Maalais Spoken English In Tamil-logo
Do - செய் | Go - போ | Velai - வேலை |

Tenses - காலங்கள்

Interrogative - வினா?, Affirmative - நேர்மறை, Negative - எதிர்மறை

Tenses of do:
Present Tense
நிகழ் காலம்
Past Tense
இறந்த காலம்
**Past participle
முடிவுற்ற வினையெச்சம்
Continuous
தொடர் வினையெச்சம்
do - செய் did - செய்தேன் done - செய்திரு- doing - செய்துகொண்டிரு-

done - செய்திரு- மற்றும் doing - செய்துகொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெரும்.

Present Tense - நிகழ்காலம்

நீ கவனிக்கிறாயா?

Do you listen?

டூ யூ லிசன்?

ஆமாம். நான் கவனிக்கிறேன்.

Yes. I do listen.

யெஸ். ஐ டூ லிசன்.

ஆமாம். நான் கவனிக்கிறேன்.

Yes. I do.

யெஸ். ஐ டூ.

இல்லை. நான் கவனிக்கவில்லை.

No. I don’t listen.

நோ. ஐ டோன்ட் லிசன்.

அவன் கவனிக்கிறானா?

Does he listen?

டஸ் ஹீ லிசன்?

ஆமாம். அவன் கவனிக்கிறான்.

Yes. He does listen.

யெஸ். ஹீ டஸ் லிசன்.

இல்லை. அவன் கவனிக்கவில்லை.

No. He doesn’t listen.

நோ. ஹீ டஸின்ட் லிசன்.

நீ என்ன செய்கிறாய்?

What do you do?

வோட் டூ யூ டூ?

நான் வங்கியில் வேலை செய்கிறேன்.

I do work in a bank.

ஐ டூ வொர்க் இன் எ பேங்க்.

நான் ஒரு ஆசிரியராக பணிபுரிகிறேன்.

I am working as a Teacher.

ஐ எம் வொர்க்கிங் அஸ் எ டீச்சர்.

நான் ஒன்றும் செய்யவில்லை.

I do nothing.

ஐ டூ நத்திங்.

நான் ஒன்றும் செய்யவில்லை.

I don’t do anything.

ஐ டோன்ட் டூ எனித்திங்.

Past tense- இறந்த காலம்

நீ ஈபி பில் கட்டிவிட்டாயா?

Did you pay the EB Bill?

டிட் யூ பே த ஈபி பில்.

அவர் ஈபி பில்லை கட்டிவிட்டார்.

He did pay the EB bill.

ஹீ டிட் பே த ஈபி பில்.

அவர் ஈபி பில்லை கட்டிவிட்டார்.

He paid the EB bill.

ஹீ பெய்ட் த ஈபி பில்.

நான் ஈபி பில்லை கட்டவில்லை.

I didn’t pay the EB bill.

ஐ டிடின்ட் பே த ஈபி பில்.

Future tense- எதிர்காலம்

நீ இந்த வேலையை செய்வாயா?

Will you do this work?

வில் யூ டூ திஸ் ஒர்க்?

நான் இந்த வேலையை பிறகு செய்வேன்.

I will do this work later.

ஐ வில் டூ திஸ் ஒர்க் லேட்டர்.

நான் இந்த வேலையை செய்யமாட்டேன்.

I won’t do this work.

ஐ வோன்ட் டூ திஸ் ஒர்க்.

அவர் இந்த வேலையை எப்பொழுது செய்வார்?

When will he do this work?

வென் வில் ஹீ டூ திஸ் ஒர்க்?

அவர் இந்த வேலையை காலை 9 மணிக்குச் செய்வார்.

He will do this work at 9 a.m.

ஹீ வில் டூ திஸ் ஒர்க் அட் 9 ஏ.எம்.

அவர் இந்த வேலையை இன்று செய்யமாட்டார்.

He won’t do this work today.

ஹீ வோன்ட் டு திஸ் ஒர்க் டுடே.

Continuous - தொடர்வினை

நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

What are you doing?

வோட் ஆர் யூ டூயிங்?

நீங்கள் என்னை என்ன செய்யச் சொன்னீர்களோ அதை நான் செய்து கொண்டிருக்கிறேன்.

I am doing what you told me to do.

ஐ எம் டூயிங் வோட் யூ டோல்டு மி டூ டு.

அவர் என்னை என்ன செய்யச் சொன்னாரோ அதை நான் செய்து கொண்டிருக்கவில்லை.

I am not doing what he told me to do.

ஐ எம் நாட் டூயிங் வோட் ஹீ டோல்டு மி டூ டு.

அவள் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தாளா?

Was she doing homework?

வாஸ் ஸீ டூயிங் ஹோம் வொர்க்?

அவள் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தாள்;.

She was doing homework.

ஸீ வாஸ் டூயிங் ஹோம் வொர்க்.

அவள் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருக்கவில்லை.

She was not doing homework.

ஸீ வாஸ் நாட் டூயிங் ஹோம் வொர்க்.

அவள் ஏழு மணிக்கு வீட்டு பாடம் செய்து கொண்டிருப்பாளா?

Will she be doing homework at 7’o clock?

வில் ஸீ பீ டூயிங் ஹோம் ஒர்க்; அட் 7-ஓ கிளாக்?

ஏழு மணிக்கு அவள் வீட்டு பாடம் செய்து கொண்டிருப்பாள்.

At 7’o clock, she will be doing homework.

அட் 7-ஓ கிளாக், ஸீ வில் பீ டூயிங் ஹோம் ஒர்க்;.

ஐந்து மணிக்கு அவள் வீட்டு பாடம் செய்து கொண்டிருக்க மாட்டாள்.

She won’t be doing homework at 5’o clock,.

ஸீ வோன்ட் பீ டூயிங் ஹோம் ஒர்க் அட் 5-ஓ கிளாக,.

Present Perfect- நிகழ்கால முடிவுற்ற வினை

அவள் கொடுத்த வேலையை செய்திருக்கிறாளா?

Has she done the assigned work?

ஹேஸ் ஸீ டன் த அசைன்டு வொர்க்.

அவள் கொடுத்த வேலையை செய்திருக்கிறாள்.

She has done the assigned work.

ஸீ ஹேஸ் டன் த அசைன்டு வொர்க்.

அவள் கொடுத்த வேலையை செய்திருக்கவில்லை.

She hasn’t done the given work.

ஸீ ஹேஸின்ட் டன் த கிவ்வன் வொர்க்.

Past Perfect- இறந்தகால முடிவுற்ற வினை

அவன் எல்லா வீட்டுப்பாடத்தையும் செய்திருந்தானா?

Had he done all the homework?

ஹேட் ஹீ டன் ஆல் த ஹோம்வொர்க்?

நேற்று அவன் எல்லா வீட்டுப்பாடத்தையும் செய்திருந்தான்.

He had done all the homework yesterday.

ஹீ ஹேட் டன் ஆல் த ஹோம்வொர்க் எஸ்டர்டே.

அவன் எல்லா வீட்டுப்பாடத்தையும் செய்திருந்ததில்லை.

He hadn’t done all the homework.

ஹீ ஹேடின்ட் டன் ஆல் த ஹோம்வொர்க்.

Future Perfect - எதிர்கால முடிவுற்ற வினை

அவள், அவளுடைய வேலையை செய்திருப்பாளா?

Will she have done her work?

வில் ஸீ கேவ் டன் ஹெர் ஒர்க்?

இந்நேரம், அவள், அவளுடைய வேலையை செய்திருப்பாள்.

This time, she would have done her work.

திஸ் டைம், ஸீ வுட் கேவ் டன் ஹெர் ஒர்க்.

அவள், அவளுடைய வேலையை செய்திருக்க மாட்டாள்.

She won’t have done her work.

ஸீ வோன்ட் கேவ் டன் ஹெர் ஒர்க்.

Present Perfect Continuous- முடிவுற்ற நிகழ்;கால தொடர்வினை

நீ தினமும் யோகா செய்து கொண்டிருந்திருக்கிறாயா?

Have you been doing yoga daily?

ஹேவ் யூ பீன் டூயிங் யோகா டெய்லி?

அவர் தினமும் யோகா செய்து கொண்டிருந்திருக்கிறார்.

He has been doing yoga daily.

ஹீ ஹேஸ் பீன் டூயிங் யோகா டெய்லி.

நான் தினமும் யோகா செய்து கொண்டிருந்திருக்கவில்லை.

I haven’t been doing yoga daily.

ஐ ஹேவின்ட் பீன் டூயிங் யோகா டெய்லி.

Past Perfect Continuous- முடிவுற்ற இறந்தகால தொடர்வினை

அவள் சமையல் தொழில் செய்து கொண்டிருந்திருந்தாளா?

Had she been doing catering?

ஹேட் ஸீ பீன் டூயிங் கேட்டரிங்?

அவள் சமையல் செய்து கொண்டிருந்திருந்தாள்.

She had been cooking.

ஸீ ஹேட் பீன் குக்கிங்.

அவள் சமையல் செய்து கொண்டிருந்திருந்ததில்லை.

She hadn’t been cooking.

ஸீ ஹேடின்ட் பீன் குக்கிங்.

Future Perfect Continuous- முடிவுற்ற எதிர்கால தொடர்வினை

அவள் தையல் தொழில் செய்து கொண்டிருந்திருப்பாளா?

Will she have been doing tailoring business?

வில் ஸீ கேவ் பீன் டூயிங் டெய்லரிங் பிஸினஸ்?

அவள் மென்பொருள் தொழில் செய்து கொண்டிருந்திருப்பாள்.

She will have been doing software business.

ஸீ வில் கேவ் பீன் டூயிங் சாப்ட்வேர் பிஸினஸ்.

அவள் டெய்லரிங் பிஸினஸ் செய்து கொண்டிருந்திருக்கமாட்டாள்.

She won’t have been doing tailoring business.

ஸீ வோன்ட் கேவ் பீன் டூயிங் டெய்லரிங் பிஸினஸ்.



Tenses - Go | Phrases