Common English Phrases Using the Verb 'See' – With Tamil Meaning

Learning everyday phrases is one of the most effective ways to improve your spoken English. On this page, you will find common phrases using the verb "see" in different tenses and practical daily situations. Each phrase is presented in English with Tanglish pronunciation and Tamil translation so that Tamil speakers can understand and use them confidently in real conversations.

How to Use the Verb 'See'

The verb "see" (பார்) is an irregular verb (see – saw – seen). Beyond physical vision using eyes, it is widely used in daily conversation to mean meeting someone, understanding an idea, ensuring/arranging something, or experiencing events.

Verb Definition and Tenses

Verb Form English Tamil
Base Form see பார்
Past Tense saw பார்த்தேன்
Past Participle seen பார்த்திரு-
Present Participle seeing பார்த்துக் கொண்டிரு-

seen - பார்த்திரு- மற்றும் seeing- பார்த்துக் கொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெறும்.

Example Sentences in Different Tense Forms

The examples include simple present, past, future, continuous, and perfect forms to help you see how "see" changes in complete, meaningful contexts.

  1. We see a beautiful bird in the garden - நாங்கள் தோட்டத்தில் ஒரு அழகான பறவையைப் பார்க்கிறோம்.
  2. We saw a movie yesterday - நாங்கள் நேற்று ஒரு படம் பார்த்தோம்.
  3. We will see the doctor tomorrow morning - நாங்கள் நாளை காலை மருத்துவரைப் பார்ப்போம்.
  4. We are seeing the live match on TV - நாங்கள் தொலைக்காட்சியில் நேரலைப்போட்டியைக் கண்டு கொண்டிருக்கிறோம்.
  5. We were seeing the photos when you called - நீங்கள் அழைத்தபோது நாங்கள் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
  6. We will be seeing the Rose Garden in Ooty tomorrow - நாளை இந்நேரம் நாங்கள் ஊட்டியில் உள்ள ரோஜாத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம்.
  7. We have seen the Taj Mahal twice - நாங்கள் தாஜ்மஹாலை இரண்டு முறை பார்த்திருக்கிறோம்.
  8. We had seen the news before he mentioned it - அவர் அதைப் பற்றிப் பேசுவதற்கு முன்பே நாங்கள் செய்தியைப் பார்த்திருந்தோம்.
  9. We would have seen the solar eclipse if we had used telescopes - நாங்கள் தொலைநோக்கியைப் பயன்படுத்தியிருந்தால் சூரிய கிரகணத்தைப் பார்த்திருப்போம்.
  10. We have been seeing this doctor for five years - நாங்கள் ஐந்து வருடங்களாக இந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறோம்.
  11. We had been seeing that serial every day before it ended - அந்தத் தொடர் முடிவடையும் வரை நாங்கள் தினமும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
  12. We would have been seeing the matches live if we had purchased the tickets - நாங்கள் டிக்கெட் வாங்கியிருந்தால் போட்டிகளை நேரலையாகப் பார்த்துக் கொண்டிருந்திருப்போம்.

Questions and Responses

  1. Do you see me on the screen? - நீங்கள் திரையில் என்னைப் பார்க்கிறீர்களா?
  2. Yes, I can see you clearly - ஆமாம், நான் உங்களைத் தெளிவாகப் பார்க்கிறேன்.
  3. Did you see the new notice board? - நீங்கள் புதிய அறிவிப்புப் பலகையைப் பார்த்தீர்களா?
  4. Yes, I saw it this morning - ஆமாம், நான் இன்று காலை அதைப் பார்த்தேன்.
  5. Where did you see her yesterday? - நேற்று அவளை நீ எங்கு பார்த்தாய்?
  6. We saw her at a wedding hall - நாங்கள் அவளை ஒரு திருமண மண்டபத்தில் பார்த்தோம்.
  7. Will you see my brother at the station? - நீங்கள் ரயில் நிலையத்தில் என் சகோதரரைப் பார்ப்பீர்களா?
  8. Yes, I will see him there - ஆமாம், நான் அவரை அங்கு பார்ப்பேன்.
  9. No, I won't be able to see him today - இல்லை, என்னால் இன்று அவரைப் பார்க்க முடியாது.
  10. Have you seen the Red Fort in Delhi? - நீங்கள் டெல்லியில் உள்ள செங்கோட்டையைப் பார்த்திருக்கிறீர்களா?
  11. Yes, I have seen it already - ஆமாம், நான் அதை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.
  12. No, I have never seen it - இல்லை, நான் அதை ஒருபோதும் பார்த்ததில்லை.
  13. Had you seen him before he came here? - அவர் இங்கு வருவதற்கு முன்பே நீ அவரைப் பார்த்திருந்தாயா?
  14. Yes, I had seen him last year in Chennai - ஆமாம், கடந்த வருடம் சென்னையில் அவரைப் பார்த்திருந்தேன்.
  15. Whom did you see at the office? - அலுவலகத்தில் நீ யாரைப் பார்த்தாய்?
  16. I saw the manager regarding my project - எனது திட்டம் குறித்து நான் மேலாளரைப் பார்த்தேன்.
  17. Why didn't you see the doctor? - நீ ஏன் மருத்துவரைப் பார்க்கவில்லை?
  18. I didn't see the doctor because I felt better - எனக்கு உடல்நலம் தேறியதால் நான் மருத்துவரைப் பார்க்கவில்லை.
  19. May I see the patient now? - நான் இப்போது நோயாளியைப் பார்க்கலாமா?
  20. Yes, you may go and see him now - ஆமாம், நீங்கள் இப்போது சென்று அவரைப் பார்க்கலாம்.
  21. Were you seeing them play football? - அவர்கள் கால்பந்து விளையாடுவதை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தீர்களா?
  22. Yes, we were seeing the match from the stands - ஆமாம், நாங்கள் பார்வையாளர் மாடத்திலிருந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

How to Say in English

Practice translating daily spoken statements into English using "see" along with Tanglish pronunciation and Tamil translation.

  1. நான் உன்னை என் சகோதரியாகப் பார்க்கிறேன்.
    Naan unnai en sagodhariyaagap paarkkiraen.
    I see you as my sister.
  2. உன்னுடைய முகத்தைக் கண்ணாடியில் பார்.
    Unnudaiya mugathaik kannaadiyil paar.
    See your face in the mirror.
  3. கவனமாகப் பாருங்கள்.
    Kavanamaagap paarungal.
    See carefully.
  4. குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று பார்.
    Kuzhandhaigal enna seygiraargal endru paar.
    See what the children are doing.
  5. வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்.
    Veedu eppozhudhum sutthamaaga irukkiradha endru paarthukkol.
    See that your home is always clean.
  6. நீ ராமைப் பார்த்தால் எனது வாழ்த்தைத் தெரிவி.
    Nee Ramai paarthaal enadhu vaazhthait therivi.
    If you see Ram, convey my wishes to him.
  7. நான் நேற்று உன்னைக் கடையில் பார்த்தேன்.
    Naan naetru unnaik kadaiyil paarthaen.
    I saw you in the shop yesterday.
  8. அவள் அதை மேஜை மேல் பார்த்தாள்.
    Aval adhai maejai mael paarthaal.
    She saw that on the table.
  9. நாளை நான் புதிய திரைப்படம் பார்ப்பேன்.
    Naalai naan pudhiya thiraippadam paarppaen.
    I will see the new movie tomorrow.
  10. அவள் தொலைக்காட்சித் தொடர் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
    Aval tholaikkaatchith thodar paarthuk kondirukkiraal.
    She is seeing a TV serial.
  11. நாங்கள் மேட்டூர் அணையைப் பார்த்திருக்கிறோம்.
    Naangal Mettur anaiyaip paarthirukkiraom.
    We have seen the Mettur Dam.
  12. நான் உன்னை முன்பே எங்களூர் சந்தையில் பார்த்திருக்கிறேன்.
    Naan unnai munpae engaloor sandhaiyil paarthirukkiraen.
    I have seen you before at our local market.
  13. நீ சீக்கிரம் போயிருந்தால் அவர்களைப் பார்த்திருப்பாய்.
    Nee seekkiram poyirundhaal avargalaip paarthiruppaay.
    If you had gone early, you would have seen them.
  14. நீங்கள் இந்த அறிக்கையைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.
    Neengal indha arikkaiyaik kandippaagap paarkka vaendum.
    You must see this report.
  15. என்னைப் பார்க்க விடுங்கள்.
    Ennaip paarkka vidungal.
    Let me see.
  16. உங்களை அப்புறம் பார்க்கிறேன்.
    Ungalaip appuram paarkkiraen.
    See you later.
  17. அவள் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது.
    Aval kashtappaduvadhai ennaal paarkka mudiyaadhu.
    I can't see her suffering.
  18. சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்க்கக் கூடாது.
    Sooriya giraganathai verungkannaal paarkkak koodaadhu.
    You shouldn't see a solar eclipse with the naked eye.
  19. அவள் தொலைநோக்கி வழியாக நிலவைப் பார்த்தாள்.
    Aval tholainoikki vazhiyaaga nilaivaip paarthaal.
    She saw the moon through a telescope.
  20. நான் எனது அண்ணனை வழியனுப்பி வைக்க ரயில் நிலையம் செல்கிறேன்.
    Naan enadhu annanaiv vazhiyanuppi vaikka railway nilayam selgiraen.
    I am going to the station to see off my brother.

Common Mistakes with 'See'

Frequently Asked Questions (FAQ)

  1. Q: What is the difference between "see", "look", and "watch"?
    A: See happens naturally without deliberate focus (e.g., "I see a bird"). Look means directing your eyes towards something specifically (e.g., "Look at the board"). Watch means observing something active or moving for a duration (e.g., "Watch TV" or "Watch a match").
  2. Q: Can I say "I am seeing a movie"?
    A: While "seeing a movie" is understood, native speakers generally prefer saying "watching a movie" for screen entertainment. "Seeing" is commonly used when visiting a cinema hall or theater (e.g., "We are seeing a show tonight").
  3. Q: What does "I see" mean when someone is talking to me?
    A: It means "I understand what you are saying" (எனக்கு புரிகிறது).
  4. Q: What does "see off" mean?
    A: It means accompanying someone to an airport, railway station, or bus stand to bid them farewell when they leave.

Summary (English + Tamil explanation)

You have now learned many useful English phrases with "see" that are commonly used in everyday conversation. Practising these sentences will help you become more fluent and confident when speaking English.

இப்பக்கத்தில் "see" உடன் பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் நீங்கள் கற்றுக்கொண்டுள்ளீர்கள். இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.

Practice Tips

Keep practising by saying the phrases out loud and using them in real-life situations. Your command over commonly used verbs like "see" forms a solid base for more advanced English skills.

Do It Yourself: Try to make sentences using the verb look

Practice converting these verb forms into your own spoken English sentences:

Verb Form English Tamil
Base Form look பார்
Past Tense looked பார்த்தேன்
Past Participle looked பார்த்திரு-
Present Participle looking பார்த்துக் கொண்டிரு-

People Also Learn

👉 Daily English phrases - COME (வா)

👉 Auxiliary Verbs

👉 What are your weaknesses?

👉 Restaurant conversation

👉 Hare and Tortoise story in English