A Wise Old Owl in English and Tamil - ஒரு வயதான புத்திசாலி ஆந்தை

This page tells the story "A Wise Old Owl," in English and Tamil. Learn to speak in English through the simple Tamil and English sentences in this story and learn the importance of observing more and talking less.

இந்தப் பக்கம் "ஒரு வயதான புத்திசாலி ஆந்தை" என்ற கதையை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வழங்குகிறது. இந்தக் கதையில் உள்ள எளிய தமிழ் மற்றும் ஆங்கில வாக்கியங்கள் மூலம் சுலபமாக ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்; அத்துடன் கூர்ந்து கவனிப்பது மற்றும் குறைவாகப் பேசுவதன் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ளுங்கள்.

Listening Practice

இந்த ஆடியோவில் உள்ள கதையைக் கேட்டு, ஆங்கிலத்தில் பேசும் திறனை வளா்ப்பதோடு தங்களின் கவனித்துக் கேட்கும் திறனையும், ஆங்கில உச்சரிப்பையும் மேம்படுத்துங்கள்.

🎧 A Wise Old Owl
ஒரு வயதான புத்திசாலி ஆந்தை

Story in English and Tamil

An old owl would observe incidents happening around its oak tree every day. The more things it saw, the less it would speak. It heard people talking and sharing stories as well. The old owl had seen so much and heard all kinds of stories. All of these experiences helped the owl to become wiser day by day.

One day, a young rabbit came to the owl in a hurry and said "Please help me, A fox is chasing me every day."

The owl said, "Run towards the narrow path near the rocks when the fox chases you."

The next morning, the fox began chasing the rabbit again. The rabbit ran towards the narrow path and escaped. The fox was unable to pass through that narrow path and went away disappointed.

The rabbit thanked the wise old owl and from that day onwards, all the animals trusted the wise old owl even more.

ஒரு வயதான ஆந்தை ஒவ்வொரு நாளும் அதனுடைய ஓக் மரத்தைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளை கவனிக்கும். அது நிறைய விசயங்களைப் பார்த்து, குறைவாகப் பேசும். அது மக்கள் பேசிக்கொண்டிருந்ததுடன், கதைகள் பகிர்ந்து கொண்டிருந்ததையும், கேட்டது. வயதான ஆந்தை நிறைய பார்த்திருந்ததுடன் அனைத்து வகையான கதைகளையும் கேட்டிருந்தது. ஆந்தைக்கு இந்த அனுபவங்கள் அனைத்தும் நாளுக்கு நாள் புத்திசாலியாக உதவியது.

ஒரு நாள், ஒரு இளம் முயல் அவசரமாக ஆந்தையை அணுகி, "தயவுசெய்து எனக்கு உதவுங்கள்; ஒரு நரி தினமும் என்னைத் துரத்துகிறது," என்று கூறியது.

அதற்கு ஆந்தை, "நரி உன்னைத் துரத்தும்போது, பாறைகளுக்கு அருகில் உள்ள குறுகிய பாதையை நோக்கி ஓடு," என்று கூறியது.

மறுநாள் காலை, நரி மீண்டும் முயலைத் துரத்தத் தொடங்கியது. முயல் அந்தக் குறுகிய பாதையை நோக்கி ஓடித் தப்பியது. நரியால் அந்தப் பாதை வழியாகச் செல்ல முடியவில்லை; அதனால் அது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது.

முயல் அந்த அறிவார்ந்த முதிய ஆந்தைக்கு நன்றி தெரிவித்தது; அன்று முதல், அனைத்து விலங்குகளும் அந்த அறிவார்ந்த முதிய ஆந்தையை இன்னும் அதிகமாக நம்பின.

Moral - நீதி

Wisdom is more powerful than strength.

புத்திசாலித்தனம் வலிமையைவிட சக்தி வாய்ந்தது. .

Daily Phrases in English and Tamil

  1. ஒரு வயதான ஆந்தை கவனிக்கும். - An old owl would observe.
  2. ஒவ்வொரு நாளும் அதனுடைய ஓக் மரத்தைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகள் - incidents happening around its oak tree every day.
  3. அது நிறைய விசயங்களைப் பார்த்தது - The more things it saw.
  4. அது குறைவாகப் பேசும் - the less it would speak.
  5. அது மக்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டது - It heard people talking.
  6. அத்துடன் கதைகள் பகிர்ந்து கொண்டிருந்ததையும் - sharing stories as well.
  7. வயதான ஆந்தை நிறைய பார்த்திருந்தது - The old owl had seen so much.
  8. அனைத்து வகையான கதைகளையும் கேட்டது - heard all kinds of stories.
  9. இந்த அனுபவங்கள் அனைத்தும் ஆந்தைக்கு உதவியது - All of these experiences helped the owl.
  10. நாளுக்கு நாள் புத்திசாலியாக. - to become wiser day by day.
  11. ஆந்தை மிகவும் புத்திசாலி. - The owl is very wise.
  12. எல்லா விலங்குகளும் ஆந்தையை மதித்தன. - All the animals respected the owl.
  13. ஒவ்வொரு மாலையும் - Every evening
  14. விலங்குகள் ஆலோசனைக்காக ஆந்தையைச் சந்தித்தன. - the animals visited the owl for advice.
  15. ஒரு நாள், ஒரு இளம் முயல் அவசரமாக ஆந்தையிடம் வந்தது. - One day, a young rabbit came to the owl in a hurry.
  16. முயல் சொன்னது. - The rabbit said.
  17. ஆந்தை கேட்டது. - The owl asked.
  18. முயல் பதிலளித்தது. - The rabbit replied.
  19. புத்திசாலி ஆந்தையே, தயவுசெய்து எனக்கு உதவுங்கள். - Please help me, wise owl.
  20. உன்னை எது தொந்தரவு செய்கிறது? - What is troubling you?
  21. ஒரு நரி தினமும் என்னைத் துரத்துகிறது. - A fox is chasing me every day.
  22. நரி என்னைப் பிடித்துவிடுமோ என்று நான் பயப்படுகிறேன். - I am afraid that the fox will catch me.
  23. ஆந்தை கவனமாகச் சிந்தித்தது. - The owl thought carefully.
  24. பதில் கூறுவதற்கு முன் - before giving an answer
  25. உன் வேகத்தை மட்டும் அல்லாமல், உன் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்த வேண்டும். - You must use your intelligence, not only your speed.
  26. நான் என்ன செய்ய வேண்டும்? - What should I do?
  27. பாறைகளுக்கு அருகிலுள்ள குறுகிய பாதையை நோக்கி ஓடு. - Run towards the narrow path near the rocks.
  28. குறுகிய பாதையை நோக்கி ஓடியது. - ran towards the narrow path.
  29. நரி மிகவும் பெரியது. - The fox is too big.
  30. நரியால் அந்தப் பாதையில் செல்ல முடியாது. - The fox can't pass through that path.
  31. நரி மீண்டும் முயலைத் துரத்தத் தொடங்கியது. - the fox began chasing the rabbit again.
  32. முயல் ஆந்தையின் ஆலோசனையை நினைவு கூர்ந்தது. - The rabbit remembered the owl’s advice.
  33. முயல் விரைவாகப் பாறைகளுக்கு இடையில் சென்றது. - The rabbit quickly passed through the rocks.
  34. ஆனால் நரியால் அந்தக் குறுகிய பாதைக்குள் செல்ல முடியவில்லை. - But the fox could not enter the narrow path.
  35. முயல் பாதுகாப்பாக நரியிடமிருந்து தப்பித்தது. - The rabbit safely escaped from the fox.
  36. முயல் ஆந்தையிடம் திரும்பி வந்து அதற்கு நன்றி கூறியது. - The rabbit returned to the owl and thanked it.
  37. ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது எப்போதும் அமைதியாக இரு. - Always stay calm when you face a problem.
  38. அமைதியான மனம் நல்ல தீர்வைக் கண்டுபிடிக்க முடியும். - A calm mind can find a good solution.
  39. முயல் அந்தப் பாடத்தைப் புரிந்துகொண்டு அதிக நம்பிக்கையுடன் இருந்தது. - The rabbit understood the lesson and became more confident.
  40. அந்த நாளிலிருந்து - From that day onwards
  41. இன்னும் அதிகமாக. - even more.
  42. எல்லா விலங்குகளும் புத்திசாலி வயதான ஆந்தையை இன்னும் அதிகமாக நம்பின. - all the animals trusted the wise old owl even more.

Common Grammar Mistakes & Expressions

Learn to avoid these common mistakes when using expressions related to this story in English.

  1. Incorrect: The owl gave me an advice. ❌

    Correct: The owl gave me a piece of advice. / The owl advised me. ✅

    விளக்கம்: 'Advice' என்பது எண்ண முடியாத பெயர்ச்சொல் (uncountable noun). எனவே 'an advice' என்று சொல்லக்கூடாது.

  2. Incorrect: The owl listened the stories. ❌

    Correct: The owl listened to the stories. ✅

    விளக்கம்: 'Listen' என்ற வினைச்சொல்லுக்குப் பிறகு 'to' என்ற preposition கட்டாயம் வர வேண்டும்.

  3. Incorrect: The rabbit was fear about the fox. ❌

    Correct: The rabbit was afraid of the fox. ✅

    விளக்கம்: பயத்தைப் பற்றிப் பேசும்போது 'afraid of' அல்லது 'scared of' பயன்படுத்த வேண்டும்.

  4. Incorrect: The owl saw more, so it spoke lesser. ❌

    Correct: The owl saw more, so it spoke less. ✅

    விளக்கம்: ஒப்பீட்டு வாக்கியங்களில் (Parallel Structures) "The more... the less..." என்ற அமைப்பைப் பயன்படுத்த வேண்டும்.

Quiz – Answer the following

  1. Where did the old owl live?
    1. oak tree
    2. banyan tree
  2. What did the old owl do?
    1. Observed the happenings
    2. Heard the stories
    3. saw more, spoke less
    4. All the above
  3. Who asked the owl to help?
    1. fawn
    2. fox
    3. rabbit
  4. Who chased the rabbit?
    1. fox
    2. tiger
    3. lion
  5. What did the owl advise the rabbit?
    1. climb on the rock
    2. hide behind the bush
    3. pass through the narrow path
View Answers
  1. a
  2. d
  3. c
  4. a
  5. c

Quiz – True or False

  1. The owl spoke more. (True / False)
  2. The owl heard the stories shared by the people. (True / False)
  3. The owl became wiser day by day. (True / False)
View Answers
  1. False
  2. True
  3. True

Summary (English + Tamil explanation)

The story reminds us of the familiar moral, "Wisdom is more powerful than strength." And you have now learned many simple English sentences from this story that can be used in daily conversation in English.

"புத்திசாலித்தனம் வலிமையைவிட சக்தி வாய்ந்தது," என்ற நன்கு அறியப்பட்ட நீதியை இக்கதை நமக்கு நினைவூட்டுகிறது. மேலும், தினசரி உரையாடலில் பயன்படுத்தக்கூடிய பல எளிய ஆங்கில வாக்கியங்களை இந்தக் கதையின் மூலம் நீங்கள் இப்போது கற்றுக்கொண்டீர்கள்.

Practice tips

Keep practising by reading the story aloud. And listen to the story and improve your listening skill and pronunciation.

Do it yourself

Try to make sentences using the following verbs:

Frequently Asked Questions (FAQ) & Phrases

1. How do you say "அமைதியாக இரு" in daily spoken English?

You can use the following common expressions:

2. What is the difference between "Advice" and "Advise"?

Advice (Noun - பெயர்ச்சொல்): ஆலோசனை

Example: The owl gave good advice. (ஆந்தை நல்ல ஆலோசனை வழங்கியது.)

Advise (Verb - வினைச்சொல்): ஆலோசனை கூறுவது

Example: The owl advised the rabbit to run. (ஆந்தை முயலை ஓடுமாறு அறிவுறுத்தியது.)

3. What does the expression "Wise Old Owl" signify?

The expression "Wise Old Owl" refers to a person who speaks little, listens carefully, and gives thoughtful advice based on observation.

குறைவாகப் பேசி, கவனமாகக் கேட்டு, நல்ல அனுபவத்துடன் ஆலோசனை வழங்கும் மனிதரைக்குறிக்க இந்தச் சொற்றொடர் பயன்படுகிறது.

4. How do I express "துரத்துவது" in English?

You can use the phrase "Chase" or "Run after":

People also learn

👉 The Fox And The Crow Story in English and Tamil

👉 Daily use phrases - PUT (போடு)

👉 கூட்டு வாக்கிய அமைப்பு

👉 Sample Interview for getting tourist visa

👉 First Day Of School Conversation