Interrogative, Affirmative, Negative sentences using the verb go

நேர்மறை, எதிர்மறை மற்றும் வினா? வாக்கியங்கள்

Positive sentences state facts/affirmations, negative sentences deny or negate them (using "not"), and interrogative sentences ask questions, often by inverting subject/verb or using question words, ending in a question mark.

For example, - உதாரணமாக,

இந்த பக்கத்தில், நேர்மறை, எதிர்மறை, வினா வாக்கியங்கள் வெவ்வேறு காலங்களில் go - போ என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

Verb definition and tenses

Tense Form EnglishTamil
Present go போ
Past went போனேன்
Participle gone போயிரு-
Continuous going போய்க்கொண்டிரு-

gone - போயிரு மற்றும் going - போய்க் கொண்டிரு என்ற வினையெச்செங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெரும்.

Simple Present- நிகழ்காலத் தனிவினை

Interrogative - வினா?

அவள் சந்தைக்குப் போகிறாளா?

Does she go to market?

டஸ் ஸீ கோ டூ மார்க்கெட்?

Affirmative - நேர்மறை

அவள் சந்தைக்குப் போகிறாள்.

She goes to market.

ஸீ கோஸ் டூ மார்க்கெட்.

Negative - எதிர்மறை

அவள் சந்தைக்குப் போகவில்லை.

She doesn’t go to market.

ஸீ டஸ்ன்ட் கோ டூ மார்க்கெட்.

Simple Past - இறந்தகாலத் தனிவினை

Interrogative - வினா?

அவள் சென்னைக்குப் போனாளா?

Did She go to Chennai?

டிட் ஸீ கோ டூ சென்னை?

Affirmative - நேர்மறை

அவள் ஒரு நேர்காணலுக்காக சென்னைக்குப் போனாள்.

She went to Chennai for an interview.

ஸீ வென்ட் டூ சென்னை பார் அன் இன்டர்வியூ.

Negative - எதிர்மறை

அவள் ராமைப் பார்க்க சென்னைக்குப் போகவில்லை.

She didn’t go to Chennai to see Ram.

ஸீ டிடின்ட் கோ டூ சென்னை டூ சி ராம்.

Simple Future - எதிர்காலத் தனிவினை

Interrogative - வினா?

அவள் விமான நிலையத்துக்குப் போவாளா?

Will she go to airport?

வில் ஸீ கோ டூ ஏர்போர்ட்?

Affirmative - நேர்மறை

அவள் சங்கருடன் விமான நிலையத்துக்குப் போவாள்.

She will go to airport with Shankar.

ஸீ வில் கோ டூ ஏர்போர்ட் வித் சங்கர்.

Negative - எதிர்மறை

அவள் விமான நிலையத்துக்குத் தனியாகப் போகமாட்டாள்.

She won’t go to airport alone.

ஸீ வோன்ட் கோ டூ ஏர்போர்ட் அலோன்.

Present Continuous - நிகழ்காலத் தொடர்வினை

Interrogative - வினா?

அவள் கல்லூரிக்குப் போய் கொண்டிருக்கிறாளா?

Is she going to college?

ஸ் ஸீ கோயிங் டூ காலேஜ்?

Affirmative - நேர்மறை

அவள் கல்லூரிக்குப் போய் கொண்டிருக்கிறாள்.

She is going to College.

ஸீ ஸ் கோயிங் டூ காலேஜ்.

Negative - எதிர்மறை

அவள் கல்லூரிக்குப் போய் கொண்டிருக்கவில்லை.

She is not going to college.

ஸீ ஸ் நாட் கோயிங் டூ காலேஜ்.

Past Continuous - இறந்தகாலத் தொடர்வினை

Interrogative - வினா?

அவள் காய்கறி வாங்குவதற்காகப் போய்க் கொண்டிருந்தாளா?

Was she going for buying vegetables?

வாஸ் ஸீ கோயிங் பார் பையிங் வெஜிட்டபிள்ஸ்?

Affirmative - நேர்மறை

அவள் மருந்து வாங்குவதற்காகப் போய்க் கொண்டிருந்தாள்.

She was going for buying medicines.

ஸீ வாஸ் கோயிங் பார் பையிங் மெடிசின்ஸ்.

Negative - எதிர்மறை

அவள் காய்கறி வாங்கப் போய்க் கொண்டிருக்கவில்லை.

She was not going to buy vegetables.

ஸீ வாஸ் நாட் கோயிங் டூ பை வெஜிட்டபிள்ஸ்.

Future Continuous- எதிர்காலத் தொடர்வினை

Interrogative - வினா?

அவள் லண்டன் போய்க் கொண்டிருப்பாளா?

Will she be going to London?

வில் ஸீ பீ கோயிங் டூ லண்டன்?

Affirmative - நேர்மறை

அடுத்த வாரம் இந்நேரம், அவள் லண்டன் போய்க் கொண்டிருப்பாள்.

This time next week, She will be going to London.

திஸ் டைம் நெக்ஸ்ட் வீக், ஸீ வில் பீ கோயிங் டூ லண்டன்.

Negative - எதிர்மறை

இல்லை. அவள் லண்டன் போய்க் கொண்டிருக்கமாட்டாள்.

No. She won’t be going to London.

நோ. ஸீ வோன்ட் பீ கோயிங் டூ லண்டன்.

Present Perfect - முடிவுற்ற நிகழ்கால வினை

Interrogative - வினா?

அவள் ஊட்டிக்கு ஒரு முறையாவது போயிருக்கிறாளா?

Has she gone to Ooty atleast once?

கேஸ் ஸீ கான் டூ ஊட்டி அட்லீஸ்ட் ஒன்ஸ்?

Affirmative - நேர்மறை

அவள் ஊட்டிக்கு ஒரு முறை போயிருக்கிறாள்.

She has gone to Ooty once.

ஸீ கேஸ் கான் டூ ஊட்டி ஒன்ஸ்.

Negative - எதிர்மறை

அவள் ஊட்டிக்கு ஒரு முறை கூட போயிருக்கவில்லை.

She hasn’t gone to Ooty even once.

ஸீ கேஸ்ன்ட் கான் டூ ஊட்டி ஈவன் ஒன்ஸ்.

Past Perfect - முடிவுற்ற இறந்தகால வினை

Interrogative - வினா?

அவள் விமானத்தில் ஒரு முறையாவது போயிருந்தாளா?

Had she gone in aeroplane atleast once?

ஹேட் ஸீ கான் இன் ஏரொப்பிளேன் அட்லீஸ்ட் ஒன்ஸ்?

Affirmative - நேர்மறை

அவள் மும்பைக்கு விமானத்தில் போயிருந்தாள்.

She had gone to Mumbai in plane.

ஸீ ஹேட் கான் டூ மும்பை இன் பிளேன்.

Negative - எதிர்மறை

அவள் விமானத்தில் போயிருந்ததில்லை.

She hadn’t gone in flight.

ஸீ ஹேடின்ட் கான் இன் பிளைட்.

Future perfect - முடிவுற்ற எதிர் கால வினை

Interrogative - வினா?

அவள் அலுவலகம் போயிருப்பாளா?

Will she have gone to Office?

வில் ஸீ ஹேவ் கான் டூ ஆபிஸ்?

Affirmative - நேர்மறை

அவள் 9 மணிக்கு அலுவலகம் போயிருப்பாள்.

She would have gone to Office at 9’o clock.

ஸீ வுட் ஹேவ் கான் டூ ஆபிஸ் அட் 9’ஓ கிளோக்.

Negative - எதிர்மறை

அவள் அவ்வளவு சீக்கிரம் அலுவலகம் போயிருக்க மாட்டாள்.

She won’t have gone to Office that much earlier.

ஸீ வோன்ட் கேவ் கான் டூ ஆபிஸ் தட் மச் ஏர்லியர்.

Present Perfect Continuous - முடிவுற்ற நிகழ்காலத் தொடர்வினை

Interrogative - வினா?

அவள் வேலைக்குப் போய்க் கொண்டிருந்திருக்கிறாளா?

Has she been going to work?

ஹேஸ் ஸீ பீன் கோயிங் டூ வொர்க்?

Affirmative - நேர்மறை

அவள் வேலைக்குப் போய்க் கொண்டிருந்திருக்கிறாள்.

She has been going to work.

ஸீ ஹேஸ் பீன் கோயிங் டூ வொர்க்.

Negative - எதிர்மறை

அவள் வேலைக்குப் போய்க் கொண்டிருந்திருக்கவில்லை.

She has not been going to work.

ஸீ ஹேஸ் நாட் பீன் கோயிங் டூ வொர்க்.

Past Perfect Continuous- முடிவுற்ற இறந்தகாலத் தொடர்வினை

Interrogative - வினா?

அவள் யோகா வகுப்புக்குப் போய் கொண்டிருந்திருந்தாளா?

Had she been going to yoga class?

ஹேட் ஸீ பீன் கோயிங் டூ யோகா கிளாஸ்?

Affirmative - நேர்மறை

அவள் யோகா வகுப்புக்குப் போய் கொண்டிருந்திருந்தாள்.

She had been going to yoga class.

ஸீ ஹேட் பீன் கோயிங் டூ யோகா கிளாஸ்.

Negative - எதிர்மறை

அவள் யோகா வகுப்புக்குப் போய் கொண்டிருந்திருந்ததில்லை.

She had not been going to yoga class.

ஸீ ஹேட் நாட் பீன் கோயிங் டூ யோகா கிளாஸ்.

Future perfect Continuous- முடிவுற்ற எதிர்காலத் தொடர்வினை

Interrogative - வினா?

அவள் கபடிப் போட்டிக்குப் போய்க் கொண்டிருந்திருப்பாளா?

Will she have been going to Kabadi match.

வில் ஸீ கேவ் பீன் கோயிங் டூ கபடி மேட்ச்.

Affirmative - நேர்மறை

யாராவது அவளுக்கு நிதி உதவி செய்திருந்தால், அவள் கபடிப் போட்டிக்குப் போய் கொண்டிருந்திருப்பாள்.

If somebody had sponsored her, she would have been going to Kabadi match.

இப் சம்படி ஹேட் ஸ்பான்ஸர்ட் கெர், ஸீ வுட் கேவ் பீன் கோயிங் டூ கபடி மேட்ச்.

Negative - எதிர்மறை

அவர் அவளுக்கு உதவாமல் இருந்திருந்தால், அவள் கபடிப்போட்டிக்குப் போய்க் கொண்டிருந்திருக்கமாட்டாள்.

If he hadn’t helped her, She won’t have been going to Kabadi match.

இப் ஹீ ஹேடின்ட் ஹெல்ப்ட் கெர், ஸீ வோன்ட் கேவ் பீன் கோயிங் டூ கபடி மேட்ச்.

Summary

You have now seen how English expresses affirmative, negative and interrogative expressions through four major tense categories: simple, continuous, perfect, and perfect continuous using the verb go. Practice making and speaking sentences daily to build confidence in using English affirmative, negative and interrogative sentences in real conversations.

Simple affirmative (positive), negative and interrogative sentences in different tenses for the verb go is given in this page.

இந்தக் பக்கத்தில் போ என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு காலங்களில் சிறு நேர்மறை, எதிர்மறை மற்றும் வினா வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Similarly make simple sentences in different tenses using the verb eat

இதேபோல் சாப்பிடு என்ற வினைச்சொல்லிற்கு வெவ்வேறு காலங்களில் சிறு நேர்மறை, எதிர்மறை மற்றும் வினா வாக்கியங்களை உருவாக்குங்கள்.

Practice tips

Keep practising by saying the example sentences out loud and using them in real life situations. Your command over commonly used verbs like “go” in different tenses forms a solid base for more advanced English skills.

Do it yourself

Try to make sentences using the verb arrange

Tense Form EnglishTamil
Present arrange ஏற்பாடு செய்
Past arranged ஏற்பாடு செய்தேன்
Participle arranged ஏற்பாடு செய்திரு-
Continuous arranging ஏற்பாடு செய்து கொண்டிரு-

Practice common Phrases using the verb 'eat-சாப்பிடு'