12 Tenses Using the Verb WORK with Tamil Meaning & Examples
Interrogative, Affirmative and Negative Sentences Using the Verb WORK in all twelve tenses
நேர்மறை, எதிர்மறை மற்றும் வினா வாக்கியங்கள்
நேர்மறை வாக்கியங்கள் உண்மைகள்/உறுதியானவற்றைக் கூறுகின்றன, எதிர்மறை வாக்கியங்கள் "இல்லை" என்பதைப் பயன்படுத்தி அவற்றை மறுக்கின்றன, மேலும் வினா வாக்கியங்கள், பெரும்பாலும் பொருள்/வினைச்சொல்லை இடம் மாற்றுவதன் மூலமோ அல்லது கேள்வி வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலமோ கேள்விகளைக் கேட்கின்றன. வினா வாக்கியங்கள், பெரும்பாலும் உதவி வினைச்சொற்களைப் பயன்படுத்தி அல்லது கேள்வி வார்த்தைகளைப் பயன்படுத்தி கேள்விகளைக் கேட்கின்றன.
உதாரணமாக,- He worked - அவன் வேலை செய்தான் (நேர்மறை).
- He didn’t work - அவன் வேலை செய்யவில்லை (எதிர்மறை).
- Did he work? - அவன் வேலை செய்தானா? (வினா).
இந்த பக்கத்தில், நேர்மறை, எதிர்மறை, வினா வாக்கியங்கள் வெவ்வேறு காலங்களில் work - வேலை செய் என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
Verb definition and tenses
| Verb Form | English | Tamil |
|---|---|---|
| Base Form | work | வேலை செய் |
| Past Tense | worked | வேலை செய்தேன் |
| Past Participle | worked | வேலை செய்திரு- |
| Present Participle | working | வேலை செய்துகொண்டிரு- |
worked - வேலை செய்திரு- மற்றும் working- வேலை செய்துகொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெரும்.
Simple - தனிவினை
Simple Present - நிகழ்காலத் தனிவினை
Interrogative - வினா?
நீ சென்னையில் வேலை செய்கிறாயா?
Do you work in Chennai?
டூ யூ வொர்க் இன் சென்னை?
Affirmative - நேர்மறை
ஆமாம். நான் சென்னையில் வேலை செய்கிறேன்.
Yes. I work in Chennai.
யெஸ். ஐ வொர்க் இன் சென்னை.
Negative - எதிர்மறை
இல்லை. நான் சென்னையில் வேலை செய்யவில்லை.
No. I don’t work in Chennai.
நோ. ஐ டோன்ட் வொர்க் இன் சென்னை.
Interrogative - வினா?
அவர் இயக்குனராக வேலை செய்கிறாரா?
Does he work as a Director?
டஸ் ஹீ வொர்க் ஆஸ் அ டைரக்டர்?
Affirmative - நேர்மறை
ஆமாம். அவர் இயக்குனராக வேலை செய்கிறார்.
Yes. He works as a Director.
யெஸ். ஹீ வொர்க்ஸ் ஆஸ் அ டைரக்டர்.
Negative - எதிர்மறை
இல்லை. அவர் இயக்குனராக வேலை செய்யவில்லை.
No. He doesn’t work as a Director.
நோ. ஹீ டஸ்ன்ட் வொர்க் ஆஸ் அ டைரக்டர்.
Simple Past - இறந்தகாலத் தனிவினை
Interrogative - வினா?
அவர் உங்களுடைய மகனுடன் வேலை செய்தாரா?
Did he work with your son?
டிட் ஹீ வொர்க் வித் யுவர் சன்?
Affirmative - நேர்மறை
ஆமாம். அவர் என்னுடைய மகனுடன் வேலை செய்தார்.
Yes. He worked with my son.
யெஸ். ஹீ வொர்க்ட் வித் மை சன்.
Negative - எதிர்மறை
இல்லை. அவர் என்னுடைய மகனுடன் வேலை செய்யவில்லை.
No. He didn’t work with my son.
நோ. ஹீ டிடின்ட் வொர்க் வித் மை சன்.
Interrogative - வினா?
நீங்கள் விற்பனைப் பிரிவில் வேலை செய்தீர்களா?
Did you work in the sales section?
டிட் யூ வொர்க் இன் த சேல்ஸ் செக்ஷன்?
Affirmative - நேர்மறை
ஆமாம். நான் விற்பனைப் பிரிவில் வேலை செய்தேன்.
Yes. I worked in the sales section.
யெஸ். ஐ வொர்க்ட் இன் த சேல்ஸ் செக்ஷன்.
Negative - எதிர்மறை
இல்லை. நான் விற்பனைப் பிரிவில் வேலை செய்யவில்லை.
No. I didn’t work in the sales section.
நோ. ஐ டிடின்ட் வொர்க் இன் த சேல்ஸ் செக்ஷன்.
Simple Future - எதிர்காலத் தனிவினை
Interrogative - வினா?
நீ ஒரு கிராமத்தில் வேலை செய்வாயா?
Will you work in a village?
வில் யூ வொர்க் இன் அ வில்லேஜ்?
Affirmative - நேர்மறை
நான் ஒரு கிராமத்தில் வேலை செய்வேன்.
I will work in a village.
ஐ வில் வொர்க் இன் அ வில்லேஜ்.
Negative - எதிர்மறை
நான் ஒரு கிராமத்தில் வேலை செய்ய மாட்டேன்.
I won’t work in a village.
ஐ வோன்ட் வொர்க் இன் அ வில்லேஜ்.
Interrogative - வினா?
அவன் ஒரு குழுவில் வேலை செய்யமாட்டானா?
Won’t he work in a team?
வோன்ட் ஹீ வொர்க் இன் அ டீம்?
Affirmative - நேர்மறை
அவன் ஒரு குழுவில் வேலை செய்வான்.
He will work in a team.
ஹீ வில் வொர்க் இன் அ டீம்.
Negative - எதிர்மறை
அவன் ஒரு குழுவில் வேலை செய்ய மாட்டான்.
He won’t work in a team.
ஹீ வோன்ட் வொர்க் இன் அ டீம்.
Learn more about 👉 will/would usage shall/should usage
Continuous - தொடர்வினை
Present Continuous - நிகழ்காலத் தொடர்வினை
Interrogative - வினா?
நீங்கள் கடற்படையில் ஒரு இரகசிய உளவாளியாக வேலை செய்து கொண்டிருக்கிறீர்களா?
Are you working as a secret agent in the Navy?
ஆர் யூ வொர்க்கிங் ஆஸ் அ சீக்ரெட் ஏஜென்ட் இன் த நேவி?
Affirmative - நேர்மறை
நான் கடற்படையில் ஒரு இரகசிய உளவாளியாக வேலை செய்து கொண்டிருக்கிறேன்.
I am working as a secret agent in the Navy.
ஐ ஆம் வொர்க்கிங் ஆஸ் அ சீக்ரெட் ஏஜென்ட் இன் த நேவி.
Negative - எதிர்மறை
நான் கடற்படையில் ஒரு இரகசிய உளவாளியாக வேலை செய்து கொண்டிருக்கவில்லை.
I am not working as a secret agent in the Navy.
ஐ ஆம் நாட் வொர்க்கிங் ஆஸ் அ சீக்ரெட் ஏஜென்ட் இன் த நேவி.
Interrogative - வினா?
அவன் விருப்பத்துடன் வேலை செய்து கொண்டிருக்கிறானா?
Is he working with interest?
இஸ் ஹீ வொர்க்கிங் வித் இன்ட்ரஸ்ட்?
Affirmative - நேர்மறை
அவன் விருப்பத்துடன் வேலை செய்து கொண்டிருக்கிறான்.
He is working with interest.
ஹீ இஸ் வொர்க்கிங் வித் இன்ட்ரஸ்ட்.
Negative - எதிர்மறை
அவன் விருப்பமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறான்.
He is working without interest.
ஹீ இஸ் வொர்க்கிங் வித்அவுட் இன்ட்ரஸ்ட்.
Past Continuous - இறந்தகாலத் தொடர்வினை
Interrogative - வினா?
நான் சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்தேனா?
Was I working in Singapore?
வாஸ் ஐ வொர்க்கிங் இன் சிங்கப்பூர்?
Affirmative - நேர்மறை
நான் சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
I was working in Singapore.
ஐ வாஸ் வொர்க்கிங் இன் சிங்கப்பூர்.
Negative - எதிர்மறை
நான் சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருக்கவில்லை.
I wasn’t working in Singapore.
ஐ வாஸ்ன்ட் வொர்க்கிங் இன் சிங்கப்பூர்.
Interrogative - வினா?
அவர்கள் தங்கச் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்களா?
Were they working in a gold mine?
வேர் தே வொர்க்கிங் இன் அ கோல்ட் மைன்?
Affirmative - நேர்மறை
அவர்கள் தங்கச் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
They were working in a gold mine.
தே வேர் வொர்க்கிங் இன் அ கோல்ட் மைன்.
Negative - எதிர்மறை
அவர்கள் தங்கச் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கவில்லை.
They weren’t working in a gold mine.
தே வேர்ன்ட் வொர்க்கிங் இன் அ கோல்ட் மைன்.
Future Continuous - எதிர்காலத் தொடர்வினை
Interrogative - வினா?
நான் மருத்துவராக வேலை செய்து கொண்டிருப்பேனா?
Will I be working as a Doctor?
வில் ஐ பீ வொர்க்கிங் ஆஸ் அ டாக்டர்?
Affirmative - நேர்மறை
நான் மருத்துவராக வேலை செய்து கொண்டிருப்பேன்.
I will be working as a Doctor.
ஐ வில் பீ வொர்க்கிங் ஆஸ் அ டாக்டர்.
Negative - எதிர்மறை
நான் மருத்துவராக வேலை செய்து கொண்டிருக்கமாட்டேன்.
I won’t be working as a Doctor.
ஐ வோன்ட் பீ வொர்க்கிங் ஆஸ் அ டாக்டர்.
Interrogative - வினா?
அவள் இராப்பகலாக வேலை செய்து கொண்டிருப்பாளா?
Will she be working day and night?
வில் ஸீ பீ வொர்க்கிங் டே அண்ட் நைட்?
Affirmative - நேர்மறை
அவள் இராப்பகலாக வேலை செய்து கொண்டிருப்பாள்.
She will be working day and night.
ஸீ வில் பீ வொர்க்கிங் டே அண்ட் நைட்.
Negative - எதிர்மறை
அவள் இராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கமாட்டாள்.
She won’t be working day and night.
ஸீ வோன்ட் பீ வொர்க்கிங் டே அண்ட் நைட்.
Perfect - முடிவுற்ற வினை
Present Perfect - முடிவுற்ற நிகழ்கால வினை
Interrogative - வினா?
நீ கொள்முதல் பிரிவில் வேலை செய்திருக்கிறாயா?
Have you worked in the purchase department?
ஹேவ் யூ வொர்க்ட் இன் த பர்சேஸ் டிபார்ட்மென்ட்?
Affirmative - நேர்மறை
ஆமாம். நான் கொள்முதல் பிரிவில் வேலை செய்திருக்கிறேன்.
Yes. I have worked in the purchase department.
யெஸ். ஐ ஹேவ் வொர்க்ட் இன் த பர்சேஸ் டிபார்ட்மென்ட்.
Negative - எதிர்மறை
இல்லை. நான் கொள்முதல் பிரிவில் வேலை செய்யவில்லை.
No. I haven’t worked in the purchase department.
நோ. ஐ ஹேவ்ன்ட் வொர்க்ட் இன் த பர்சேஸ் டிபார்ட்மென்ட்.
Interrogative - வினா?
அவர் உன்னுடைய பிரிவில் வேலை செய்திருக்கிறாரா?
Has he worked in your section?
ஹேஸ் ஹீ வொர்க்ட் இன் யுவர் செக்ஷன்?
Affirmative - நேர்மறை
ஆமாம். அவர் என்னுடைய பிரிவில் வேலை செய்திருக்கிறார்.
Yes. He has worked in my section.
யெஸ். ஹீ ஹேஸ் வொர்க்ட் இன் மை செக்ஷன்.
Negative - எதிர்மறை
இல்லை. அவர் என்னுடைய பிரிவில் வேலை செய்யவில்லை.
No. He hasn’t worked in my section.
நோ. ஹீ ஹேஸ்ன்ட் வொர்க்ட் இன் மை செக்ஷன்.
Past Perfect - முடிவுற்ற இறந்தகால வினை
Affirmative - நேர்மறை
நான் சென்னைக்குக் குடிபெயர்வதற்கு முன்பு அங்கே வேலை செய்திருந்தேன்.
I had worked there before I moved to Chennai.
ஐ ஹேட் வொர்க்டு தியர் பிபோர் ஐ மூவ்டு டூ சென்னை.
Negative - எதிர்மறை
சென்னைக்குக் குடிபெயர்வதற்கு முன்பு நான் அங்கு வேலை செய்ததில்லை.
I hadn't worked there before I moved to Chennai.
ஐ ஹேடின்ட் வொர்க்டு தியர் பிபோர் ஐ மூவ்டு டூ சென்னை.
Future Perfect - முடிவுற்ற எதிர்கால வினை
Interrogative - வினா?
அவன் ஏபிசி நிறுவனத்துக்காக வேலை செய்திருப்பானா?
Will he have worked for ABC Company?
வில் ஹீ ஹேவ் வொர்க்ட் ஃபார் ஏபிசி கம்பெனி?
Affirmative - நேர்மறை
அவன் ஏபிசி நிறுவனத்துக்காக வேலை செய்திருப்பான்.
He will have worked for ABC Company.
ஹீ வில் ஹேவ் வொர்க்ட் ஃபார் ஏபிசி கம்பெனி.
Negative - எதிர்மறை
அவன் ஏபிசி நிறுவனத்துக்காக வேலை செய்திருக்க மாட்டான்.
He won’t have worked for ABC Company.
ஹீ வோன்ட் ஹேவ் வொர்க்ட் ஃபார் ஏபிசி கம்பெனி.
Interrogative - வினா?
நான் அவனுடன் வேலை செய்திருப்பேனா?
Will I have worked with him?
வில் ஐ ஹேவ் வொர்க்ட் வித் ஹிம்?
Affirmative - நேர்மறை
நான் அவனுடன் வேலை செய்திருப்பேன்.
I will have worked with him.
ஐ வில் ஹேவ் வொர்க்ட் வித் ஹிம்.
Negative - எதிர்மறை
நான் அவனுடன் வேலை செய்திருக்க மாட்டேன்.
I won’t have worked with him.
ஐ வோன்ட் ஹேவ் வொர்க்ட் வித் ஹிம்.
Perfect Continuous - முடிவுற்ற தொடர்வினை
Present Perfect Continuous - முடிவுற்ற நிகழ்காலத் தொடர்வினை
Interrogative - வினா?
நான் காலையிலிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறேனா?
Have I been working since morning?
ஹேவ் ஐ பீன் வொர்க்கிங் சின்ஸ் மார்னிங்?
Affirmative - நேர்மறை
நான் காலையிலிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன்.
I have been working since morning.
ஐ ஹேவ் பீன் வொர்க்கிங் சின்ஸ் மார்னிங்.
Negative - எதிர்மறை
நான் காலையிலிருந்து வேலை செய்து கொண்டிருக்கவில்லை.
I haven’t been working since morning.
ஐ ஹேவ்ன்ட் பீன் வொர்க்கிங் சின்ஸ் மார்னிங்.
Interrogative - வினா?
நீ இரண்டு வருடமாக வேலை செய்து கொண்டிருக்கிறாயா?
Have you been working for two years?
ஹேவ் யூ பீன் வொர்க்கிங் ஃபார் டூ இயர்ஸ்?
Affirmative - நேர்மறை
நான் இரண்டு வருடமாக வேலை செய்து கொண்டிருக்கிறேன்.
I have been working for two years.
ஐ ஹேவ் பீன் வொர்க்கிங் ஃபார் டூ இயர்ஸ்.
Negative - எதிர்மறை
நான் இரண்டு வருடமாக வேலை செய்து கொண்டிருக்கவில்லை.
I have not been working for two years.
ஐ ஹேவ் நாட் பீன் வொர்க்கிங் ஃபார் டூ இயர்ஸ்.
Past Perfect Continuous - முடிவுற்ற இறந்தகாலத் தொடர்வினை
Interrogative - வினா?
கல்லூரி நாட்களில் நீங்கள் பகுதி நேரமாக வேலை செய்திருக்கிறீர்களா?
Had you been working part-time during your college days?
ஹேட் யூ பீன் வொர்க்கிங் பார்ட்-டைம் டூரிங் யுவர் காலேஜ் டேஸ்?
Affirmative - நேர்மறை
நான் கல்லூரி நாட்களில் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தேன்.
I had been working part-time during my college days.
ஐ ஹேட் பீன் வொர்க்கிங் பார்ட்-டைம் டூரிங் மை காலேஜ் டேஸ்.
Negative - எதிர்மறை
கல்லூரி நாட்களில் நான் பகுதி நேரமாக வேலை செய்ததில்லை.
I hadn’t been working part-time during my college days.
ஐ ஹேடின்ட் பீன் வொர்க்கிங் பார்ட்-டைம் டூரிங் மை காலேஜ் டேஸ்.
Future Perfect Continuous - முடிவுற்ற எதிர்காலத் தொடர்வினை
Interrogative - வினா?
அடுத்த ஆண்டு இந்நேரத்திற்குள், அவர் அந்த நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரிந்து கொண்டிருப்பாரா?
By this time next year, will he have been working for the company for five years?
பை திஸ் டைம் நெக்ஸ்ட் இயர், வில் ஹீ ஹேவ் பீன் வொர்க்கிங் ஃபார் த கம்பெனி ஃபார் ஃபைவ் இயர்ஸ்?
Affirmative - நேர்மறை
அடுத்த ஆண்டு இந்நேரத்திற்குள், அவர் அந்த நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றிக்கொண்டிருப்பார்.
By this time next year, he will have been working for the company for five years.
பை திஸ் டைம் நெக்ஸ்ட் இயர், ஹீ வில் ஹேவ் பீன் வொர்க்கிங் ஃபார் த கம்பெனி ஃபார் ஃபைவ் இயர்ஸ்.
Negative - எதிர்மறை
அடுத்த ஆண்டு இந்நேரத்திற்கு, அவர் அந்த நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரிந்திருக்க மாட்டார்.
By this time next year, he won't have been working for the company for five years.
பை திஸ் டைம் நெக்ஸ்ட் இயர், ஹீ வோன்ட் ஹேவ் பீன் வொர்க்கிங் ஃபார் த கம்பெனி ஃபார் ஃபைவ் இயர்ஸ்.
Common Mistakes with the Verb 'WORK' - பொதுவான தவறுகள்
Here are some frequent errors learners make when using the verb work across different tenses:
-
❌ He work in Chennai.
✅ He works in Chennai.
விளக்கம்: Simple Present-ல் He, She, It போன்ற Third-person singular எழுவாய்களுக்கு (Subject) வினைச்சொல்லுடன் 's' அல்லது 'es' சேர்க்க வேண்டும். -
❌ Did he worked yesterday?
✅ Did he work yesterday?
விளக்கம்: 'Did' என்ற இறந்தகால உதவி வினைச்சொல்லைப் பயன்படுத்திய பிறகு, பிரதான வினைச்சொல்லின் Base form (work) மட்டுமே வர வேண்டும் (worked என வரக்கூடாது). -
❌ He don't work in sales.
✅ He doesn't work in sales.
விளக்கம்: He, She, It போன்ற எழுவாய்களுக்கு Simple Present எதிர்மறை வாக்கியங்களில் 'don't' பதிலாக 'doesn't' பயன்படுத்த வேண்டும். -
❌ I am working here since 2020.
✅ I have been working here since 2020.
விளக்கம்: கடந்த காலத்தில் தொடங்கி இன்னமும் தொடரும் ஒரு செயலைக் குறிப்பிட Present Continuous (am working) பயன்படுத்தக் கூடாது; Present Perfect Continuous (have been working) பயன்படுத்த வேண்டும். -
❌ Will he has been working?
✅ Will he have been working?
விளக்கம்: Future Perfect Tense-ல் 'will' வரும்போது, Subject 'He/She' ஆக இருந்தாலும் கூட 'have' மட்டுமே வரும் ('has' வரக்கூடாது).
Homophones & HeterophonesCommon Mistakes in Using DO Across Tenses
Frequently Asked Questions (FAQ)
1. What is the past tense and past participle of 'work'?
The past tense of work is worked, and its past participle is also worked (Present Participle: working).
'Work' என்பதன் இறந்தகாலம் (Past Tense) மற்றும் Past Participle 'worked' ஆகும்.
2. What is the difference between "I work" and "I am working"?
I work (Simple Present) refers to a permanent routine, job, or regular habit. I am working (Present Continuous) refers to an action happening right now or a temporary situation.
'I work' என்பது உங்களது வழக்கமான பணி அல்லது நிலையான வேலையைக் குறிக்கும். 'I am working' என்பது நீங்கள் இப்போது செய்து கொண்டிருக்கும் தற்காலிக வேலையைக் குறிக்கும்.
3. How do you form interrogative (question) sentences using 'work'?
Questions are formed using auxiliary verbs depending on the tense: Do you work? (Simple Present), Did you work? (Simple Past), and Are you working? (Present Continuous).
Do, Does, Did, Are போன்ற உதவி வினைச்சொற்களை (Auxiliary verbs) வாக்கியத்தின் முதலில் அமைத்து வினா வாக்கியங்களை உருவாக்கலாம்.
4. Should I say "I have worked" or "I worked"?
Use I worked (Simple Past) when the time of action is finished and specified (e.g., I worked yesterday). Use I have worked (Present Perfect) when talking about life experience without mentioning a specific finished time (e.g., I have worked in IT).
குறிப்பிட்ட இறந்தகால நேரத்தைக் குறிப்பிடும்போது 'I worked' என்றும், அனுபவத்தைப் பற்றிக் கூறும்போது 'I have worked' என்றும் பயன்படுத்த வேண்டும்.
Summary
You have now seen how English expresses affirmative, negative and interrogative expressions through four major tense categories: simple, continuous, perfect, and perfect continuous using the verb work. Practice making and speaking sentences daily to build confidence in using English affirmative, negative and interrogative sentences in real conversations.
Simple affirmative (positive), negative and interrogative sentences in different tenses using the verb work are given on this page.
இந்தப் பக்கத்தில் வேலை செய் என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு காலங்களில் எளிய நேர்மறை, எதிர்மறை மற்றும் வினா வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Similarly, make simple sentences in different tenses using the verb study.
இதேபோல் படி என்ற வினைச்சொல்லிற்கு வெவ்வேறு காலங்களில் எளிய நேர்மறை, எதிர்மறை மற்றும் வினா வாக்கியங்களை உருவாக்குங்கள்.
Practice tips
Keep practising by saying the example sentences out loud and using them in real life situations. Your command over commonly used verbs like work in different tenses forms a solid base for more advanced English skills.
Do it yourself
Try to make sentences using the verb toil (hard work)
| Verb Form | English | Tamil |
|---|---|---|
| Base Form | toil | கடினமாக உழை |
| Past Tense | toiled | கடினமாக உழைத்தேன் |
| Past Participle | toiled | கடினமாக உழைத்திரு- |
| Present Participle | toiling | கடினமாக உழைத்துக்கொண்டிரு- |
People also learn
👉 Tenses using the verb DO(செய்)
👉 Phrases using the verb 'ASK-கேள்'
