Story in English and Tamil
Rapido the hare and Sluggy the tortoise lived happily near a pond in a jungle.
ஒரு காட்டில் ஒரு குளத்தின் அருகே ரேபிடோ என்ற முயலும், ஸ்லஹி என்ற ஆமையும் மகிழ்ச்சியாக வசித்து வந்தன.
One day Rapido went to visit his uncle living on the other side of the pond. On the way, it saw Sluggy walking sluggishly.
ஒரு நாள் ரேபிடோ குளத்தின் மறுகரையில் வசிக்கும் தனது மாமாவைப் பார்க்கச் சென்றது. வழியில், ஸ்லஹி சோம்பலாக நடப்பதை அது கண்டது.
"Hi, Sluggy, Where are you going?"
"ஹாய், ஸ்லஹி. நீ எங்கே போகிறாய்?"
"Hi, Rapido. Good morning. How are you? I am going to meet my friend living on the other side of the pond."
"ஹாய், ரேபிடோ. காலை வணக்கம். எப்படி இருக்கிறாய்? குளத்தின் மறுகரையில் வசிக்கும் என் நண்பனை நான் சந்திக்கப் போகிறேன்."
"I am fine. I too go to that side to visit my uncle. Have you been anywhere before? Can you get there?" he asked with a mocking laugh.
"நான் நன்றாக இருக்கிறேன். நானும் அந்த பக்கம் தான் என் மாமாவைப் பார்க்கப் போகிறேன். இதற்கு முன் எங்காவது சென்றிருக்கிறாயா? உன்னால் அங்கு செல்ல முடியுமா?" என்று அது ஏளனச் சிரிப்புடன் கேட்டது.
"Yes, I used to visit my friend every Sunday, and I can get there sooner than you think. Are you ready to run a race with me? I will prove it," replied Sluggy.
"ஆம், நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என் நண்பனைப் பார்க்கச் செல்வதுண்டு. மேலும், நீங்கள் நினைப்பதை விட விரைவாக என்னால் அங்கு செல்ல முடியும். என்னுடன் பந்தயத்தில் ஓடத் தயாரா? அதை நான் நிரூபித்துக் காட்டுவேன்," என்று ஆமை பதிலளித்தது.
Rapido was amused. He found the idea of racing with the Tortoise funny. But he agreed to the race for fun. So the Fox, who had consented to act as judge, started the race.
ரேபிடோவுக்கு அது வேடிக்கையாகத் தோன்றியது. ஆமையுடன் பந்தயத்தில் ஈடுபடுவது அதற்கு ஒரு நகைச்சுவையான விஷயமாக இருந்தது. ஆனாலும், பொழுதுபோக்கிற்காக அது அந்தப் பந்தயத்திற்கு ஒப்புக்கொண்டது. எனவே, நடுவராகச் செயல்பட ஒப்புக்கொண்ட நரி பந்தயத்தைத் தொடங்கி வைத்தது.
Rapido wanted to show Sluggy the tortoise how fast he was. So he quickly ran far ahead. Half the way, he thought that "I could run fast and reach the goal in minutes. But Sluggy would take hours to complete the race" and decided to take some rest and lay down under the banyan tree. Soon it fell asleep.
ரேபிடோ, ஸ்லஹி என்ற ஆமையிடம் தான் எவ்வளவு வேகமாக ஓடமுடியும் என்பதைக் காட்ட விரும்பியது. அதனால் அது வேகமாக ஓடி வெகுதூரம் முன்னே சென்றது. பாதி வழியில், "என்னால் வேகமாக ஓடி சில நிமிடங்களிலேயே இலக்கை அடைய முடியும்; ஆனால் ஸ்லஹி இந்தப் பந்தயத்தை முடிக்க பல மணிநேரம் எடுத்துக்கொள்ளும்" என்று நினைத்து, சற்று ஓய்வெடுக்கலாம் என்று கருதி ஆலமரத்தின் அடியில் படுத்தது. விரைவில் அது தூங்கிவிட்டது.
Sluggy meanwhile kept going slowly but steadily. After some time, it passed the place where Rapido was sleeping. But Rapido slept on very peacefully. At last he did wake up and saw that Sluggy was near the goal. Rapido now ran fast, but he could not overtake Sluggy in time.
இதற்கிடையில், ஸ்லஹி மெதுவாகவும் ஆனால் சீராகவும் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ரேபிடோ தூங்கிக்கொண்டிருந்த இடத்தைக் கடந்து அது சென்றது. ஆனால் ரேபிடோவோ மிகவும் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. கடைசியில் அது விழித்தெழுந்தபோது, ஸ்லஹி இலக்கை நெருங்கியிருப்பதைப் பார்த்தது. உடனே ரேபிடோ வேகமாக ஓடியது; ஆனால், சரியான நேரத்திற்குள் அதனால் ஸ்லஹியை முந்த முடியவில்லை.
The judge declared that, "Sluggy won the race".
நடுவர், "ஸ்லஹி ஆமை பந்தயத்தில் வென்றது" என்று அறிவித்தார்.
The hare felt ashamed of mocking the tortoise. It said, "Congratulations, Sluggy! I am sorry."
ஆமையை ஏளனம் செய்ததற்காக முயல் வெட்கமடைந்தது. அது, "வாழ்த்துகள், ஸ்லஹி! என்னை மன்னித்துவிடு," என்று கூறியது.
"OK. Anyone can win if they work with perseverance," said Sluggy the Tortoise.
"பரவாயில்லை. விடாமுயற்சியுடன் உழைத்தால் யார் வேண்டுமானாலும் வெல்லலாம்," என ஸ்லஹி ஆமை கூறியது.
"Yes. I agree. You have proved it," said Rapido the Hare.
"ஆமாம். நான் ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் அதை நிரூபித்துவிட்டீர்கள்," என ரேபிடோ முயல் கூறியது.
"Ok. My friend will be waiting for me. I am leaving. Bye," Sluggy The Tortoise said and left.
"சரி. என் நண்பர் எனக்காகக் காத்திருப்பார். நான் கிளம்புறேன். பை," என ஸ்லஹி ஆமை கூறிவிட்டுக் கிளம்பியது.
The Hare too said, "Good Bye" and left.
ரேபிடோ முயலும் 'குட் பை' சொல்லிவிட்டு கிளம்பியது.
Moral - நீதி
Overconfidence leads to downfall. Determination and perseverance help achieve the goal.
அதிகப்படியான தன்னம்பிக்கை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்; உறுதியும் விடாமுயற்சியும் இலக்கை அடைய உதவும்.