Common Phrases - பொதுவான சொற்றொடர்கள்
come - வா - வரவும் - வாங்க - வாருங்கள்
| Present Tense - நிகழ் காலம் | Past Tense - இறந்த காலம் | Past participle - முடிவுற்ற வினையெச்சம் | Continuous - தொடர் வினையெச்சம் |
|---|---|---|---|
| come - வா | came - வந்தேன் | come - வந்திரு- | coming- வந்து கொண்டிரு- |
come - வந்திரு- மற்றும் coming- வந்து கொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெரும்.
- You come - நீங்கள் வாருங்கள்.
- I come - நான் வருகிறேன்.
- I came - நான் வந்தேன்.
- I will come - நான் வருவேன்.
- I am coming - நான் வந்து கொண்டிருக்கிறேன்.
- I was coming - நான் வந்து கொண்டிருந்தேன்.
- I would be coming - நான் வந்து கொண்டிருப்பேன்.
- I have come - நான் வந்திருக்கிறேன்.
- I had come - நான் வந்திருந்தேன்.
- I would have come - நான் வந்திருப்பேன்.
- I have been coming - நான் வந்து கொண்டிருந்திருக்கிறேன்.
- I had been coming - நான் வந்து கொண்டிருந்திருந்தேன்.
- I would have been coming - நான் வந்து கொண்டிருந்திருப்பேன்.
- You come to see me - நீங்கள் என்னைப் பார்க்க வாருங்கள்.
- You came to see me - நீங்கள் என்னைப் பார்க்க வந்தீர்கள்.
- You will come to see me - நீங்கள் என்னைப் பார்க்க வருவீர்கள்.
- He is coming to see me - அவர் என்னைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறார்.
- She was coming to see me - அவள் என்னைப் பார்க்க வந்து கொண்டிருந்தாள்.
- They will be coming to see me - அவர்கள் என்னைப் பார்க்க வந்து கொண்டிருப்பார்கள்.
- They have come to see me - அவர்கள் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள்.
- We had come to see you - நாங்கள் உங்களைப் பார்க்க வந்திருந்தோம்.
- We would have come to see her - நாங்கள் அவளைப் பார்க்க வந்திருப்போம்.
- You have been coming to see him - நீ அவரைப் பார்க்க வந்து கொண்டிருந்திருக்கிறாய்.
- I had been coming to see you - நான் உங்களைப் பார்க்க வந்து கொண்டிருந்திருந்தேன்.
- He would have been coming to see you - அவர் உங்களைப் பார்க்க வந்து கொண்டிருந்திருப்பார்.
- You come to Chennai - நீங்கள் சென்னைக்கு வரவும்.
- You have to come - நீ வரவேண்டும்.
- You should come - நீ கட்டாயம் வரவேண்டும்.
- You must come - நீங்கள் அவசியம் வரவேண்டும்.
- Should I come? - நான் கட்டாயம் வரவேண்டுமா?
- Why should I come? - நான் ஏன் வரவேண்டும்?
- You shouldn’t come - நீ வரக் கூடாது.
- You don’t come here - நீங்கள் இங்கே வராதீர்கள்.
- You don’t come here - நீ இங்கே வராதே.
- May I come? - நான் வரலாமா?
- You may come - நீங்கள் வரலாம்.
- You can come - உங்களால்; வர முடியும்.
- You can’t come - உன்னால் வர முடியாது.
- Let me come - என்னை வரவிடுங்கள்.
- Come home - வீட்டிற்கு வாங்க.
- Come to play - விளையாட வா.
- Ok. I come to play - சரி. நான் விளையாட வருகிறேன்.
- Finish your home work - உன்னுடைய வீட்டுப் பாடத்தை முடி.
- Then come to play - அதன் பிறகு விளையாட வா.
- Come fast - வேகமாக வரவும்.
- Come slowly - மெதுவாக வா.
- Come to your place - உன்னுடைய இடத்திற்;கு வா.
- You should come to school daily - தினமும் நீ பள்ளிக்கூடம் வரவேண்டும்.
- Did you come? - நீங்கள் வந்தீர்களா?
- No. I didn’t come - இல்லை. நான் வரவில்லை.
- Yes. I came here - ஆமாம். நான் இங்கு வந்தேன்.
- When did you come? - நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்?
- I came just now only - நான்; இப்பொழுது தான் வந்தேன்.
- Where did you come? - நீங்கள் எங்கு வந்தீPர்கள்?
- I came to our Head Office - நான்; எங்கள் தலைமை அலுவலகத்துக்கு வந்தேன்.
- Why did you come? - நீங்கள் ஏன் வந்தீர்கள்?
- What for? - எதற்காக?
- I came for a meeting - நான்; ஒரு சந்திப்புக்காக வந்தேன்.
- How did you come? - நீங்கள் எப்படி வந்தீர்கள்?
- By train - தொடர்வண்டியில்.
- Why didn’t you come to office? - நீங்கள் ஏன் அலுவலகத்துக்கு வரவில்லை?
- Didn’t you come yesterday? - நேற்று நீங்கள் வரவில்லையா?
- Why didn’t you come yesterday? - நேற்று நீங்கள் ஏன் வரவில்லை?
- Because, my sister had come to see me - ஏனெனில், என் சகோதரி என்னைப் பார்க்க வந்திருந்தாள்.
- Shall I come? - நான் வரட்டுமா?
- I shall come - நான் வருவேன்.
- We shall come - நாங்கள் வருவோம்.
- He will come - அவர் வருவார்.
- They will come - அவர்கள் வருவார்கள்.
- Would you come to college? - நீ கல்லூரிக்கு வருவாயா?
- I won’t come to college - நான் கல்லூரிக்கு வரமாட்டேன்.
- Won’t he come to tour? - அவன் சுற்றுலா வரமாட்டானா?
- I hope that he will come - நான் அவன் வருவான் என்று நம்புகிறேன்.
- Will you come to Chennai? - நீ சென்னைக்கு வருவாயா?
- I can’t come to Chennai - என்னால்; சென்னைக்கு வரமுடியாது.
- I won’t come to Chennai this week - நான் இந்த வாரம் சென்னைக்கு வரமாட்டேன்.
- I will come next week - நான் அடுத்த வருவேன்.
- Are you coming or not? I’m going - நீ வருகிறாயா? இல்லையா? நான் போகிறேன்.
- They are coming to see you - அவர்கள் உங்களைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறார்கள்.
- Where are they coming? - அவர்கள் எங்கே வந்து கொண்டிருக்கிறார்கள்?
- They are coming near Madurai - அவர்கள் மதுரை அருகே வந்து கொண்டிருக்கிறார்கள்.
- We were coming near Ambattur - நாங்கள் அம்பத்தூர் அருகே வந்து கொண்டிருந்தோம்.
- She will be coming tomorrow - அவள் நாளை வந்து கொண்டிருப்பாள்.
- I have come to see my niece - நான் என் தங்கை மகளைப் பார்க்க வந்திருக்கிறேன்.
- I had come to see my nephew - நான் என் தங்கை மகனைப் பார்க்க வந்திருந்தேன்.
- I would have come to see my parents - நான் என் பெற்றோரைப் பார்க்க வந்திருப்பேன்.
- He has been coming to Pongal every year - அவர் ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு வந்து கொண்டிருந்திருக்கிறார்.
- We had been coming to Pongal every year - நாங்கள் ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு வந்து கொண்டிருந்திருந்தோம்.
- She would have been coming to see my parents - அவள் என் பெற்றோரைப் பார்க்க வந்து கொண்டிருந்திருப்பாள்.
- Don’t forget to come - வருவதற்கு மறக்காதே.
- Ask her to come - அவளை வரச் சொல்.
- You have to come now itself - நீங்கள் இப்பொழுதே வர வேண்டும்.
- Where to come? - எங்கே வர வேண்டும்?
- You have to come to T.Nagar - நீ டி.நகர் வர வேண்டும்.
- How would you come? - நீங்கள் எப்படி வருவீர்கள்?
- I will come by bus - நான் பேருந்தில் வருவேன்.
- Come to see your mother - உங்களுடைய அம்மாவைப் பார்க்க வாருங்கள்.
- Yesterday I came - நேற்று நான் வந்தேன்.
- Yesterday I had come - நேற்று நான் வந்திருந்தேன்.
- I will come tomorrow - நாளை நான் வருவேன்.
- I won’t come - நான் வர மாட்டேன்.
- She has come to Madurai - அவள்/அவர்கள் மதுரைக்கு வந்திருக்கிறார்கள்.
- She will come to US next month - அடுத்த மாதம் அவர்கள் அமெரிக்காவுக்கு வருவார்கள்.
- Will you come with her? - நீ அவர்களுடன் வருவாயா?
- I want to come - நான் வர விரும்புகிறேன்.
- But I can’t come now - ஆனால் என்னால் இப்பொழுது வர இயலாது.
- Have you come to US? - நீங்கள் அமெரிக்கா வந்திருக்கிறீர்களா?
- Yes. I had come last year - ஆமாம். போன வருடம் நான் வந்திருந்தேன்.
- How many times have you come? - நீங்கள் எத்தனை முறை வந்திருக்கிறீர்கள்?
- I have come only once - நான் ஒரு முறை தான் வந்திருக்கிறேன்.
- What for you came? - எதற்காக நீங்கள் வந்தீர்கள்?
- I came to see my sister - நான் என்னுடைய சகோதரியைப் பார்க்க வந்தேன்.
- How did you come? - நீங்கள் எப்படி வந்தீர்கள்?
- I came by flight - நான் விமானத்தில் வந்தேன்.
- When did you come? - நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்?
- I came last year - நான் போன வருடம் வந்தேன்.
- When had you come? - நீங்கள் எப்பொழுது வந்திருந்தீர்கள்?
- I had come two years back - நான் இரண்டு வருடத்திற்கு முன் வந்திருந்தேன்.
- With whom you came? - நீங்கள் யாருடன் வந்தீர்கள்?
- I came with my mother - நான் என்னுடைய அம்மாவுடன் வந்தேன்.
- I came alone - நான் தனியாக வந்தேன்.
- I came with my family - நான் எனது குடும்பத்துடன் வந்தேன்.
- My father didn’t allow me to come - என்னுடைய அப்பா என்னை வர அனுமதிக்கவில்லை.
- Otherwise I would have come to India - இல்லையெனில் நான் இந்தியாவுக்கு வந்திருப்பேன்.
- Had you come to Australia? - நீங்கள் ஆஸ்ட்ரேலியாவுக்கு வந்திருந்தீர்களா?
- Yes. I had come - ஆமாம். நான் வந்திருந்தேன்.
- No. I never came - இல்லை. நான் ஒருபோதும் வந்ததில்லை.
- But I have come to London once - ஆனால் நான் லண்டனுக்கு ஒரு முறை வந்திருக்கிறேன்.
- My sister is coming from Madurai - என் சகோதரி மதுரையிலிருந்து வந்து கொண்டிருக்கிறாள்.
- I am going to receive her - நான் அவளை வரவேற்கச் செல்கிறேன்.
- You too come with me - நீயும் என்னுடன் வா.
- Ok. Come. Let’s go - சரி. வா. நாம் போகலாம்.
| Present Tense - நிகழ் காலம் | Past Tense - இறந்த காலம் | Past participle - முடிவுற்ற வினையெச்சம் | Continuous - தொடர் வினையெச்சம் |
|---|---|---|---|
| bring - கொண்டு வா | brought - கொண்டு வந்தேன் | brought - கொண்டு வந்திரு- | bringing- கொண்டு வந்து கொண்டிரு- |
Next: Phrases - Go