Tips for writing sentences in twelve tenses
இந்தப் பக்கத்தில், நான்கு முக்கிய வகையான காலங்கள் "தனிவினை, தொடர்வினை, முடிவுற்ற வினை மற்றும் முடிவுற்ற தொடர்வினை" ஆங்கிலத்தில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு கால வடிவங்களின் தொகுப்பும் ஆங்கிலம் மற்றும் தமிழில் மாதிரி வாக்கியங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் அர்த்தத்துடன் கூடிய எடுத்துக்காட்டுகள், வெவ்வேறு காலங்கள் “நிகழ்காலம், இறந்த காலம், எதிர் காலம்" ஆங்கிலத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை தமிழ் பேசுபவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ள உதவும்.
Verb definition and tenses of do
| Tense Form | English | Tamil |
|---|---|---|
| Present | do | செய் |
| Past | did | செய்தேன் |
| Participle | done | செய்திரு- |
| Continuous | doing | செய்துகொண்டிரு - |
done - செய்திரு- மற்றும் doing - செய்துகொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெரும்.
Simple - தனிவினை
1. Simple Present - நிகழ்காலத் தனிவினை
தற்போது செய்கிற செயலைக் குறிப்பிட present tense - ஐப் பயன்படுத்தவும்.
- I do - நான் செய்கிறேன்.
2. Simple Past - இறந்தகாலத் தனிவினை
செய்து முடித்த செயலைக் குறிப்பிட past tense - ஐப் பயன்படுத்தவும்.
- I did - நான் செய்தேன்.
3. Simple Future - எதிர்காலத் தனிவினை
எதர்காலத்தில் செய்யப் போகிற செயலைக் குறிப்பிட will + present tense - ஐப் பயன்படுத்தவும்.
- I will do - நான் செய்வேன்.
Continuous - தொடர்வினை
4. Present Continuous - நிகழ்காலத் தொடர்வினை
தற்போது தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறச் செயலைக் குறிப்பிட am/is/are + continuous tense - ஐப் பயன்படுத்தவும்.
- I am doing - நான் செய்து கொண்டிருக்கிறேன்.
- She is doing - அவள் செய்து கொண்டிருக்கிறாள்
- We are doing - நாங்கள் செய்து கொண்டிருக்கிறாம்.
5. Past Continuous - இறந்தகாலத் தொடர்வினை
கடந்த காலத்தில் தொடர்ந்து செய்து கொண்டிருந்தச் செயலைக் குறிப்பிட was /were + continuous tense - ஐப் பயன்படுத்தவும்.
- I was doing - நான் செய்து கொண்டிருந்தேன்.
- They were doing - அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.
6. Future Continuous - எதிர்காலத் தொடர்வினை
எதர்காலத்தில் தொடர்ந்து செய்து கொண்டிருக்கப் போகிற செயலைக் குறிப்பிட will be + continuous tense - ஐப் பயன்படுத்தவும்.
- I will be doing - நான் செய்து கொண்டிருப்பேன்.
Perfect - முடிவுற்ற வினை
7. Present Perfect - முடிவுற்ற நிகழ்கால வினை
தற்போது செய்து முடித்திருக்கிற செயலைக் குறிப்பிட has/have + past participle - ஐப் பயன்படுத்தவும்.
- I have done - நான் செய்திருக்கிறேன்.
- She has done - அவள் செய்திருக்கிறாள்.
- We have done - நாங்கள் செய்திருக்கிறாம்.
- I have gone to America - நான் அமெரிக்கா போயிருக்கிறேன்.
8. Past Perfect - முடிவுற்ற இறந்தகால வினை
கடந்த காலத்தில் செய்து முடித்திருந்த செயலைக் குறிப்பிட had + past participle - ஐப் பயன்படுத்தவும்.
- I had done - நான் செய்திருந்தேன்.
- She had done - அவள் செய்திருந்தாள்.
- We had done - நாங்கள் செய்திருந்தோம்.
- I had gone to America last month - நான் போன மாதம் அமெரிக்கா போயிருந்தேன்.
9. Future Perfect - முடிவுற்ற எதிர்கால வினை
எதிர்காலத்தில் செய்து முடித்திருக்ககூடியச் செயலைக் குறிப்பிட would have + past participle - ஐப் பயன்படுத்தவும்.
- I would have done - நான் செய்திருப்பேன்.
- She would have done - அவள் செய்திருப்பாள்.
- We would have done - நாங்கள் செய்திருப்போம்.
- I would have gone to America this time tomorrow - நான் நாளைக்கு இந் நேரம் அமெரிக்கா போயிருப்பேன்.
Perfect Continuous - முடிவுற்ற தொடர்வினை
10. Present Perfect Continuous - முடிவுற்ற நிகழ்காலத் தொடர்வினை
தற்போது, ஒரு குறிப்பிட்ட காலங்களாக (எ.கா. இரண்டு வருடங்களாக) தொடர்ந்து செய்து கொண்டிருந்திருக்கிறச் செயலைக் குறிப்பிட has/have + been + continuous tense - ஐப் பயன்படுத்தவும்.
- I have been doing - நான் செய்து கொண்டிருந்திருக்கிறேன்.
- She has been doing - அவள் செய்து கொண்டிருந்திருக்கிறாள்.
- We have been doing - நாங்கள் செய்து கொண்டிருந்திருக்கிறாம்.
11. Past Perfect Continuous - முடிவுற்ற இறந்தகாலத் தொடர்வினை
கடந்த காலத்தில், ஒரு குறிப்பிட்ட காலங்களாக (எ.கா. இரண்டு வருடங்களாக) தொடர்ந்து செய்து கொண்டிருந்திருந்தச் செயலைக் குறிப்பிட had + been + continuous tense - ஐப் பயன்படுத்தவும்.
- I had been doing - நான் செய்து கொண்டிருந்திருந்தேன்.
- They had been doing - அவர்கள் செய்து கொண்டிருந்திருந்தார்கள்.
12. Future Perfect Continuous - முடிவுற்ற எதிர்காலத் தொடர்வினை
எதர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலங்களாக (எ.கா. இரண்டு வருடங்களாக) தொடர்ந்து செய்து கொண்டிருந்திருக்கப் போகிற செயலைக் குறிப்பிட will/would + have + been + continuous tense - ஐப் பயன்படுத்தவும்.
- I would have been doing - நான் செய்து கொண்டிருந்திருப்பேன்.
Summary
இந்தப் பக்கத்தின் மூலம், நான்கு வகையான காலங்கள் "தனிவினை, தொடர்வினை, முடிவுற்ற வினை மற்றும் முடிவுற்ற தொடர்வினை" ஆங்கிலத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். மேலும் தமிழ் அர்த்தத்துடன் கூடிய எடுத்துக்காட்டுகள் மூலம், வெவ்வேறு காலங்கள் “நிகழ்காலம், இறந்த காலம், எதர் காலம்" ஆங்கிலத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் எளிதாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.
- Simple sentences in different tenses for the verb do is given in this page.
- இந்தக் பக்கத்தில் செய் என்ற வினைச்சொல்லிற்கு வெவ்வேறு காலங்களில் சிறு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- Similarly make simple sentences in different tenses using the verb go
- இதேபோல் போ என்ற வினைச்சொல்லிற்கு வெவ்வேறு காலங்களில் சிறு வாக்கியங்களை உருவாக்குங்கள்.
Practice tips
Keep practising by saying the example sentences out loud and using them in real life situations. Your command over making sentences in different tense forms a solid base for more advanced English skills.
Do it yourself
| Tense Form | English | Tamil |
|---|---|---|
| Present | make | உருவாக்கு |
| Past | made | உருவாக்கினேன் |
| Participle | made | உருவாக்கியிரு- |
| Continuous | making | உருவாக்கிக் கொண்டிரு- |
Practice common Phrases using the verb 'See-பாா்'
