Regular Verbs

Regular verb என்பது கடந்தகாலம் மற்றும் past participle வடிவங்களை பொதுவாக -ed சேர்த்து உருவாக்கும் வினைச்சொல். உதாரணம்: walk – walked – walked.

A regular verb is a verb whose simple past and past participle are formed by adding the suffix "-ed" (e.g., "walk" becomes "walked"). But, there are some exceptions (e.g., "cry" becomes "cried").

🎧 Listening Practice

🎧 Regular Verbs - Part One
Present - Past - Past Participle - Continuous

Conjugation of regular verbs - சீரான வினைச்சொற்களின் வினைமாற்றம்

Regular verbs follow standard conjugation rules. For most regular verbs, both their simple past and past participle (i.e., the form used in perfect tenses and passive constructions) are formed by adding "-ed" to the end of the verb.

While the simple past and past participle of regular verbs are usually formed by adding the suffix "-ed,"; this can vary depending on the verb's ending.

Base form (simple present) ending Simple past and past participle ending Example
Ends in -e Add "d" move -> moved
like -> liked
Short verbs (ending in consonant-vowel-consonant) Double the last letter and add "-ed" grab -> grabbed

 

clap -> clapped

Long verbs with a stressed syllable at the end, and the last three letters follow a consonant-vowel-consonant pattern Double the last letter and add "-ed" regret -> regretted

 

debug -> debugged

Consonant + y Change y to i and add -ed cry -> cried
study -> studied
For verbs that end in a consonant-vowel-consonant pattern and the final letter is "w," "x," or "y," Don't double the last letter; add -ed fix -> fixed
For verbs that end in a consonant-vowel-consonant pattern and the final syllable is not stressed Don't double the final letter; add -ed open -> opened

Regular verbs - Part One

பொருள் Present Tense Past Tense Past Participle
ஏற்றுக்கொள் accept accepted accepted

I accept your apology.
நான் உங்கள் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன்.

நடி act acted acted

She acted well in the play.
அவர் நாடகத்தில் நன்றாக நடித்தார்.

சாதித்துக் காட்டு achieve achieved achieved

He achieved his goal.
அவர் தனது இலக்கை அடைந்தார்.

ரசி admire admired admired

I admire your hard work.
நான் உங்கள் கடின உழைப்பை ரசிக்கிறேன்.

ஆலோசனை கூறு advise advised advised

The doctor advised rest.
மருத்துவர் ஓய்வு எடுக்க அறிவுறுத்தினார்.

பாதி(ப்பு) affect affected affected

Stress can affect your health.
மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

சம்மதி agree agreed agreed

They agreed to the plan.
அவர்கள் திட்டத்திற்கு சம்மதித்தார்கள்.

பிரமிப்பு amaze amazed amazed

The magic show amazed the children.
மாயாஜால நிகழ்ச்சி குழந்தைகளை பிரமிக்க வைத்தது.

பதில் answer answered answered

She answered the question.
அவர் கேள்விக்கு பதில் அளித்தார்.

தோன்று appear appeared appeared

He appeared happy.
அவர் மகிழ்ச்சியாக தோன்றினார்.

ஏற்பாடு செய் arrange arranged arranged

We arranged a meeting.
நாங்கள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.

வந்து சேர் arrive arrived arrived

The train arrived on time.
ரயில் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது.

கேள் ask asked asked

He asked a question.
அவர் ஒரு கேள்வி கேட்டார்.

தாக்கு attack attacked attacked

The dog attacked the stranger.
நாய் அந்நியரை தாக்கியது.

(ரொட்டி) சுடு bake baked baked

He baked a cake.
அவர் ஒரு கேக் சுட்டார்.

நடந்து கொள் behave behaved behaved

The children behaved well.
குழந்தைகள் நன்றாக நடந்து கொண்டனர்.

நம்பு believe believed believed

I believe you.
நான் உங்களை நம்புகிறேன்.

சேர்ந்த belong belonged belonged

This bag belongs to me.
இந்த பை எனக்கு சொந்தமானது.

பழித்தல் blame blamed blamed

Don't blame others.
பிறரை குறை கூறாதே.

கடன் வாங்கு borrow borrowed borrowed

He borrowed a pen.
அவர் ஒரு பேனாவைக் கடனாக வாங்கினார்.

தொந்தரவு செய் bother bothered bothered

Sorry to bother you.
உங்களுக்கு தொந்தரவு கொடுத்ததற்கு மன்னிக்கவும்.

கூப்பிடு call called called

She called her friend.
அவர் தனது நண்பரை அழைத்தார்.

ரத்து செய் cancel canceled canceled

They canceled the meeting.
அவர்கள் கூட்டத்தை ரத்து செய்தார்கள்.

தூக்கு carry carried carried

He carried the box.
அவர் பெட்டியை தூக்கிச் சென்றார்.

காரணம் cause caused caused

Smoking can cause cancer.
புகைபிடிப்பு புற்றுநோய்க்கு காரணமாகலாம்.

கொண்டாடு celebrate celebrated celebrated

We celebrated his birthday.
நாங்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடினோம்.

சுத்தம் செய் clean cleaned cleaned

She cleaned the room.
அவர் அறையை சுத்தம் செய்தார்.

தெளிவாக clear cleared cleared

The sky cleared after rain.
மழைக்குப் பிறகு வானம் தெளிவானது.

ஏறு climb climbed climbed

He climbed the hill.
அவர் மலையை ஏறினார்.

மூடு, நெருக்கம் close closed closed

Please close the door.
தயவுசெய்து கதவை மூடுங்கள்.

ஓப்பிடு compare compared compared

Don't compare yourself with others.
உங்களை பிறருடன் ஒப்பிடாதீர்கள்.

போட்டியிடு compete competed competed

Many teams competed in the match.
பல அணிகள் போட்டியில் பங்கேற்றன.

முடி complete completed completed

I completed my homework.
நான் என் பாடத்தை முடித்தேன்.

கொண்டிரு contain contained contained

The box contains books.
பெட்டியில் புத்தகங்கள் உள்ளன.

தொடர் continue continued continued

He continued his work.
அவர் தனது வேலையை தொடர்ந்தார்.

சமை cook cooked cooked

She cooked rice.
அவர் சோறு சமைத்தார்.

சரி செய் correct corrected corrected

The teacher corrected the mistakes.
ஆசிரியர் தவறுகளை திருத்தினார்.

இருமு cough coughed coughed

He coughed loudly.
அவர் சத்தமாக இருமினார்.

எண்ணு count counted counted

She counted the money.
அவர் பணத்தை எண்ணினார்.

உருவாக்கு create created created

They created a new project.
அவர்கள் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கினார்கள்.

சபி curse cursed cursed

He cursed the thief.
அவர் திருடனை சபித்தார்.

மாற்று change changed changed

She changed her dress.
அவர் தனது உடையை மாற்றினார்.

அரட்டை chat chatted chatted

We chatted for an hour.
நாங்கள் ஒரு மணிநேரம் அரட்டை அடித்தோம்.

சரிபார் check checked checked

Please check your answers.
தயவுசெய்து உங்கள் விடைகளை சரிபார்க்கவும்.

முடிவு எடு decide decided decided

He decided to go.
அவர் செல்ல முடிவு செய்தார்.

வழங்கு deliver delivered delivered

The postman delivered the letter.
அஞ்சல்காரர் கடிதத்தை வழங்கினார்.

சார்ந்திரு depend depended depended

It depends on you.
அது உங்களை பொறுத்தது.

விவரி describe described described

He described the scene.
அவர் காட்சியை விவரித்தார்.

வடிவமை design designed designed

She designed a logo.
அவர் ஒரு லோகோவை வடிவமைத்தார்.

அழி destroy destroyed destroyed

The fire destroyed the house.
தீ வீட்டை அழித்தது.

குறை decrease decreased decreased

The price decreased last month.
விலை கடந்த மாதம் குறைந்தது.

கருத்து வேறுபடு disagree disagreed disagreed

I disagree with you.
நான் உங்களுடன் உடன்படவில்லை.

கண்டுபிடி discover discovered discovered

They discovered a new planet.
அவர்கள் ஒரு புதிய கோளை கண்டுபிடித்தார்கள்.

விவாதி discuss discussed discussed

We discussed the plan.
நாங்கள் திட்டத்தை விவாதித்தோம்.

நீக்கு eliminate eliminated eliminated

The team eliminated errors.
அணி பிழைகளை நீக்கியது.

முடி end ended ended

The meeting ended at 5 PM.
கூட்டம் மாலை 5 மணிக்கு முடிந்தது.

அனுபவி enjoy enjoyed enjoyed

We enjoyed the movie.
நாங்கள் படத்தை ரசித்தோம்.

மகிழ்வி entertain entertained entertained

The clown entertained the kids.
நகைச்சுவை நடிகர் குழந்தைகளை மகிழ்வித்தார்.

மன்னி excuse excused excused

He excused himself.
அவர் தனக்குத்தானே மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

பயிற்சி exercise exercised exercised

She exercises every morning.
அவர் ஒவ்வொரு காலையும் பயிற்சி செய்கிறார்.

எதிர்பார் expect expected expected

I expect good results.
நான் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கிறேன்.

நிரப்பு fill filled filled

He filled the glass with water.
அவர் கிளாஸில் தண்ணீரை நிரப்பினார்.

சரிசெய் fix fixed fixed

They fixed the car.
அவர்கள் காரை சரிசெய்தார்கள்.

பின்பற்று follow followed followed

Students follow the rules.
மாணவர்கள் விதிகளை பின்பற்றுகிறார்கள்.

வறு fry fried fried

She fried the potatoes.
அவர் உருளைக்கிழங்கை வறுத்தார்.

Regular Verbs - Part Two

🎧 Regular Verbs - Part Two
Present - Past - Past Participle - Continuous

பொருள் Present Tense Past Tense Past Participle
வாழ்த்து greet greeted greeted

He greeted the guests.
அவர் விருந்தினர்களை வரவேற்றார்.

யூகி guess guessed guessed

I guessed the answer.
நான் விடையை யூகித்தேன்.

வாழ்க hail hailed hailed

People hailed the hero.
மக்கள் வீரரை வாழ்த்தினார்கள்.

கையாளவும் handle handled handled

She handled the situation well.
அவர் சூழ்நிலையை நன்றாக கையாண்டார்.

நடக்கும் happen happened happened

What happened yesterday?
நேற்று என்ன நடந்தது?

வெறு hate hated hated

I hate lying.
நான் பொய் சொல்வதை வெறுக்கிறேன்.

உதவு help helped helped

He helped me a lot.
அவர் எனக்கு நிறைய உதவினார்.

நம்பு hope hoped hoped

We hoped for rain.
நாங்கள் மழையை எதிர்பார்த்தோம்.

வேட்டையாடு hunt hunted hunted

They hunted in the forest.
அவர்கள் காட்டில் வேட்டையாடினார்கள்.

அடையாளம் காண் identify identified identified

Police identified the suspect.
காவல்துறை சந்தேக நபரை அடையாளம் கண்டது.

புறக்கணி ignore ignored ignored

Don't ignore warnings.
எச்சரிக்கைகளை புறக்கணிக்காதீர்கள்.

கற்பனைசெய் imagine imagined imagined

Can you imagine life without phones?
போன் இல்லாத வாழ்க்கையை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

ஈர்த்தல் impress impressed impressed

His speech impressed everyone.
அவரது பேச்சு அனைவரையும் ஈர்த்தது.

மேம்படுத்து improve improved improved

She improved her English.
அவர் தனது ஆங்கிலத்தை மேம்படுத்தினார்.

உள்ளடக்கு include included included

The price includes tax.
விலையில் வரி அடங்கும்.

அதிகப்படுத்து increase increased increased

They increased the salary.
அவர்கள் ஊதியத்தை உயர்த்தினார்கள்.

நேர்காணல் interview interviewed interviewed

He interviewed five candidates.
அவர் ஐந்து வேட்பாளர்களை நேர்காணல் செய்தார்.

அறிமுகப்படுத்து introduce introduced introduced

She introduced her friend.
அவர் தனது நண்பரை அறிமுகப்படுத்தினார்.

அழை invite invited invited

We invited our relatives.
நாங்கள் எங்கள் உறவினர்களை அழைத்தோம்.

சேர் join joined joined

He joined the company.
அவர் நிறுவனத்தில் சேர்ந்தார்.

குதி jump jumped jumped

The child jumped over the fence.
குழந்தை வேலியை தாண்டி குதித்தது.

தட்டு knock knocked knocked

Someone knocked at the door.
யாரோ கதவை தட்டினார்கள்.

கற்க learn learned learned

I learned a new word.
நான் ஒரு புதிய வார்த்தையை கற்றுக்கொண்டேன்.

விரும்பு like liked liked

She likes coffee.
அவருக்கு காபி பிடிக்கும்.

கவனி listen listened listened

He listened to music.
அவர் இசையை கேட்டார்.

இடத்தைக் கண்டுபிடி locate located located

They located the shop easily.
அவர்கள் கடை எளிதாக கண்டுபிடித்தார்கள்.

பார் look looked looked

She looked at the photo.
அவர் புகைப்படத்தை பார்த்தார்.

அள measure measured measured

He measured the room.
அவர் அறையை அளந்தார்.

குறிப்பிடு mention mentioned mentioned

She mentioned your name.
அவர் உங்கள் பெயரை குறிப்பிட்டார்.

நகர்(த்து) move moved moved

They moved to a new house.
அவர்கள் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தார்கள்.

தேவை need needed needed

I need your help.
எனக்கு உங்கள் உதவி தேவை.

ஏற்பாடு organize organized organized

We organized an event.
நாங்கள் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தோம்.

மன்னி pardon pardoned pardoned

He pardoned the mistake.
அவர் தவறை மன்னித்தார்.

கலந்துகொள் participate participated participated

Many students participated.
பல மாணவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்த்து perform performed performed

The artist performed on the stage.
கலைஞர் மேடையில் நிகழ்த்தினார்.

தேர்ந்தெடு pick picked picked

She picked a red dress.
அவர் சிவப்பு உடையை தேர்ந்தெடுத்தார்.

கணித்துக்கூறு predict predicted predicted

Experts predicted rain.
நிபுணர்கள் மழையை கணித்தனர்.

தேர்வு செய் prefer preferred preferred

I prefer tea to coffee.
எனக்கு காபியை விட டீ பிடிக்கும்.

வழங்கு present presented presented

He presented his project.
அவர் தனது திட்டத்தை வழங்கினார்.

பாதுகாப்பு protect protected protected

Trees protect us from heat.
மரங்கள் நம்மை வெப்பத்திலிருந்து பாதுகாக்கின்றன.

வழங்கு provide provided provided

The school provides books for students.
பள்ளி, மாணவர்களுக்குப் புத்தகங்களை வழங்குகிறது..

வாங்கு purchase purchased purchased

He purchased a phone.
அவர் ஒரு போனை வாங்கினார்.

தள்ளு push pushed pushed

Don't push others.
பிறரை தள்ளாதீர்கள்.

பெற்றுக்கொள் receive received received

I received your message.
நான் உங்கள் செய்தியை பெற்றுக்கொண்டேன்.

ஓய்வெடு relax relaxed relaxed

We relaxed at home.
நாங்கள் வீட்டில் ஓய்வெடுத்தோம்.

விடுவி release released released

The company released a new app.
நிறுவனம் ஒரு புதிய ஆப்பை வெளியிட்டது.

திரும்பசெய் repeat repeated repeated

Please repeat the sentence.
தயவுசெய்து வாக்கியத்தை மீண்டும் சொல்லுங்கள்.

திருப்பியனுப்பு return returned returned

He returned the book.
அவர் புத்தகத்தை திருப்பி கொடுத்தார்.

சேமி save saved saved

She saved money for travel.
அவர் பயணத்திற்காக பணத்தை சேமித்தார்.

பயமுறுத்து scare scared scared

The dog scared the child.
நாய் குழந்தையை பயமுறுத்தியது.

கத்து shout shouted shouted

He shouted loudly.
அவன் உரத்த குரலில் கத்தினான்.

தீர் solve solved solved

She solved the problem.
அவள் பிரச்சனையைத் தீர்த்தாள்.

அழுத்து stress stressed stressed

I stressed about the exam.
நான் தேர்வைப் பற்றி கவலைப்பட்டேன்.

படி study studied studied

They studied English yesterday.
அவர்கள் நேற்று ஆங்கிலம் படித்தார்கள்.

பரிந்துரை suggest suggested suggested

He suggested a good book.
அவன் ஒரு நல்ல புத்தகத்தைப் பரிந்துரைத்தான்.

ஆச்சரியம் surprise surprised surprised

The news surprised me.
அந்த செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது.

பேசு talk talked talked

We talked for an hour.
நாங்கள் ஒரு மணி நேரம் பேசினோம்.

பயணம்செய் travel traveled traveled

She traveled to Chennai last week.
அவள் கடந்த வாரம் சென்னைக்குப் பயணம் செய்தாள்.

மாறுபடு vary varied varied

Prices varied from shop to shop.
விலைகள் கடைக்குக் கடை மாறுபட்டன.

நட walk walked walked

He walked to school.
அவன் பள்ளிக்கு நடந்து சென்றான்.

விரும்பு want wanted wanted

I wanted some water.
எனக்குத் தண்ணீர் வேண்டும் என்று இருந்தது.

எச்சரி warn warned warned

The teacher warned the students.
ஆசிரியர் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

துவை wash washed washed

She washed her hands.
அவள் தன் கைகளைக் கழுவினாள்.

கவனி watch watched watched

We watched a movie last night.
நாங்கள் நேற்று இரவு ஒரு படம் பார்த்தோம்.

வரவேற்பு welcome welcomed welcomed

They welcomed the guests warmly.
அவர்கள் விருந்தினர்களைச் சூடாக வரவேற்றார்கள்.

வேலைசெய் work worked worked

He worked late yesterday.
அவன் நேற்று தாமதமாக வேலை செய்தான்.

கவலை worry worried worried

Don’t worry about small things.
சின்ன விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

Common Mistakes

FAQ

Summary (English + Tamil explanation):

You have now learned many regular verbs in present, past and past participle forms. And links are given to the tenses and phrases pages with examples for most commonly used verbs. Practising these verbs will help you become more fluent and confident when speaking English.

நீங்கள் இப்போது நிகழ்காலம், கடந்த காலம் மற்றும் முடிவுற்ற வினையெச்சம் கால வடிவங்களில் பல வினைச்சொற்களைக் கற்றுக்கொண்டீர்கள். இந்த வினைச்சொற்களைப் பயிற்சி செய்வது ஆங்கிலம் பேசும்போது நீங்கள் சரளமாகவும் நம்பிக்கையுடனும் இருக்க உதவும்.
துணை வினைச்சொற்களைப் பயன்படுத்தி முடிவுற்ற வினையெச்சம் மற்றும் தொடர் வினையெச்சங்களை எவ்வாறு முற்றுப்பெறச் செய்வது என்பதைத் தொிந்து கொள்ள Auxiliary verbs - துணை வினைச்சொற்கள் பக்கத்தைப் படிக்கவும்.

Practice tips

Keep practising by saying the regular verbs in different tenses out loud and using them in real life situations. Your command over regular verbs forms a solid base for more advanced English skills.

Do it yourself

Try to make sentences using the following verbs:

People also learn

👉 Learn tenses with simple examples - 'DO'

👉 Common Phrases using the verb 'COME'