12 Tenses Using the Verb DO with Tamil Meaning & Examples

Interrogative, Affirmative and Negative Sentences Using the Verb DO in all 12 Tenses
நேர்மறை, எதிர்மறை மற்றும் வினா வாக்கியங்கள்

நேர்மறை வாக்கியங்கள் உண்மைகள்/உறுதியானவற்றைக் கூறுகின்றன, எதிர்மறை வாக்கியங்கள் "இல்லை" என்பதைப் பயன்படுத்தி அவற்றை மறுக்கின்றன, மேலும் வினா வாக்கியங்கள், பெரும்பாலும் பொருள்/வினைச்சொல்லை இடம் மாற்றுவதன் மூலமோ அல்லது கேள்வி வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலமோ கேள்விகளைக் கேட்கின்றன.

உதாரணமாக,
  1. I am ready - நான் தயாராக இருக்கிறேன் (நேர்மறை).
  2. I am not ready - நான் தயாராக இல்லை (எதிர்மறை).
  3. Is she ready? - அவள் தயாராக இருக்கிறாளா? (வினா).
  4. Are you ready?- நீ தயாராக இருக்கிறாயா? (வினா).

இந்த பக்கத்தில், நேர்மறை, எதிர்மறை, வினா வாக்கியங்கள் வெவ்வேறு காலங்களில் do - செய் என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

Verb definition and tenses

Verb Form EnglishTamil
Base Form do செய்
Past Tense did செய்தேன்
Past Participle done செய்திரு-
Present Participle doing செய்துகொண்டிரு-
Note:

The forms "done" and "doing" are used with auxiliary verbs to form perfect and continuous tenses.

"done" மற்றும் "doing" ஆகிய வினை வடிவங்கள் துணை வினைச்சொற்களுடன் சேர்ந்து முறையே Perfect மற்றும் Continuous காலங்களை உருவாக்குகின்றன.

Do Usage: The verb do has two important uses in English. It can be used as a main verb meaning செய், and it can also be used as an auxiliary verb to form questions, negative sentences and emphatic sentences.

DO-ன் பயன்பாடு : do என்ற வினைச்சொல் ஆங்கிலத்தில் இரண்டு முக்கியமான வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது செய் என்ற பொருளில் முக்கிய வினைச்சொல்லாகவும், கேள்வி, எதிர்மறை மற்றும் வலியுறுத்தும் வாக்கியங்களை அமைக்க துணை வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது.

Simple - தனிவினை

Present Tense - நிகழ்காலத் தனிவினை

நீ கவனிக்கிறாயா?

Do you listen?

டூ யூ லிசன்?

ஆமாம். நான் கவனிக்கிறேன்.

Yes. I do listen.

யெஸ். ஐ டூ லிசன்.

ஆமாம். நான் கவனிக்கிறேன்.

Yes. I do.

யெஸ். ஐ டூ.

இல்லை. நான் கவனிக்கவில்லை.

No. I don’t listen.

நோ. ஐ டோன்ட் லிசன்.

அவன் கவனிக்கிறானா?

Does he listen?

டஸ் ஹீ லிசன்?

ஆமாம். அவன் கவனிக்கிறான்.

Yes. He does listen.

யெஸ். ஹீ டஸ் லிசன்.

இல்லை. அவன் கவனிக்கவில்லை.

No. He doesn’t listen.

நோ. ஹீ டஸின்ட் லிசன்.

நீ என்ன செய்கிறாய்?

What do you do?

வோட் டூ யூ டூ?

நான் உண்மையாகவே ஒரு வங்கியில் வேலை செய்கிறேன்.

I do work in a bank(emphasis).

ஐ டூ வொர்க் இன் எ பேங்க்.

நான் ஒரு ஆசிரியராக பணிபுரிகிறேன்.

I am working as a teacher.

ஐ எம் வொர்க்கிங் அஸ் எ டீச்சர்.

நான் ஒன்றும் செய்யவில்லை.

I do nothing.

ஐ டூ நத்திங்.

நான் ஒன்றும் செய்யவில்லை.

I don’t do anything.

ஐ டோன்ட் டூ எனித்திங்.

Simple Past - இறந்தகாலத் தனிவினை

நீ ஈபி பில் கட்டிவிட்டாயா?

Did you pay the EB bill?

டிட் யூ பே த ஈபி பில்?

அவர் ஈபி பில்லை கட்டிவிட்டார்.

He did pay the EB bill.

ஹீ டிட் பே த ஈபி பில்.

அவர் ஈபி பில்லை கட்டிவிட்டார்.

He paid the EB bill.

ஹீ பெய்ட் த ஈபி பில்.

நான் ஈபி பில்லை கட்டவில்லை.

I didn’t pay the EB bill.

ஐ டிடின்ட் பே த ஈபி பில்.

Simple Future - எதிர்காலத் தனிவினை

நீ இந்த வேலையை செய்வாயா?

Will you do this work?

வில் யூ டூ திஸ் ஒர்க்?

நான் இந்த வேலையை பிறகு செய்வேன்.

I will do this work later.

ஐ வில் டூ திஸ் ஒர்க் லேட்டர்.

நான் இந்த வேலையை செய்யமாட்டேன்.

I won’t do this work.

ஐ வோன்ட் டூ திஸ் ஒர்க்.

அவர் இந்த வேலையை எப்பொழுது செய்வார்?

When will he do this work?

வென் வில் ஹீ டூ திஸ் ஒர்க்?

அவர் இந்த வேலையை காலை 9 மணிக்குச் செய்வார்.

He will do this work at 9 a.m.

ஹீ வில் டூ திஸ் ஒர்க் அட் 9 ஏ.எம்.

அவர் இந்த வேலையை இன்று செய்யமாட்டார்.

He won’t do this work today.

ஹீ வோன்ட் டூ திஸ் ஒர்க் டுடே.

Continuous - தொடர்வினை

Present Continuous - நிகழ்காலத் தொடர்வினை

நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

What are you doing?

வோட் ஆர் யூ டூயிங்?

நீங்கள் என்னை என்ன செய்யச் சொன்னீர்களோ அதை நான் செய்து கொண்டிருக்கிறேன்.

I am doing what you told me to do.

ஐ எம் டூயிங் வோட் யூ டோல்டு மி டூ டு.

அவர் என்னை என்ன செய்யச் சொன்னாரோ அதை நான் செய்து கொண்டிருக்கவில்லை.

I am not doing what he told me to do.

ஐ எம் நாட் டூயிங் வோட் ஹீ டோல்டு மி டூ டு.

Past Continuous - இறந்தகாலத் தொடர்வினை

அவள் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தாளா?

Was she doing homework?

வாஸ் ஸீ டூயிங் ஹோம் வொர்க்?

அவள் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தாள்.

She was doing homework.

ஸீ வாஸ் டூயிங் ஹோம் வொர்க்.

அவள் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருக்கவில்லை.

She was not doing homework.

ஸீ வாஸ் நாட் டூயிங் ஹோம் வொர்க்.

Future Continuous - எதிர்காலத் தொடர்வினை

அவள் ஏழு மணிக்கு வீட்டு பாடம் செய்து கொண்டிருப்பாளா?

Will she be doing homework at 7 o'clock?

வில் ஸீ பீ டூயிங் ஹோம் ஒர்க் அட் 7-ஓ கிளாக்?

ஏழு மணிக்கு அவள் வீட்டு பாடம் செய்து கொண்டிருப்பாள்.

At 7 o'clock, she will be doing homework.

அட் 7-ஓ கிளாக், ஸீ வில் பீ டூயிங் ஹோம் ஒர்க்.

ஐந்து மணிக்கு அவள் வீட்டு பாடம் செய்து கொண்டிருக்க மாட்டாள்.

She won’t be doing homework at 5 o'clock.

ஸீ வோன்ட் பீ டூயிங் ஹோம் ஒர்க் அட் 5-ஓ கிளாக்.

Perfect- முடிவுற்ற வினை

Present Perfect- நிகழ்கால முடிவுற்ற வினை

அவள் கொடுத்த வேலையை செய்திருக்கிறாளா?

Has she done the assigned work?

ஹேஸ் ஸீ டன் த அசைன்டு வொர்க்.

அவள் கொடுத்த வேலையை செய்திருக்கிறாள்.

She has done the assigned work.

ஸீ ஹேஸ் டன் த அசைன்டு வொர்க்.

அவள் கொடுத்த வேலையை செய்திருக்கவில்லை.

She hasn’t done the assigned work.

ஸீ ஹேஸின்ட் டன் த அசைன்டு வொர்க்.

Past Perfect- இறந்தகால முடிவுற்ற வினை

அவன் வீட்டுப்பாடம் செய்திருந்தானா?

Had he done the homework?

ஹேட் ஹீ டன் த ஹோம்வொர்க்?

நேற்று அவன் எல்லா வீட்டுப்பாடத்தையும் செய்திருந்தான்.

He had done all the homework before he went to bed.

அவன் படுக்கைக்குச் செல்வதற்கு முன் எல்லா வீட்டுப்பாடத்தையும் செய்திருந்தான்.

அவன் வீட்டுப்பாடம் செய்திருந்ததில்லை.

He hadn’t done the homework.

ஹீ ஹேடின்ட் டன் த ஹோம்வொர்க்.

Future Perfect - எதிர்கால முடிவுற்ற வினை

அவள், அவளுடைய வேலையை செய்திருப்பாளா?

Will she have done her work?

வில் ஸீ ஹேவ் டன் ஹெர் ஒர்க்?

இந்நேரம், அவள் அவளுடைய வேலையை செய்திருப்பாள்.

This time, she will have done her work.

திஸ் டைம், ஸீ வில் ஹேவ் டன் ஹெர் ஒர்க்.

அவள், அவளுடைய வேலையை செய்திருக்க மாட்டாள்.

She won’t have done her work.

ஸீ வோன்ட் ஹேவ் டன் ஹெர் ஒர்க்.

Perfect Continuous- முடிவுற்ற தொடர்வினை

Present Perfect Continuous- முடிவுற்ற நிகழ்கால தொடர்வினை

நீ தினமும் யோகா செய்து கொண்டிருக்கிறாயா?

Have you been doing yoga daily?

ஹேவ் யூ பீன் டூயிங் யோகா டெய்லி?

அவர் தினமும் யோகா செய்து கொண்டிருக்கிறார்.

He has been doing yoga daily.

ஹீ ஹேஸ் பீன் டூயிங் யோகா டெய்லி.

நான் தினமும் யோகா செய்து கொண்டிருக்கவில்லை.

I haven’t been doing yoga daily.

ஐ ஹேவின்ட் பீன் டூயிங் யோகா டெய்லி.

Past Perfect Continuous- முடிவுற்ற இறந்தகால தொடர்வினை

அவள் சமையல் தொழில் செய்து கொண்டிருக்கிறாளா?

Had she been doing catering?

ஹேட் ஸீ பீன் டூயிங் கேட்டரிங்?

அவள் சமையல் தொழில் செய்து கொண்டிருந்தாள்.

She had been doing catering.

ஸீ ஹேட் பீன் டூயிங் கேட்டரிங்.

அவள் சமையல் தொழில் செய்து கொண்டிருக்கவில்லை.

She hadn’t been doing catering.

ஸீ ஹேடின்ட் பீன் டூயிங் கேட்டரிங்.

Future Perfect Continuous- முடிவுற்ற எதிர்கால தொடர்வினை

ஐந்து வருடங்களாக அவள் தையல் தொழில் செய்து கொண்டிருப்பாளா?

Will she have been doing tailoring work for five years?

வில் ஸீ ஹேவ் பீன் டூயிங் டெய்லரிங் ஒர்க் ஃபார் பைவ் இயர்ஸ்?

அடுத்த வருடத்திற்குள், அவள் ஐந்து வருடங்களாக தையல் தொழில் செய்து கொண்டிருப்பாள்

By next year, she will have been doing tailoring work for five years.

பை நெக்ஸ்ட் இயர், ஸீ வில் ஹேவ் பீன் டூயிங் டெய்லரிங் ஒர்க் ஃபார் பைவ் இயர்ஸ்.

ஐந்து வருடங்களாக அவள் தையல் தொழில் செய்து கொண்டிருக்கமாட்டாள்.

She won't have been doing tailoring work for five years.

ஸீ வோன்ட் ஹேவ் பீன் டூயிங் டெய்லரிங் ஒர்க் ஃபார் பைவ் இயர்ஸ்.

Common Mistakes in Using DO Across Tenses

12 காலங்களிலும் (Tenses) DO என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்தும்போது செய்யப்படும் பொதுவான தவறுகள் மற்றும் சரியான வடிவங்கள்:

Simple Tenses

  • ❌ He don't do the work.
    ✅ He doesn't do the work.
    Simple Present: He/She/It வந்தாள் doesn't பயன்படுத்த வேண்டும்.
  • ❌ Did you did the work yesterday?
    ✅ Did you do the work yesterday?
    Simple Past: Did வந்த பிறகு முதன்மை வினை Base form (do) ஆக இருக்க வேண்டும்.
  • ❌ I will doing this work tomorrow.
    ✅ I will do this work tomorrow.
    Simple Future: Modal verb (will) பக்கத்தில் Base form (do) மட்டுமே வர வேண்டும்.

Continuous Tenses

  • ❌ He is do his homework now.
    ✅ He is doing his homework now.
    Present Continuous: is/am/are உடன் '-ing' (doing) சேர வேண்டும்.
  • ❌ They was doing the work at 5 PM.
    ✅ They were doing the work at 5 PM.
    Past Continuous: Plural subject (They) வந்ததால் were பயன்படுத்த வேண்டும்.
  • ❌ She will doing homework tomorrow at 7 PM.
    ✅ She will be doing homework tomorrow at 7 PM.
    Future Continuous: Future Continuous அமைப்பில் will be + '-ing' வர வேண்டும்.

Perfect Tenses

  • ❌ She has did the job already.
    ✅ She has done the job already.
    Present Perfect: has/have பக்கத்தில் Past Participle (done) வர வேண்டும்.
  • ❌ He had did the homework before sleeping.
    ✅ He had done the homework before sleeping.
    Past Perfect: had பக்கத்தில் Past Participle (done) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • ❌ She will have did her work by 5 PM.
    ✅ She will have done her work by 5 PM.
    Future Perfect: will have பக்கத்தில் Past Participle (done) வர வேண்டும்.

Perfect Continuous Tenses

  • ❌ I have doing yoga for 2 years.
    ✅ I have been doing yoga for 2 years.
    Present Perfect Continuous: have/has + been + '-ing' வடிவம் வர வேண்டும்.
  • ❌ She had doing catering before 2020.
    ✅ She had been doing catering before 2020.
    Past Perfect Continuous: had + been + '-ing' வடிவம் பயன்படுத்த வேண்டும்.
  • ❌ She will have doing tailoring for 5 years.
    ✅ She will have been doing tailoring for 5 years.
    Future Perfect Continuous: will have + been + '-ing' அமைப்பில் இருக்க வேண்டும்.

Frequently Asked Questions (FAQ) in Using DO

Q: What is the main difference between "DO" as a main verb and an auxiliary verb?

A: As a main verb, DO means "to perform an action" (செயல் செய்), e.g., "I do my homework." As an auxiliary verb, DO / DOES / DID helps build negative sentences or ask questions, e.g., "Do you like tea?" or "I don't know."

Q: Why do we say "done" in perfect tenses instead of "did"?

A: Perfect tenses (Present Perfect, Past Perfect, Future Perfect) always require the V3 form (Past Participle) of a verb. For the verb DO, the V1 is do, V2 is did, and V3 is done.

Q: What is the rule for using DO vs. DOES in Simple Present Tense?

A: Use DO with subjects I, We, You, They and plural nouns. Use DOES with third-person singular subjects: He, She, It and singular nouns.

Q: Can "DO" be used for emphasis in English sentences?

A: Yes! Adding do/does/did before a base verb emphasizes the action. For example, "I work in a bank" is a standard statement, while "I do work in a bank" translates to "நான் உண்மையிலேயே/நிச்சயமாக வங்கியில் வேலை செய்கிறேன்."

Q: How do I know when to use DO vs. MAKE in daily expressions?

A: Use DO for duties, jobs, and general tasks (e.g., do homework, do exercise, do laundry). Use MAKE when producing, creating, or constructing something (e.g., make coffee, make a mistake, make noise).

Summary

You have now seen how English expresses affirmative, negative and interrogative expressions through four major tense categories: simple, continuous, perfect, and perfect continuous using the verb do. Practice making and speaking sentences daily to build confidence in using English affirmative, negative and interrogative sentences in real conversations.

Simple affirmative (positive), negative and interrogative sentences in different tenses using the verb do are given on this page.

இந்தப் பக்கத்தில் செய் என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு காலங்களில் எளிய நேர்மறை, எதிர்மறை மற்றும் வினா வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Similarly, make simple sentences in different tenses using the verb perform - செயல்படுத்து

இதேபோல் செயல்படுத்து என்ற வினைச்சொல்லிற்கு வெவ்வேறு காலங்களில் எளிய நேர்மறை, எதிர்மறை மற்றும் வினா வாக்கியங்களை உருவாக்குங்கள்.

Practice tips

Keep practising by saying the example sentences out loud and using them in real life situations. Your command over commonly used verbs like do in different tenses forms a solid base for more advanced English skills.

Do it yourself

Try to make sentences using the verb finish

Verb Form EnglishTamil
Base Form finish செய்து முடி
Past Tense finished செய்து முடித்தேன்
Past Participle finished செய்து முடித்திரு-
Present Participle finishing செய்து முடித்துக்கொண்டிரு-

People also learn

👉 Simple Past Rules and Examples

👉 Phrases Using the Verb 'SAY-சொல்'

👉 Conversation at the Pharmacy

👉 Sample Tourist Visa Interview

👉 Milkmaid Story in English and Tamil