|
Inter viewer
|
A recent survey shows that there are reasons why teen agers behave badly. This study suggests that teen agers need to sleep more. About 65 percent of the parents, say their teen agers are bad tempered, uncommunicative and lazy. The report also shows that most teen agers are obsessed with their friends. They spend more time chatting online or playing computer games than doing home work. Most parents also say their teen age children are selfish and unhelpful. Only few of them help with house works at all. Your comments ------- Malaimathi.
|
|
பதின்ம வயதினர் ஏன் மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு காரணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு காட்டுகிது. இந்த ஆய்வு பதின்ம வயதினர் அதிகம் தூங்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. சுமார் 65 சதவிகிதப் பெற்றோர்கள் தங்கள் பதின்ம வயதினர் அதிக கோபமுடைய கலகலப்பாக வெளிப்படையாக பேசாத சோம்பேறிகள் எனக் கூறினர். பெரும்பாலான பதின்ம வயதினர் தங்கள் நண்பர்களுடன் வெறித்தனமாக உள்ளனர் என மேலும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அவர்கள் வீட்டு வேலை செய்வதைவிட அதிக நேரம் இணையத்தில் அரட்டை அடிப்பது, கணினியில் விளையாடுவதில் செலவிடுகின்றனர். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய பதின்ம வயது பிள்ளைகள் சுயநலவாதிகள், உதவாதவர்கள் எனக் கூறுகின்றனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வீட்டு வேலைகளில் உதவி செய்கின்றனர். உங்களுடைய கருத்துக்கள் ---- மாலைமதி.
|
|
Malai mathi
|
Why are people so negative about teenagers? Most of us are adorable, cheerful, very hard working, interesting, bribe, generous, loyal, helpful and very good cooks. Oh and very modest.
|
|
பதின்ம வயதினரைப் பற்றி மக்கள் ஏன் எதிர்மறையாக (நினைக்கிறார்கள்)? எங்களில் பெரும்பாலோர் அபிமானத்துக்குரிய, மகிழ்ச்சியான, கடினமாக உழைக்கின்ற, சுவராஸ்யமான,லஞ்சம், தாராளகுணமுள்ள, விசுவாசமுள்ள, உதவி செய்பவர்கள். மேலும் நல்ல சமையல்காரர்கள். ஓ மேலும் மிகவும் பணிவானவர்கள்.
|
|
Inter viewer
|
Bala
|
|
Bala
|
The most important thing in my life is not my fun, it is my parents. We love each other. We don’t argue or fight. We go to the park after school. We sit under a tree, eat ice creams and talk about guys. We like cooking and camping not just texting and computer games. I don’t have time to read much. But I play the guitar and sing. I am not a bad tempered monster. I usually apologize when I am wrong and I like spending time with grandparents.
|
|
எனது வாழ்க்கையின் முக்கியமான விசயம் எனது பெற்றோரின் மகிழ்ச்சி தான். என்னுடையதல்ல. நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். நாங்கள் தர்க்கம் பண்ணவோ சண்டை போடவோ மாட்டோம். பள்ளி முடிந்ததும் நாங்கள் பூங்காவிற்கு செல்கிறோம். மரத்தடியில் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுகிறோம். தோழர்களைப் பற்றி பேசுகிறோம். குறுஞ்செய்தி அனுப்புதல், கணினி விளையாட்டு விளையாடுவது மட்டுமின்றி சமைப்பது, முகாமிடுவதையும் விரும்புகிறோம். எனக்கு நிறைய படிக்க நேரம் இல்லை. ஆனால் நான் கிட்டார் வாசிப்பேன். பாடுவேன். நான் கெட்ட குணமுள்ள அரக்கன் அல்ல. தவறு செய்யும் பொழுது பொதுவாக நான் மன்னிப்புக் கேட்பேன். மற்றும் எனது தாத்தா பாட்டியுடன் நேரம் செலவிடுவதை விரும்புகிறேன்.
|
|
Inter viewer
|
Suja
|
|
Suja
|
Teen agers are definitely not lazy. I get up at 6.30 am every school day. And I work hard whole day. I never make plans to meet friends in the evening that’s when I do my home work. I think I need about nine and half hours sleep at night. But I usually get only seven hours. So I’m sometimes a big grumpy like my parents.
|
|
பதின்ம வயதினர் நிச்சயமாக சோம்பேறிகள் இல்லை. ஒவ்வொரு பள்ளி நாளிலும் நான் 6.30 மணிக்கு எழுகிறேன். நான் நாள் முழுவதும் கடினமாக உழைக்கிறேன். நான் வீட்டுப்பாடம் செய்யும்பொழுது மாலை நேரங்களில் நண்பர்களை சந்திக்க ஒருபோதும் திட்டமிடுவதில்லை. எனக்கு ஒன்பதரை மணி நேரம் தூக்கம் தேவை என நினைக்கிறேன். ஆனால் பொதுவாக எனக்கு ஏழு மணி நேரம் தான் கிடைக்கிறது. எனவே நான் சில சமயங்களில் எனது பெற்றோரைப் போல் பெரிய எரிச்சல்காரன்.
|
|
Inter viewer
|
Kumari
|
|
Kumari
|
I hate stereotypes. Not all teen agers are the same. Some of us are lazy. Some of us aren’t. Some of us like chatting online or playing computer games. But some of us prefer to play foot ball or golf from one. Ok, some of the things people say about teen agers are true. For example, music is really, really important to us. We like different kinds of music. We are individuals.
|
|
நான் தவறான கருத்துகளை வெறுக்கிறேன். எல்லா பதின்ம வயதினரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. எங்களில் சிலர் சோம்பேறிகள். எங்களில் சிலர் (சோம்பேறிகள்) அல்ல. எங்களில் சிலர் இணையத்தில் அரட்டை அடிப்பது, கணினியில் விளையாட்டு விளையாடுவதை விரும்புகின்றனர். ஆனால் எங்களில் சிலர் கால்பந்து விளையாடுவது அல்லது கோல்ப் விளையாடுவதை விரும்புகிறோம். சரி. பதின்ம வயதினரைப் பற்றி மக்கள் சொல்லும் ஒரு சில விசயங்கள் சரி தான். உதாரணமாக இசை எங்களுக்கு உண்மையாகவே முக்கியமானது. நாங்கள் வெவ்வேறு வகையான இசையை விரும்புகிறோம். நாங்கள் தனி நபர்கள்.
|
|
Inter viewer
|
Malavan
|
|
Malavan
|
I don’t think I am selfish. I care about other people. I am interested in the world. I want to travel and learn about other cultures. Then I want to get a job in a developing country. Most of my friends are like me. Where did you find your information. It’s wrong.
|
|
நான் சுயநலவாதி என்று நான் நினைக்கவில்லை. நான் மற்றவர்களை கவனித்துக் கொள்கிறேன். எனக்கு இந்த உலகத்தின் மீது விருப்பம் உள்ளது. நான் பயணம் செய்து மற்ற கலாச்சாரத்தைப் பற்றி அறிய விரும்புகிறேன். அடுத்து நான் வளரும் நாட்டில் வேலை பெற விரும்புகிறேன். பெரும்பாலான எனது நண்பர்கள் என்னைப் போன்றவர்கள். உங்கள் தகவலை எங்கு கண்டீர்கள். அது தவறானது.
|