Pronouns
மாற்றுப்பெயா்கள்
2.1.1 Personal Pronoun - ஒருவர் அல்லது ஒன்றின் மாற்றுப்பெயர்
- You- நீ, நீங்கள், உனக்கு, உங்களுக்கு
- They - அவர்கள், அவைகள்
- I - நான்
- We - நாம், நாங்கள்
- He - அவன், அவர்
- She - அவள்
- It - அது, அந்த
- us - எங்களை, எங்களுக்கு
- him - அவனை, அவனுக்கு
- her - அவளை, அவளுக்கு
- me - எனக்கு, என்னை
- this - இது, இந்த
- that - அது, அந்த
- them - அவர்களை, அவைகளை
2.1.2 Demonstrative pronouns - சுட்டுப்பெயர்
- This - இது, இந்த
- That - அது, அந்த
- These - இவைகள், இவர்கள்
- Those -அவைகள், அவர்கள்
2.1.3 Interrogative pronouns - வினாச்சொல்
- Who - யார்?
- Whom - யாரை?
- Which - எது?
- What - என்ன?
- Whose - யாருடைய?
2.1.4 Relative pronouns - இனங்சுட்டுப்பெயர்
A word that refers to a previous noun in a sentence is called Relative Pronoun.
ஒரு வாக்கியத்தில் முன்னர் குறிப்பிடப் பட்டுள்ள பெயர்ச்சொல்லைச் சுட்டும் வார்த்தை (சொல்) இனஞ்சுட்டுப் பெயர் என்று அழைக்கப்படும்.
- Whichever - எதுவாயினும்
- Who - யார்
- Whoever - யாராயினும்
- Whatever - என்னவாயினும்
- Whomever - யாருக்காயினும்
- Whosever - யாருடையதாயினும்
- that - அது
- Which - எது
Example:
The lady who lives next door is a teacher.
பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒரு ஆசிரியர்.
இதில் who என்ற இனஞ்சுட்டுப் பெயர் lady என்ற பொதுவான பெயர்ச்சொல்லைக் (Common noun) குறிக்கிறது.
2.1.5 Indefinite Pronouns - பொதுநிலை சுட்டுப்பெயர்
Indefinite pronoun is a word that is not sure or clear about the persons or thing.
உறுதியில்லாத ஒன்றை, அல்லது நபர்களைக் குறிக்கும் சொல் பொதுநிலைச் சுட்டுப்பெயர் எனப்படும்.
- Some - சில,சிலர்,கொஞ்சம்
- Few - ஒரு சில
- None - ஒன்றுமில்லை, ஒருவருமில்லை
- Each - ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும்
- Every - எல்லோரையும், எல்லாவற்றையும்
- Anyone - யாராவது ஒருவர்
- Someone - யாரோ ஒருவர்
- Everyone - எல்லோரும்
- No one - ஒருவருமில்லை
- Anybody - யாராவது ஒருவர்
- Somebody - யாரோ ஒருவர்
- Everybody - எல்லோரும்
- Anything - ஏதேனும் ஒன்று, எதுவானாலும்
- Something - ஏதோ ஒன்று
- Everything - எல்லாம்
- Nothing - ஒன்றுமில்லை
Example:
Some of you come with me.
உங்களில் சிலர் என்னுடன் வாருங்கள்.
இதில் Some என்பது Indefinite pronoun
2.1.6 Reflexive Pronouns - தற்சுட்டுப்பெயர்
Reflexive Pronoun is a word that refers to a person who performs an action (Subject).
செயலைச் செய்பவரையே (பெயர்ச் சொல்லையே) குறிப்பிடும் சொல் தற்சுட்டுப்பெயர் எனப்படும்.
- Myself - நானே
- Yourself - நீயே, நீங்களே
- Himself - அவனே, அவனையே
- Herself - அவளே, அவளையே
- Itself - அதுவே, தானே, தானாகவே
- Yourselves - நீயே, நீங்களே, உனக்கே
- Ourselves - நாங்களே
- Themselves - அவர்களே, அவைகளே
Example:
I did this myself.
நானே இதை செய்தேன்.
இதில் myself என்பது Reflexive Pronoun of I
