speaking English.

இப்பக்கத்தில் "stand" உடன் பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் நீங்கள் கற்றுக்கொண்டுள்ளீர்கள். இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.

Practice Tips

Keep practising by saying the phrases out loud and using them in real-life situations. Your command over commonly used verbs like "stand" forms a solid base for more advanced English skills.

Do It Yourself: Try to make sentences using the verb walk

Verb Form English Tamil
Base Form walk நட
Past Tense walked நடந்தேன்
Past Participle walked நடந்திரு-
Present Participle walking நடந்து கொண்டிரு-

People Also Learn

Daily English phrases - SEE (பார்)

Action Verbs List

What are your strengths?

Sales call conversation

Hercules and the Wagoner story in English