12 Tenses Using the Verb GO with Tamil Meaning & Examples

Affirmative, Negative and Interrogative Sentences Using the Verb GO in all 12 tenses
நேர்மறை, எதிர்மறை மற்றும் வினா வாக்கியங்கள்

Positive sentences state facts/affirmations, negative sentences deny or negate them (using "not"), and interrogative sentences ask questions, often by inverting the subject/verb or using question words, ending in a question mark.

For example: உதாரணமாக,

இந்த பக்கத்தில், நேர்மறை, எதிர்மறை, வினா வாக்கியங்கள் வெவ்வேறு காலங்களில் go - போ என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

Verb definition and tenses

Verb Form English Tamil
Base Form go போ
Past Tense went போனேன் / போனாள்
Past Participle gone போயிரு-
Present Participle going போய்க்கொண்டிரு-

Note: The forms "gone" and "going" are used with auxiliary verbs to form perfect and continuous tenses.

"gone" மற்றும் "going" ஆகிய வினை வடிவங்கள் துணை வினைச்சொற்களுடன் சேர்ந்து முறையே Perfect மற்றும் Continuous காலங்களை உருவாக்குகின்றன.

Simple - தனிவினை

Simple Present - நிகழ்காலத் தனிவினை

Interrogative - வினா?

அவள் சந்தைக்குப் போகிறாளா?

Does she go to the market?

டஸ் ஸீ கோ டூ மார்க்கெட்?

Affirmative - நேர்மறை

அவள் சந்தைக்குப் போகிறாள்.

She goes to the market.

ஸீ கோஸ் டூ மார்க்கெட்.

Negative - எதிர்மறை

அவள் சந்தைக்குப் போகவில்லை.

She doesn’t go to the market.

ஸீ டஸ்ன்ட் கோ டூ மார்க்கெட்.

Simple Past - இறந்தகாலத் தனிவினை

Interrogative - வினா?

அவள் சென்னைக்குப் போனாளா?

Did she go to Chennai?

டிட் ஸீ கோ டூ சென்னை?

Affirmative - நேர்மறை

அவள் ஒரு நேர்காணலுக்காக சென்னைக்குப் போனாள்.

She went to Chennai for an interview.

ஸீ வென்ட் டூ சென்னை பார் அன் இன்டர்வியூ.

Negative - எதிர்மறை

அவள் ராமைப் பார்க்க சென்னைக்குப் போகவில்லை.

She didn’t go to Chennai to see Ram.

ஸீ டிடின்ட் கோ டூ சென்னை டூ சி ராம்.

Simple Future - எதிர்காலத் தனிவினை

Interrogative - வினா?

அவள் விமான நிலையத்துக்குப் போவாளா?

Will she go to the airport?

வில் ஸீ கோ டூ ஏர்போர்ட்?

Affirmative - நேர்மறை

அவள் சங்கருடன் விமான நிலையத்துக்குப் போவாள்.

She will go to the airport with Shankar.

ஸீ வில் கோ டூ ஏர்போர்ட் வித் சங்கர்.

Negative - எதிர்மறை

அவள் விமான நிலையத்துக்குத் தனியாகப் போகமாட்டாள்.

She won’t go to the airport alone.

ஸீ வோன்ட் கோ டூ ஏர்போர்ட் அலோன்.

Continuous - தொடர்வினை

Present Continuous - நிகழ்காலத் தொடர்வினை

Interrogative - வினா?

அவள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாளா?

Is she going to college?

இஸ் ஸீ கோயிங் டூ காலேஜ்?

Affirmative - நேர்மறை

அவள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள்.

She is going to college.

ஸீ இஸ் கோயிங் டூ காலேஜ்.

Negative - எதிர்மறை

அவள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கவில்லை.

She is not going to college.

ஸீ இஸ் நாட் கோயிங் டூ காலேஜ்.

Past Continuous - இறந்தகாலத் தொடர்வினை

Interrogative - வினா?

அவள் காய்கறி வாங்கப் போய்க்கொண்டிருந்தாளா?

Was she going to buy vegetables?

வாஸ் ஸீ கோயிங் டூ பை வெஜிட்டபிள்ஸ்?

Affirmative - நேர்மறை

அவள் மருந்து வாங்கப் போய்க்கொண்டிருந்தாள்.

She was going to buy medicines.

ஸீ வாஸ் கோயிங் டூ பை மெடிசின்ஸ்.

Negative - எதிர்மறை

அவள் காய்கறி வாங்கப் போய்க்கொண்டிருக்கவில்லை.

She was not going to buy vegetables.

ஸீ வாஸ் நாட் கோயிங் டூ பை வெஜிட்டபிள்ஸ்.

Future Continuous - எதிர்காலத் தொடர்வினை

Interrogative - வினா?

அவள் லண்டனுக்குப் போய்க்கொண்டிருப்பாளா?

Will she be going to London?

வில் ஸீ பீ கோயிங் டூ லண்டன்?

Affirmative - நேர்மறை

அடுத்த வாரம் இந்நேரம், அவள் லண்டனுக்குப் போய்க்கொண்டிருப்பாள்.

This time next week, she will be going to London.

திஸ் டைம் நெக்ஸ்ட் வீக், ஸீ வில் பீ கோயிங் டூ லண்டன்.

Negative - எதிர்மறை

இல்லை, அவள் லண்டனுக்குப் போய்க்கொண்டிருக்கமாட்டாள்.

No, she won’t be going to London.

நோ, ஸீ வோன்ட் பீ கோயிங் டூ லண்டன்.

Perfect - முடிவுற்ற வினை

Present Perfect - முடிவுற்ற நிகழ்கால வினை

Interrogative - வினா?

அவள் ஊட்டிக்கு ஒரு முறையாவது போயிருக்கிறாளா?

Has she gone to Ooty at least once?

ஹேஸ் ஸீ கான் டூ ஊட்டி அட்லீஸ்ட் ஒன்ஸ்?

Affirmative - நேர்மறை

அவள் ஊட்டிக்கு ஒரு முறை போயிருக்கிறாள்.

She has been to Ooty once.

ஸீ ஹேஸ் பீன் டூ ஊட்டி ஒன்ஸ்.

Negative - எதிர்மறை

அவள் ஊட்டிக்கு ஒரு முறை கூட போயிருக்கவில்லை.

She hasn’t gone to Ooty even once.

ஸீ ஹேஸ்ன்ட் கான் டூ ஊட்டி ஈவன் ஒன்ஸ்.

Past Perfect - முடிவுற்ற இறந்தகால வினை

Interrogative - வினா?

அவள் விமானத்தில் ஒரு முறையாவது போயிருந்தாளா?

Had she gone by plane at least once?

ஹேட் ஸீ கான் பை பிளேன் அட்லீஸ்ட் ஒன்ஸ்?

Affirmative - நேர்மறை

அவள் மும்பைக்கு விமானத்தில் போயிருந்தாள்.

She had gone to Mumbai by plane.

ஸீ ஹேட் கான் டூ மும்பை பை பிளேன்.

Negative - எதிர்மறை

அவள் விமானத்தில் போயிருந்ததில்லை.

She hadn’t gone by plane.

ஸீ ஹேடின்ட் கான் பை பிளேன்.

Future Perfect - முடிவுற்ற எதிர்கால வினை

Interrogative - வினா?

அவள் அலுவலகத்திற்குப் போயிருப்பாளா?

Will she have gone to the office?

வில் ஸீ ஹேவ் கான் டூ த ஆபிஸ்?

Affirmative - நேர்மறை

அவள் ஒன்பது மணிக்குள் அலுவலகத்திற்குப் போயிருப்பாள்.

She will have gone to the office by 9 o'clock.

ஸீ வில் ஹேவ் கான் டூ த ஆபிஸ் பை 9 ஓ'கிளோக்.

Negative - எதிர்மறை

அவள் அவ்வளவு சீக்கிரம் அலுவலகத்திற்குப் போயிருக்கமாட்டாள்.

She won’t have gone to the office that early.

ஸீ வோன்ட் ஹேவ் கான் டூ த ஆபிஸ் தட் ஏர்லி.

Perfect Continuous - முடிவுற்றத் தொடர்வினை

Present Perfect Continuous - முடிவுற்ற நிகழ்காலத் தொடர்வினை

Interrogative - வினா?

அவள் தொடர்ந்து வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறாளா?

Has she been going to work?

ஹேஸ் ஸீ பீன் கோயிங் டூ வொர்க்?

Affirmative - நேர்மறை

அவள் தொடர்ந்து வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள்.

She has been going to work.

ஸீ ஹேஸ் பீன் கோயிங் டூ வொர்க்.

Negative - எதிர்மறை

அவள் தொடர்ந்து வேலைக்குப் போய்க்கொண்டிருக்கவில்லை.

She has not been going to work.

ஸீ ஹேஸ் நாட் பீன் கோயிங் டூ வொர்க்.

Past Perfect Continuous - முடிவுற்ற இறந்தகாலத் தொடர்வினை

Interrogative - வினா?

அவள் யோகா வகுப்புக்குத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தாளா?

Had she been going to yoga class?

ஹேட் ஸீ பீன் கோயிங் டூ யோகா கிளாஸ்?

Affirmative - நேர்மறை

அவள் யோகா வகுப்புக்குத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தாள்.

She had been going to yoga class.

ஸீ ஹேட் பீன் கோயிங் டூ யோகா கிளாஸ்.

Negative - எதிர்மறை

அவள் யோகா வகுப்புக்குத் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கவில்லை.

She had not been going to yoga class.

ஸீ ஹேட் நாட் பீன் கோயிங் டூ யோகா கிளாஸ்.

Future Perfect Continuous - முடிவுற்ற எதிர்காலத் தொடர்வினை

Interrogative - வினா?

அடுத்த மாதத்திற்குள், அவள் ஆறு மாதங்களாக கபடி பயிற்சி மையத்திற்குத் தொடர்ந்து சென்று கொண்டிருப்பாளா?

By next month, will she have been going to the kabaddi training centre for six months?

பை நெக்ஸ்ட் மந்த், வில் ஸீ ஹேவ் பீன் கோயிங் டூ த கபடி ட்ரெய்னிங் சென்டர் ஃபார் சிக்ஸ் மன்த்ஸ்?

Affirmative - நேர்மறை

அடுத்த மாதத்திற்குள், அவள் ஆறு மாதங்களாக கபடி பயிற்சி மையத்திற்குத் தொடர்ந்து சென்று கொண்டிருப்பாள்.

By next month, she will have been going to the kabaddi training centre for six months.

பை நெக்ஸ்ட் மந்த், ஸீ வில் ஹேவ் பீன் கோயிங் டூ த கபடி ட்ரெய்னிங் சென்டர் ஃபார் சிக்ஸ் மன்த்ஸ்.

Negative - எதிர்மறை

அடுத்த மாதத்திற்குள், அவள் ஆறு மாதங்களாக கபடி பயிற்சி மையத்திற்குத் தொடர்ந்து சென்று கொண்டிருக்கமாட்டாள்.

By next month, she won't have been going to the kabaddi training centre for six months.

பை நெக்ஸ்ட் மந்த், ஸீ வோன்ட் ஹேவ் பீன் கோயிங் டூ த கபடி ட்ரெய்னிங் சென்டர் ஃபார் சிக்ஸ் மன்த்ஸ்.

Common Mistakes with the Verb GO - பொதுவான தவறுகள்

  • ❌ She go to school every day.
    ✅ She goes to school every day.
    மூன்றாம் நபர் ஒருமைக்கு (He, She, It) Simple Present-இல் 'es' சேர்க்க வேண்டும்.
  • ❌ She didn't went to Chennai.
    ✅ She didn't go to Chennai.
    'didn't' பயன்படுத்திய பிறகு வினைச்சொல்லின் முதல் வடிவமே (Base verb - go) வர வேண்டும்.
  • ❌ She is go to market.
    ✅ She is going to the market.
    Continuous Tense-ல் auxiliary verb (is/am/are) உடன் verb+ing சேர வேண்டும்.
  • ❌ She has went to London.
    ✅ She has gone to London. / She has been to London.
    Present Perfect Tense-ல் 'has/have' உடன் Past Participle (gone/been) மட்டுமே வர வேண்டும்.
  • ❌ Did she went to Chennai yesterday?
    ✅ Did she go to Chennai yesterday?
  • ❌ He doesn't goes to office.
    ✅ He doesn't go to office.
  • ❌ Will she goes tomorrow?
    ✅ Will she go tomorrow?

Frequently Asked Questions (FAQ) - அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

Q: What is the difference between "has gone to" and "has been to"?

A: "Has gone to" means the person went somewhere and is still there. "Has been to" means the person visited a place and has already returned.

அவர் சென்று இன்னும் திரும்பவில்லை என்றால் "has gone to" என்றும், சென்று விட்டு திரும்பி விட்டார் என்றால் "has been to" என்றும் பயன்படுத்த வேண்டும்.

Q: Why do we say "go to school" but "go home"?

A: The word "home" acts as an adverb of direction in this context, so it does not require the preposition "to". Places like school, office, or market require "to".

'Home' என்ற சொல்லுக்கு முன் 'to' சேர்க்க தேவையில்லை, ஆனால் school, office போன்ற இடங்களுக்கு முன் 'to' பயன்படுத்த வேண்டும்.

Q: When should we use "does" instead of "do"?

A: "Does" is used with third-person singular subjects (He, She, It, and singular nouns) in Simple Present interrogative and negative sentences.

Q: Why do we use the base verb after "did"?

A: In Simple Past negative and interrogative sentences, the auxiliary verb "did" already carries the past tense, so the main verb must remain in its base form.

Summary

You have now seen how English expresses affirmative, negative, and interrogative expressions through four major tense categories: simple, continuous, perfect, and perfect continuous using the verb Go. Practice making and speaking sentences daily to build confidence in real conversations.

இந்தப் பக்கத்தில் போ என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு காலங்களில் எளிய நேர்மறை, எதிர்மறை மற்றும் வினா வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Similarly, make simple sentences in different tenses using the verb Come.

இதேபோல் வா என்ற வினைச்சொல்லிற்கு வெவ்வேறு காலங்களில் எளிய நேர்மறை, எதிர்மறை மற்றும் வினா வாக்கியங்களை உருவாக்குங்கள்.

Practice Tips

Keep practising by saying the example sentences out loud and using them in real-life situations. Your command over commonly used verbs like go in different tense forms creates a solid foundation for fluent communication.

Do It Yourself

Try to make sentences using the verb depart

"Go" and "Depart" both mean to leave a place, but "depart" is more formal and often used for scheduled travel like trains or planes. "Go" is a simple, everyday word for moving or leaving.

Go: To move, walk, or travel to another place. It is very common and casual.

Depart: To leave a place, start a journey, or follow a schedule (like "the bus departs at 5 PM").

Verb Form English Tamil
Present depart கிளம்பு
Past Tense departed கிளம்பியது
Past Participle departed கிளம்பியிரு-
Present Participle departing கிளம்பிக்கொண்டிரு-

People Also Learn

👉 Tips for Tenses with examples - GO

👉 Practice common phrases using the verb 'eat - சாப்பிடு'

👉 Conversations on a phone call

👉 Ten most common job interview Q&A

👉 Read the story: On the rule of the road