Tips for Writing Sentences in Twelve Tenses

இந்தப் பக்கத்தில், நான்கு முக்கிய வகையான காலங்கள் "தனிவினை, தொடர்வினை, முடிவுற்ற வினை மற்றும் முடிவுற்ற தொடர்வினை" ஆங்கிலத்தில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு கால வடிவங்களின் தொகுப்பும் ஆங்கிலம் மற்றும் தமிழில் மாதிரி வாக்கியங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் அர்த்தத்துடன் கூடிய எடுத்துக்காட்டுகள், வெவ்வேறு காலங்கள் “நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம்" ஆங்கிலத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை தமிழ் பேசுபவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ள உதவும்.

Verb Definition and Tenses of DO

Tense Form EnglishTamil
Present do செய்
Past did செய்தேன்
Participle done செய்திரு-
Continuous doing செய்துகொண்டிரு-

done - செய்திரு- மற்றும் doing - செய்துகொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb -உடன் சேர்ந்து முற்றுப்பெறும்.

Simple - தனிவினை

1. Simple Present - நிகழ்காலத் தனிவினை

தற்போது செய்கிற செயலைக் குறிப்பிட present tense -ஐப் பயன்படுத்தவும்.

  • I do - நான் செய்கிறேன்.

2. Simple Past - இறந்தகாலத் தனிவினை

செய்து முடித்த செயலைக் குறிப்பிட past tense -ஐப் பயன்படுத்தவும்.

  • I did - நான் செய்தேன்.

3. Simple Future - எதிர்காலத் தனிவினை

எதிர்காலத்தில் செய்யப் போகிற செயலைக் குறிப்பிட will + present tense -ஐப் பயன்படுத்தவும்.

  • I will do - நான் செய்வேன்.

Continuous - தொடர்வினை

4. Present Continuous - நிகழ்காலத் தொடர்வினை

தற்போது தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறச் செயலைக் குறிப்பிட am/is/are + continuous tense -ஐப் பயன்படுத்தவும்.

  • I am doing - நான் செய்து கொண்டிருக்கிறேன்.
  • She is doing - அவள் செய்து கொண்டிருக்கிறாள்.
  • We are doing - நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

5. Past Continuous - இறந்தகாலத் தொடர்வினை

கடந்த காலத்தில் தொடர்ந்து செய்து கொண்டிருந்தச் செயலைக் குறிப்பிட was/were + continuous tense -ஐப் பயன்படுத்தவும்.

  • I was doing - நான் செய்து கொண்டிருந்தேன்.
  • They were doing - அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.

6. Future Continuous - எதிர்காலத் தொடர்வினை

எதிர்காலத்தில் தொடர்ந்து செய்து கொண்டிருக்கப் போகிற செயலைக் குறிப்பிட will be + continuous tense -ஐப் பயன்படுத்தவும்.

  • I will be doing - நான் செய்து கொண்டிருப்பேன்.

Perfect - முடிவுற்ற வினை

7. Present Perfect - முடிவுற்ற நிகழ்கால வினை

தற்போது செய்து முடித்திருக்கிற செயலைக் குறிப்பிட has/have + past participle -ஐப் பயன்படுத்தவும்.

  • I have done - நான் செய்திருக்கிறேன்.
  • She has done - அவள் செய்திருக்கிறாள்.
  • We have done - நாங்கள் செய்திருக்கிறோம்.
  • I have gone to America - நான் அமெரிக்கா போயிருக்கிறேன்.

8. Past Perfect - முடிவுற்ற இறந்தகால வினை

கடந்த காலத்தில் செய்து முடித்திருந்த செயலைக் குறிப்பிட had + past participle -ஐப் பயன்படுத்தவும்.

  • I had done - நான் செய்திருந்தேன்.
  • She had done - அவள் செய்திருந்தாள்.
  • We had done - நாங்கள் செய்திருந்தோம்.
  • I had gone to America last month - நான் போன மாதம் அமெரிக்கா போயிருந்தேன்.

9. Future Perfect - முடிவுற்ற எதிர்கால வினை

எதிர்காலத்தில் செய்து முடித்திருக்கக்கூடியச் செயலைக் குறிப்பிட will have + past participle -ஐப் பயன்படுத்தவும்.

  • I will have done - நான் செய்திருப்பேன்.
  • She will have done - அவள் செய்திருப்பாள்.
  • We will have done - நாங்கள் செய்திருப்போம்.
  • I will have gone to America by this time tomorrow - நான் நாளை இந்நேரம் அமெரிக்கா போயிருப்பேன்.

Perfect Continuous - முடிவுற்ற தொடர்வினை

10. Present Perfect Continuous - முடிவுற்ற நிகழ்காலத் தொடர்வினை

தற்போது, ஒரு குறிப்பிட்ட காலமாக (எ.கா. இரண்டு வருடங்களாக) தொடர்ந்து செய்து கொண்டிருந்திருக்கிறச் செயலைக் குறிப்பிட has/have + been + continuous tense -ஐப் பயன்படுத்தவும்.

  • I have been doing - நான் செய்து கொண்டிருந்திருக்கிறேன்.
  • She has been doing - அவள் செய்து கொண்டிருந்திருக்கிறாள்.
  • We have been doing - நாங்கள் செய்து கொண்டிருந்திருக்கிறோம்.

11. Past Perfect Continuous - முடிவுற்ற இறந்தகாலத் தொடர்வினை

கடந்த காலத்தில், ஒரு குறிப்பிட்ட காலமாக (எ.கா. இரண்டு வருடங்களாக) தொடர்ந்து செய்து கொண்டிருந்திருந்தச் செயலைக் குறிப்பிட had + been + continuous tense -ஐப் பயன்படுத்தவும்.

  • I had been doing - நான் செய்து கொண்டிருந்திருந்தேன்.
  • They had been doing - அவர்கள் செய்து கொண்டிருந்திருந்தார்கள்.

12. Future Perfect Continuous - முடிவுற்ற எதிர்காலத் தொடர்வினை

எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலமாக (எ.கா. இரண்டு வருடங்களாக) தொடர்ந்து செய்து கொண்டிருந்திருக்கப் போகிற செயலைக் குறிப்பிட will + have + been + continuous tense -ஐப் பயன்படுத்தவும்.

  • I will have been doing - நான் செய்து கொண்டிருந்திருப்பேன்.

Common Mistakes in Tenses - பொதுவான தவறுகள்

Here are some frequent errors learners make when forming sentences across different tenses using common verbs like DO, GO, and MAKE:

  1. Incorrect: He go to office every day.
    Correct: He goes to office every day.
    விளக்கம்: Simple Present-ல் He, She, It போன்ற Third-person singular எழுவாய்களுக்கு (Subject) வினைச்சொல்லுடன் 's' அல்லது 'es' சேர்க்க வேண்டும் (go → goes).
  2. Incorrect: I did not went yesterday.
    Correct: I did not go yesterday.
    விளக்கம்: 'Did' அல்லது 'Did not' என்ற உதவி வினைச்சொல்லைப் பயன்படுத்திய பிறகு, பிரதான வினைச்சொல்லின் Base form (go) மட்டுமே வர வேண்டும் ('went' என இறந்தகாலத்தில் வரக்கூடாது).
  3. Incorrect: She would have done this tomorrow.
    Correct: She will have done this by tomorrow.
    விளக்கம்: எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவடையும் செயலைக் குறிப்பிட Standard Future Perfect Tense-ல் 'will have + V3' மட்டுமே பயன்படுத்த வேண்டும் ('would have' பயன்படுத்தக் கூடாது).
  4. Incorrect: I am doing this work since morning.
    Correct: I have been doing this work since morning.
    விளக்கம்: கடந்த காலத்தில் தொடங்கி இன்னமும் தொடரும் ஒரு செயலைக் குறிப்பிட Present Continuous (am doing) பயன்படுத்தக் கூடாது; Present Perfect Continuous (have been doing) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  5. Incorrect: They was going to market.
    Correct: They were going to market.
    விளக்கம்: They, We, You போன்ற பன்மை (Plural) எழுவாய்களுக்கு Past Continuous Tense-ல் 'was' பதிலாக 'were' பயன்படுத்த வேண்டும்.

Frequently Asked Questions (FAQ)

1. What are the four main sub-types of tenses in English?

The four main sub-types for each tense (Present, Past, Future) are Simple (தனிவினை), Continuous (தொடர்வினை), Perfect (முடிவுற்ற வினை), and Perfect Continuous (முடிவுற்ற தொடர்வினை).

ஆங்கிலத்தில் ஒவ்வொரு காலமும் Simple, Continuous, Perfect, மற்றும் Perfect Continuous என நான்கு துணை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

2. How do auxiliary verbs change with subjects in continuous tenses?

In Present Continuous, use am with 'I', is with singular subjects (He/She/It), and are with plural subjects (We/You/They). In Past Continuous, use was for singular and were for plural subjects.

நிகழ்காலத் தொடர்வினையில் I-க்கு 'am', ஒருமைக்கு 'is', பன்மைக்கு 'are' பயன்படுத்த வேண்டும். இறந்தகாலத் தொடர்வினையில் ஒருமைக்கு 'was', பன்மைக்கு 'were' பயன்படுத்த வேண்டும்.

3. What is the standard formula for Future Perfect Tense?

The standard formula for Future Perfect Tense is will have + Past Participle (V3) (e.g., I will have completed or I will have gone).

எதிர்கால முடிவுற்ற வினைக்கு (Future Perfect Tense) 'will have + V3' (Past Participle) என்ற அமைப்பைப் பயன்படுத்த வேண்டும்.

4. When should I use Present Perfect Continuous instead of Present Continuous?

Use Present Continuous for actions happening right now without mentioning duration (e.g., I am reading). Use Present Perfect Continuous when specifying how long the action has been going on (e.g., I have been reading for two hours).

தற்போது நடக்கும் செயலுக்கு Present Continuous-ம், குறிப்பிட்ட காலமாகத் தொடர்ந்து நடைபெறும் செயலுக்கு (நேரத்தைக் குறிப்பிடும் போது) Present Perfect Continuous-ம் பயன்படுத்த வேண்டும்.

Summary

இந்தப் பக்கத்தின் மூலம், நான்கு வகையான காலங்கள் "தனிவினை, தொடர்வினை, முடிவுற்ற வினை மற்றும் முடிவுற்ற தொடர்வினை" ஆங்கிலத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். மேலும் தமிழ் அர்த்தத்துடன் கூடிய எடுத்துக்காட்டுகள் மூலம், வெவ்வேறு காலங்கள் “நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம்" ஆங்கிலத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் எளிதாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.

Practice Tips

Keep practising by saying the example sentences out loud and using them in real-life situations. Your command over making sentences in different tense forms builds a solid base for more advanced English skills.

Do It Yourself

Try to make sentences using the verb make in different tenses:

Tense Form EnglishTamil
Present make உருவாக்கு
Past made உருவாக்கினேன்
Participle made உருவாக்கியிரு-
Continuous making உருவாக்கிக் கொண்டிரு-

People Also Learn

👉 Rules of tenses using the verb TAKE (எடு)

👉 Phrases using the verb 'GIVE - கொடு'

👉 At a travel agency conversation

👉 Common Interview Questions and Answers

👉 முயலும் ஆமையும் கதை in English